second review completed

புக்கிட் சீடிம் தோட்டத் தமிழ்ப்பள்ளி

From Tamil Wiki
Revision as of 10:29, 9 December 2023 by Logamadevi (talk | contribs)
ஃப்வ்.png

புக்கிட் சீடிம் தோட்டத் தமிழ்ப்பள்ளி மலேசியாவில் கூலை பட்டணத்துக்கு அருகில் உள்ள தமிழ்ப்பள்ளி. 1946-ல் தொடங்கியது. கூலிம் பட்டணத்திலிருந்து 24 கிலோமீட்டர் தொலைவிலுள்ளது. புக்கிட் சீடிம் தோட்டத் தமிழ்ப்பள்ளி பகுதி உதவி பெறும் பள்ளி.

பள்ளி வரலாறு

புக்கிட் சீடிம் தோட்டத் தமிழ்ப்பள்ளி முதலில் பலகைக் கட்டடமாகக் குறைந்த வசதிகளோடு இருந்தது. முப்பத்தைந்து மாணவர்களுடன் இயங்கிய இப்பள்ளியின் முதல் தலைமையாசிரியர் குமரசாமி. 1970-ஆம் ஆண்டில் மாணவர் எண்ணிக்கை கூடியது. மார்ச் 1970-ல் தேசிய நில நிதிக் கூட்டுறவுச் சங்கம் அரசாங்க அனுமதியுடன் தனது சொந்த செலவில் இரண்டு மாடிக் கட்டடத்தை எழுப்பியது. இக்கட்டடம் அலுவலகம், தலைமையாசிரியர் அறை, ஆறு வகுப்பறைகள், கழிவறை, சமயலறை ஆகியவற்றைக் கொண்டிருந்தது. அப்போது புக்கிட் சீடிம் தோட்ட தேசிய மலாய் பள்ளியுடன் இணைந்து செயல்பட்டது.

இடமாற்றம்

1997-ல் புக்கிட் சீடிம் தோட்டத் தமிழ்ப்பள்ளி புதிய இடத்திற்கு இடம்மாறியது. இப்புதிய இடத்தை கெடா மாநில வளர்ச்சிக் கழகத்திடமிருந்து தேசிய நில நிதி கூட்டுறவுச் சங்கம் 69 ஆண்டுகளுக்குக் குத்தகை எடுத்தது. புக்கிட் சீடிம் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு அரசாங்கம் ஒரு மாடிக் கட்டடம் கட்டித் தந்தது. 2007-ல் இப்பள்ளியில் பாலர் பள்ளி தொடங்கப்பட்டது. சிற்றுண்டிச்சாலையும் அமைக்கப்பட்டது. அக்காலக்கட்டத்தில் புக்கிட் சீடிம் தோட்டத் தமிழ்ப்பள்ளி கிரேட் B பள்ளியாக உருமாறியது.

தற்போது குறைந்த மாணவர்களுடன் செயல்படும் இப்பள்ளிக்கு புக்கிட் சீடிம் தோட்டம், தாமான் சேனா, லபு பெசார் ஆகிய பகுதிகளிலிருந்து மாணவர்கள் வருகின்றனர்.

தலைமை ஆசிரியர்கள்
1 குமரசாமி 1946 – 1959
2 எ.முனுசாமி 1960 – 1971
3 என்.முனுசாமி 1971 – 1985
4 மாரியப்பன் 1986 – 1991
5 எஸ்.ஆறுமுகம் 1992 – 1999
6 ஆர்.சுப்ரமணியம் 1999 – 2003
7 யமுனா ராணி 2003 – 2009
8 ருமாவதி 2009 – 2010
9 இரவி 2010 – 2012
10 மாரி அச்சனன் 2012 – 2016
11 எஸ்.மலர்விழி 2016 – 2017
12 ஜி.நவமணி 2017 – 2019
13 பி.செல்வி 2019 – 2020
14 சி.சந்திரிகா 2020 - தற்போது வரை


✔ Second review completed


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.