பி.ஏ. கிருஷ்ணன்

From Tamil Wiki

This page is being created by User:Muth r

பி.ஏ. கிருஷ்ணன்
பி.ஏ. கிருஷ்ணன்

பி.ஏ. கிருஷ்ணன் (பக்ஷிராஜன் அனந்த கிருஷ்ணன்) (பிறப்பு: 1946 ) ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதும் தமிழ் எழுத்தாளர். ஓய்வுபெற்ற அரசு அதிகாரி. புலிநகக்கொன்றை, கலங்கிய நதி உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.

பிறப்பு, இளமை

பி.ஏ. கிருஷ்ணன் , 1946 ல் திருநெல்வேலி மாவட்டத்தின் நாங்குநேரி என்ற ஊரில் பிறந்தவர்.

பள்ளி கல்வியை மதுரை திரவியம் தாயுமானவர் (MDT) ஹிந்து உயர்நிலை பள்ளியில் படித்தார். சென்னை ப்ரெசிடெண்சி கல்லுரியில் இயற்பியல் பட்டப்படிப்பை முடித்திருக்கிறார்.

தனி வாழ்க்கை

இயற்பியல் ஆசிரியராக மதுரை திரவியம் தாயுமானவர் (MDT) ஹிந்து கல்லுரி, திருநெல்வேலியில் தனது  பணியை தொடங்கினார். இந்திய அரசாங்கத்தின் இலஞ்ச ஒழிப்புத் துறையில் நிர்வாக இயக்குனராக 30 ஆண்டுகள் பணியாற்றினார். பிறகு, ஒரு ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் பின்னர் ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் மூத்த இயக்குனராகவும் பணியாற்றினார்.

மனைவி ரேவதி டெல்லியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றியவர். இவர்களது ஒரே மகன் சித்தார்த் மனைவி வினிதா வுடன் அமெரிக்காவில் வசிக்கிறார். பி.ஏ. கிருஷ்ணன் மனைவியுடன் டெல்லியில் வசித்து வருகிறார்.

இலக்கியவாழ்க்கை

பி.ஏ. கிருஷ்ணனின் தந்தை கே.பக்ஷிராஜன் கம்பராமாயணத்தில் ஈடுபாடு கொண்டவர். பி.ஏ. கிருஷ்ணன் கம்பராமாயணம் மற்றும் தமிழ் இலக்கியங்களை தந்தை மூலம் கற்று மொழி புலமையை வளர்த்து கொண்டார்..   

பி.ஏ. கிருஷ்ணனின் முதல் நாவல் The Tiger Claw Tree ஆங்கிலத்தில் வெளியானது. பிறகு தமிழில் புலிநகக் கொன்றை என்ற பெயரில் பி.ஏ. கிருஷ்ணனின் மொழி பெயர்ப்பிலேயே காலச்சுவடு பதிப்பகத்தால் டிசம்பர் 2002 ம் ஆண்டு வெளிவந்தது.

பி.ஏ. கிருஷ்ணன்  இந்திய நாளிதழ்களிலும் இலக்கியப் பத்திரிக்கைகளிலும் கட்டுரை எழுதி வருகிறார். பின்னர் அந்த கட்டுரைகள் தொகுத்து நூல்களாக வெளீயிடப்பட்டுள்ளன. அவற்றுள் புகழ்பெற்றவை அக்கிரகாரத்தில் பெரியார், திரும்பிச் சென்ற தருணம் மற்றும் மேற்கத்திய ஓவியங்கள்.

படைப்புகள்

நாவல்கள்
  • புலிநகக் கொன்றை
  • கலங்கிய நதி
கட்டுரைத் தொகுப்புகள்
  • அக்கிரகாரத்தில் பெரியார்
  • திரும்பிச் சென்ற தருணம்
  • மேற்கத்திய ஓவியங்கள் -  தொகுப்பு 1
  • மேற்கத்திய ஓவியங்கள் -  தொகுப்பு 2
  • இந்தியாவும் உலகமும் - ஹிந்து நாளிதழில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு
  • அழியாத தடங்கல் (அச்சில் உள்ளது )
மொழிபெயர்ப்பு
  • டுப்லின் எழுச்சி - The Dublin Uprising

உசாத்துணை