பிலோ இருதயநாத்

From Tamil Wiki
Revision as of 10:26, 10 April 2022 by Ramya (talk | contribs) (Created page with "பிலோ இருதயநாத் (1916 - 1992) இந்தியாவில் உள்ள பல்வேறு ஆதிவாசிகளையும் நாடோடிகளையும் நேரில் சென்று சந்தித்து அவர்கள் வாழ்க்கை முறையை தமிழ் இலக்கியங்களுடன் ஒப்பிட்டு கட்டுரைகள் எழுதி...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

பிலோ இருதயநாத் (1916 - 1992) இந்தியாவில் உள்ள பல்வேறு ஆதிவாசிகளையும் நாடோடிகளையும் நேரில் சென்று சந்தித்து அவர்கள் வாழ்க்கை முறையை தமிழ் இலக்கியங்களுடன் ஒப்பிட்டு கட்டுரைகள் எழுதினார்.

வாழ்க்கைக் குறிப்பு

பிலோ இருதயநாத் மைசூரில் பிறந்து சென்னையில் வளர்ந்தவர். சென்னையில் தமிழ் ஆசிரியராக இருபத்தைந்து ஆண்டுகாலம் பணி செய்தார். இந்தியா முழுவதும் மிதிவண்டியில் சுற்றியலைந்தார்.

இலக்கிய வாழ்க்கை

இந்திய மானுடவியல் ஆய்வுகளின் முன்னோடி. தன் பயண அனுபவங்களையெல்லாம் தொகுத்து தமிழிலும் ஆங்கிலத்திலும் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட கட்டுரைகளை அறுபதிற்கும் மேற்பட்ட இதழ்களில் எழுதினார். இதை ‘மானிடவியல் ஆராய்ச்சி நூல்’ என்று அறிஞர்கள் கருதுகின்றனர். இருபத்தியொன்பது புத்தகங்களை எழுதினார். "ஆதிவாசிகளின் இதயவாசி” காடர்களைக் கண்ட விதம் என்ற கட்டுரை முக்கியமான படைப்பு.

விருதுகள்

  • 1960களில் தமிழக அரசின் நல்லாசிரியர் விருது
  • 1978ல் இந்திய அரசின் நல்லாசிரியர் விருது

மறைவு

பிலோ இருதயநாத் செப்டம்பர் 2, 1992இல் காலமானார்.

நூல் பட்டியல்

  • அறிவியல் பூங்கா - 1967 (இளங்கோ பதிப்பகம்)
  • ஆதிவாசிகள் - 1961 (கலைமகள் காரியாலயம்)
  • ஆதிவாசிகள் மறைந்த வரலாறு - 1977 (தமிழ் செல்வி நிலையம்)
  • இமயமலை வாசிகள் - 1967 (மல்லிகை பதிப்பகம்)
  • ஏழைகளின் குடும்பக்கலை - 1965 (அன்னை நிலையம்)
  • காட்டில் என் பிரயாணம் - 1967 (இளங்கோ பதிப்பகம்)
  • காட்டில் கண்ட மர்மம் - 1984 (வானதி பதிப்பகம்)
  • காட்டில் மலர்ந்த கதைகள் - 1984 (வானதி பதிப்பகம்)
  • காடு கொடுத்த ஏடு - 1965 (கலைமகள் காரியாலயம்)
  • குறிஞ்சியும் நெய்தலும் (தென்றல் நிலையம்)
  • கோயிலும் குடிகளும் (தென்றல் நிலையம்)
  • கோயிலைச் சார்ந்த குடிகள் (தென்றல் நிலையம்)
  • கேரளா ஆதிவாசிகள் - 1989 (வானதி பதிப்பகம்)
  • கொங்கு மலைவாசிகள் - 1966 (மல்லிகைப் பதிப்பகம்)
  • பழங்குடிகள் - 1978 (தமிழ் செல்வி நிலையம்)
  • மக்கள் வணங்கும் ஆலயம் - 1965 (அன்னை நிலையம்)
  • மேற்கு மலைவாசிகள் - 1979 (மல்லிகை பதிப்பகம்)
  • தமிழக ஊர்களின் தனிச்சிறப்பு (தென்றல் நிலையம்)
  • நீலகிரி படகர்கள் - 1965 (மல்லிகைப் பதிப்பகம்)
  • யார் இந்த நாடோடிகள் - 1985 (வானதி பதிப்பகம்)

உசாத்துணை