being created

பிரசண்டவிகடன் இதழ் தொகுப்பு

From Tamil Wiki
Revision as of 20:13, 1 December 2022 by ASN (talk | contribs) (Page created; Para Added, Image Added, Inter Link Created)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
பிரசண்ட விகடன் இதழ்த் தொகுப்பு - கலைஞன் பதிப்பக வெளியீடு

பிரசண்ட விகடன், 1936-ல் வெளிவந்த இலக்கிய இதழ். மாதம் இருமுறை இதழாக ஒவ்வொரு ஆங்கில மாதமும் 1 மற்றும் 15-ஆம் தேதிகளில் வெளிவந்தது. ஆனந்தபோதினி இதழின் வெளியீடான இவ்விதழின் ஆசிரியர் நாரண துரைக்கண்ணன். பிரசண்டவிகடனில் வெளியான சில படைப்புகளைத் தொகுத்து, ‘பிரசண்டவிகடன் இதழ் தொகுப்பு’ என்ற தலைப்பில்  கலைஞன் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

பதிப்பு, வெளியீடு

1936-ல், ஆனந்தபோதினி இதழின் வெளீயீடாக வெளிவந்த இலக்கிய இதழ் பிரசண்டவிகடன். இதன் ஆசிரியர், நாரண துரைக்கண்ணன். கதை, கட்டுரை, கவிதை, மொழிபெயர்ப்பு, உலகச் செய்திகள் போன்றவற்றிற்கு இவ்விதழ் இடமளித்தது. ஒவ்வொரு இதழிலும் தலையங்கம் இடம் பெற்றது. இவற்றிலிருந்து தேர்ந்தெடுத்த சில படைப்புகளை ‘பிரசண்டவிகடன் இதழ் தொகுப்பு’ என்ற தலைப்பில் இரண்டு பாகங்களாக கலைஞன் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. ப,முத்துக்குமாரசாமியுடன் இணைந்து வல்லிக்கண்ணன் இதனைத் தொகுத்துள்ளார். இதன் முதல் பதிப்பு 2003-ல் வெளியானது.

உள்ளடக்கம்


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.