being created

பா. ராகவன்

From Tamil Wiki
Revision as of 21:25, 9 May 2023 by Dr.P.Saravanan (talk | contribs) (பா. ராகவன்)

பா. ராகவன் (08.10.1971) தமிழ் எழுத்தாளர். பதிப்பாளராகவும் பத்திரிகை ஆசிரியராகவும் உள்ளார். ‘மெட்ராஸ் பேப்பர்’ என்ற இணைய வார இதழினை நடத்துகிறார். பல்வேறு வெகுஜன இதழ்களில் ஆசிரியராகவும் கிழக்கு பதிப்பகத்தில் பதிப்பாளராகவும் இருந்தவர். தன்னுடைய படைப்பிலக்கியத்திற்காக ‘பாரதிய பாஷா பரிஷத்’ விருதினைப் பெற்றவர். வெகுஜன வாசகரை ஈர்க்கும் வகையில் அபுனைவு நூல்களை எழுதுவதில் கைத்தேர்ந்தவர்.

பிறப்பு, கல்வி

பா. ராகவன் ஆர். பார்த்தசாரதி – ரமாமணி தம்பதியருக்கு 08.10.1971 ஆம் நாள் சென்னையில் பிறந்தார். பா. ராகவனின் தந்தை ஆர். பார்த்தசாரதி தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர். கல்வியாளர். அவர் ஆர்.பி. சாரதி என்ற பெயரில் சிறுகதைகள், கவிதைகள் எழுதியுள்ளார். மொழிபெயர்ப்பாளரும்கூட. ராமச்சந்திர குஹாவின் ‘India after Gandhi’, பாபர் நாமா, மகா வம்சம் ஆகியவை இவரது மொழிபெயர்ப்பில் வந்தவை.

பா. ராகவன் காஞ்சிபுரம் கிருஷ்ணா ஸ்கூல், கோவூர் பஞ்சாயத்துப் பள்ளி, கேளம்பாக்கம் அரசினர் உயர்நிலைப் பள்ளி, குரோம்பேட்டை அரசினர் உயர்நிலைப் பள்ளி எனத் தன் தந்தைக்குப் பணி மாறுதல்கள் ஏற்பட்டபோதெல்லாம் தன் குடும்பம் இடம் பெயர்ந்த இடங்களுக்கெல்லாம் சென்று பா. ராகவன் தனது பள்ளிப் படிப்பை நிறைவு செய்தார். பின்னர் சென்னை தரமணி மத்திய தொழில் நுட்பக் கல்லூரியில் இயந்திரவியல் பயின்றார். பின்னர் பா. ராகவனின் குடும்பம் சென்னையை நிரந்தர வசிப்பிடமாக்கிக் கொண்டது.

தனிவாழ்க்கை

பா. ராகவனின் மனைவி பெயர் ஆர். ரம்யா. மகள் பெயர் ஆர். பாரதி.     

இலக்கிய வாழ்க்கை

பா. ராகவனின் முதல் படைப்பான குழந்தைப்பாடல் கோகுலம் சிறுவர் இதழில் வெளிவந்தது.

இலக்கிய இடம்

நூல்கள்

விருதுகள்

உசாத்துணை



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.