being created

பாலைவன லாந்தர்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 2: Line 2:
{{being created}}
{{being created}}

பாலைவன லாந்தர் (பிறப்பு ஆகஸ்ட் 18, 1979) தமிழ் கவிஞர் மற்றும் எழுத்தாளர். தற்போது சென்னையில் வசிக்கிறார்.
== இளமை/ கல்வி ==
பாலைவன லாந்தரின் இயற்பெயர் நலிஜத். இவர் [[Tel:18081979|18.08.1979]]- அன்று தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் பிறந்தார். இவருடைய பெற்றோர் காதர் மெய்தீன் மற்றும் செய்து அரஃபா.  இரட்டைச் சகோதரி சாரா ( ஜபினத்) அவர்களும் சமகால எழுத்தாளராக அறியப்படுகிறார்.
பாலைவன லாந்தரின் கல்வி வாழ்க்கை முழுவதும் சென்னையின் வட பகுதி பிராட்வேயில் உள்ள மண்ணடியில் அமைந்துள்ள, மருத்துவர் இரத்தினவேலு சுப்பிரமணியம் பள்ளியில் இருந்தது.  பள்ளி படிப்போடு முடித்துக் கொண்டார். கல்லூரி செல்லவில்லை.
== தனிவாழ்க்கை ==
பாலைவன லாந்தருக்கு 1997- ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்  ஜாபர் சாதிக் அவர்களோடு திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள். மகள் ரபியுள் அப்ஃராஹ். மகன் அப்துல் ரஜ்ஜாக் அஷ்ஃபாக். சில வருடங்கள் சவுதி அரேபியாவில் வசித்த    பாலைவன லாந்தர், தற்போது சென்னையில் இருக்கிறார்
== இலக்கிய செயல்பாடு ==
பாலைவன லாந்தர், 2010- ஆம் ஆண்டு  கவிதைகள் எழுதத் தொடங்கினார். இவர் கவிதை, முதலில் 2015- ஆம் ஆண்டு கல்கி இதழில் வெளியானது. 2016- ஆம் ஆண்டு "உப்பு வயலெங்கிலும் கல்மீன்கள்" என்ற   முதல் கவிதைத் தொகுப்பு வெளியானது.  சிறுகதைகளும் கட்டுரைகளும் தொடர்ச்சியாக எழுதி வருகிறார்.
== இலக்கிய இடம் ==
பாலைவன லாந்தரின் கவிதைகள் பெரும்பாலும் சமூக அநீதிக்கு எதிராகவும் உளவியல் கோட்பாடுகளை கிளர்த்துவதாகவும் உள்ளது.
"விமர்சிப்பது அல்லது ஒப்புவது என்ற அடையாளங்களை மீறி என்னைப் பெண்ணாய் உணரச் செய்யும் அனைத்து அடிமைக் கருத்தியல்களுடன் எதிர்வினை செய்வேன் என்கிற போக்கு நவீனப் பெண்ணியத்தில் அதிகம் பேருக்கு வாய்க்காத ஒரு சிந்தனைமுறையாகவும் பாலைவன லாந்தருக்குக் கவிதையாகவும் இருக்கிறது. அதிகபட்ச ஒழுங்கியலாக வரலாற்றில் கட்டமைக்கப்பட்ட ஒன்றை அவிழ்த்து நிராகரிக்கும் கவிதைகளே இவரின்  தனிச் சிறப்பு" என்று பாலைவன லாந்தரின் கவிதைகள் குறித்து,  கவிஞர் யவனிகா ஸ்ரீராம் குறிப்பிடுகிறார்.
மொழிப் பரப்பில் பதிந்த பிம்பங்களை காணும் கணங்களை அழிப்பாக்கம் செய்யும் கவிதை விநோதம் பாவன லாந்தரின் கவிதையாக்கம். ஒவ்வொரு கவிதையொடலுக்குள்ளும் அடுக்கு அடுக்காக நுண்-கவிதையாடல்களின் மூலம் கட்டமைக்கப்படுகிறது கவிதையின் புலம் ஒற்றைகுறிப்பீட்டில் அடங்கிவிடாது பன் –முனையுடைய பிரதியாக   நீட்சியடைந்து கொண்டே செல்கிறது என விமர்சகர் -எஸ். சண்முகம் குறிப்பிடுகிறார்.
== நூல்கள் ==
கவிதைத் தொகுப்புகள்
* உப்பு வயலெங்கிலும் கல்மீன்கள் - 2016
* லாடம் -  2018
* ஓநாய் - 2021
== பிற செயல்பாடுகள் ==
பாலைவன லாந்தர் சமூகநல செயல்பாடுகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். பெரு நோய்த்தொற்று கொரானா காலத்தில் இவர் தயாரித்த "ஊரடங்கு" என்ற விழிப்புணர்வு குறும்படம்   கவனம் பெற்றது
பாலைவன லாந்தர்,  ஜெர்மனியில் வாழும் நிம்மி சிவா என்னும் எழுத்தாளரோடு இணைந்து உலகெங்கிலும் உள்ள இருபது பெண் எழுத்தாளர்களை ஒருங்கிணைத்து இவர் எழுதிய "மனமே யுத்தம் செய்" என்னும்  நெடு நீள விழிப்புணர்வு கவிதையை வாசிக்கச் செய்தார்.
== உசாத்துணை ==
ஊரடங்கு" விழிப்புணர்வு குறும்படம்;
<nowiki>https://youtu.be/_YWvkhR-HK0</nowiki>
"மனமே யுத்தம் செய்" கவிதை வாசிப்பு ;
<nowiki>https://youtu.be/nTEWJKWhUDQ</nowiki>
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 13:07, 25 May 2022

This page is being created by Ka. Siva

🔏Being Created

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.

பாலைவன லாந்தர் (பிறப்பு ஆகஸ்ட் 18, 1979) தமிழ் கவிஞர் மற்றும் எழுத்தாளர். தற்போது சென்னையில் வசிக்கிறார்.

இளமை/ கல்வி

பாலைவன லாந்தரின் இயற்பெயர் நலிஜத். இவர் [[1]]- அன்று தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் பிறந்தார். இவருடைய பெற்றோர் காதர் மெய்தீன் மற்றும் செய்து அரஃபா.  இரட்டைச் சகோதரி சாரா ( ஜபினத்) அவர்களும் சமகால எழுத்தாளராக அறியப்படுகிறார்.

பாலைவன லாந்தரின் கல்வி வாழ்க்கை முழுவதும் சென்னையின் வட பகுதி பிராட்வேயில் உள்ள மண்ணடியில் அமைந்துள்ள, மருத்துவர் இரத்தினவேலு சுப்பிரமணியம் பள்ளியில் இருந்தது.  பள்ளி படிப்போடு முடித்துக் கொண்டார். கல்லூரி செல்லவில்லை.

தனிவாழ்க்கை

பாலைவன லாந்தருக்கு 1997- ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்  ஜாபர் சாதிக் அவர்களோடு திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள். மகள் ரபியுள் அப்ஃராஹ். மகன் அப்துல் ரஜ்ஜாக் அஷ்ஃபாக். சில வருடங்கள் சவுதி அரேபியாவில் வசித்த    பாலைவன லாந்தர், தற்போது சென்னையில் இருக்கிறார்

இலக்கிய செயல்பாடு

பாலைவன லாந்தர், 2010- ஆம் ஆண்டு  கவிதைகள் எழுதத் தொடங்கினார். இவர் கவிதை, முதலில் 2015- ஆம் ஆண்டு கல்கி இதழில் வெளியானது. 2016- ஆம் ஆண்டு "உப்பு வயலெங்கிலும் கல்மீன்கள்" என்ற   முதல் கவிதைத் தொகுப்பு வெளியானது.  சிறுகதைகளும் கட்டுரைகளும் தொடர்ச்சியாக எழுதி வருகிறார்.

இலக்கிய இடம்

பாலைவன லாந்தரின் கவிதைகள் பெரும்பாலும் சமூக அநீதிக்கு எதிராகவும் உளவியல் கோட்பாடுகளை கிளர்த்துவதாகவும் உள்ளது.

"விமர்சிப்பது அல்லது ஒப்புவது என்ற அடையாளங்களை மீறி என்னைப் பெண்ணாய் உணரச் செய்யும் அனைத்து அடிமைக் கருத்தியல்களுடன் எதிர்வினை செய்வேன் என்கிற போக்கு நவீனப் பெண்ணியத்தில் அதிகம் பேருக்கு வாய்க்காத ஒரு சிந்தனைமுறையாகவும் பாலைவன லாந்தருக்குக் கவிதையாகவும் இருக்கிறது. அதிகபட்ச ஒழுங்கியலாக வரலாற்றில் கட்டமைக்கப்பட்ட ஒன்றை அவிழ்த்து நிராகரிக்கும் கவிதைகளே இவரின்  தனிச் சிறப்பு" என்று பாலைவன லாந்தரின் கவிதைகள் குறித்து,  கவிஞர் யவனிகா ஸ்ரீராம் குறிப்பிடுகிறார்.

மொழிப் பரப்பில் பதிந்த பிம்பங்களை காணும் கணங்களை அழிப்பாக்கம் செய்யும் கவிதை விநோதம் பாவன லாந்தரின் கவிதையாக்கம். ஒவ்வொரு கவிதையொடலுக்குள்ளும் அடுக்கு அடுக்காக நுண்-கவிதையாடல்களின் மூலம் கட்டமைக்கப்படுகிறது கவிதையின் புலம் ஒற்றைகுறிப்பீட்டில் அடங்கிவிடாது பன் –முனையுடைய பிரதியாக   நீட்சியடைந்து கொண்டே செல்கிறது என விமர்சகர் -எஸ். சண்முகம் குறிப்பிடுகிறார்.

நூல்கள்

கவிதைத் தொகுப்புகள்

  • உப்பு வயலெங்கிலும் கல்மீன்கள் - 2016
  • லாடம் -  2018
  • ஓநாய் - 2021

பிற செயல்பாடுகள்

பாலைவன லாந்தர் சமூகநல செயல்பாடுகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். பெரு நோய்த்தொற்று கொரானா காலத்தில் இவர் தயாரித்த "ஊரடங்கு" என்ற விழிப்புணர்வு குறும்படம்   கவனம் பெற்றது

பாலைவன லாந்தர்,  ஜெர்மனியில் வாழும் நிம்மி சிவா என்னும் எழுத்தாளரோடு இணைந்து உலகெங்கிலும் உள்ள இருபது பெண் எழுத்தாளர்களை ஒருங்கிணைத்து இவர் எழுதிய "மனமே யுத்தம் செய்" என்னும்  நெடு நீள விழிப்புணர்வு கவிதையை வாசிக்கச் செய்தார்.

உசாத்துணை

ஊரடங்கு" விழிப்புணர்வு குறும்படம்;

https://youtu.be/_YWvkhR-HK0

"மனமே யுத்தம் செய்" கவிதை வாசிப்பு ;

https://youtu.be/nTEWJKWhUDQ