பாலாம்பிகை இராஜேஸ்வரன்: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "பாலாம்பிகை இராஜேஸ்வரன் (பிறப்பு: ஏப்ரம் 24, 1947) ஈழத்துப் பெண் எழுத்தாளர். இசைக் கலைஞர். == வாழ்க்கைக் குறிப்பு == பாலாம்பிகை இராஜேஸ்வரன் இலங்கை யாழ்ப்பாணம் கோப்பாயில் சிவஸ்ரீ வை.மு.ப...")
 
Line 16: Line 16:
* மனோதர்ம சங்கீதம்
* மனோதர்ம சங்கீதம்
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* ஆளுமை:பாலாம்பிகை, இராஜேஸ்வரன்: noolaham
* [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88,_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D ஆளுமை:பாலாம்பிகை, இராஜேஸ்வரன்: noolaham]


{{Being Created}}
{{Being Created}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 18:39, 9 March 2024

பாலாம்பிகை இராஜேஸ்வரன் (பிறப்பு: ஏப்ரம் 24, 1947) ஈழத்துப் பெண் எழுத்தாளர். இசைக் கலைஞர்.

வாழ்க்கைக் குறிப்பு

பாலாம்பிகை இராஜேஸ்வரன் இலங்கை யாழ்ப்பாணம் கோப்பாயில் சிவஸ்ரீ வை.மு.பரமசாமி குருக்கள், இராஜேஸ்வரி அம்மாள் இணையருக்கு ஏப்ரம் 24, 1947-ல் பிறந்தார். கோப்பாய் சரவணபவானந்தா வித்தியாலயத்தில் ஆரம்பக்கல்வி பயின்றார். இடைநிலை, உயர் கல்வியை கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரியில் ஆங்கிலமொழியில் கற்றார். மும்மொழியிலும் தேர்ச்சி பெற்ற இவர் இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்தில் ஆங்கில மொழிக்கான சிறப்பு சான்றிதழ் பெற்றார். SLES பரீ்சையிலும் தேர்ச்சி பெற்றார்.

இசை வாழ்க்கை

1966-1969ஆம் ஆண்டு தமிழ்நாடு சென்னை அடையாறு கர்நாடக இசைக்கல்லூரியில் ஆங்கில மொழியில் கற்று சங்கீத வித்துவான் பட்டம் பெற்றார். 1969-1970ஆம் ஆண்டு டிப்ளோமா இசை கற்பித்தார். சென்னை பல்கலைக்கழகத்தில் இசை முதுமாணிப் பட்டத்தை முதலாம் தரத்தில் பெற்றார். தமிழ்நாடு கொடைக்கானல் அன்னை திரேசா மகளிர் பல்கலைக்கழகத்தில் முதுதத்துவமாணிப் பட்டத்தையும் கலாநிதிப் பட்டத்தையும் பெற்றார். சுவாமி விபுலானந்தரின் நீரர மகளிர் (மீன்பாடும் தேன்நாடு) இன்னிசை நடன, நாடகம் பல வருட ஆய்வின் மூலம் 2011ஆம் ஆண்டு நிறுவக அரங்கில் விபுலானந்தரின் நினைவு விழாவில் மேடையேற்றப்பட்டது. இந்நிகழ்வில் இந்திய இசை கலைஞர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். பாலாம்பிகை பல இசைக் கலைஞர்களுக்கு வயலின் வாசித்தார்.

ஆசிரியப்பணி

1982-1997ஆம் ஆண்டு வரை ஆசிரியராகவும், 1999-2000ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் அதிபராகவும், 2002-2005ஆம் ஆண்டு காலப்பகுதியில் சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கை நிறுவகம் கிழக்கு பல்கலைக்கழகம் மட்டக்களப்பு இணைப்பாளராகவும் 2005-2012ஆம் ஆண்டு வரை சிரேஷ்ட விரிவுரையாளராகவும் பணிப்பாளராகவும் இவர் பதவிகளை வகித்து பணியாற்றினார்

இலக்கிய வாழ்க்கை

பாலாம்பிகை இராஜேஸ்வரனின் படைப்புகள் ஈழநாடு, வீரகேசரி, தினக்குரல் ஆகிய நாளிதழ்களிலும் சஞ்சிகைகளிலும் வெளிந்தன. இசை ஆய்வு கட்டுரை, கற்பித்தலில் புதிய லய அணுகுமுறை, மனோதர்ம சங்கீதம் போன்ற நூல்களை எழுதினார்.

விருது

  • சர்வதேச மருத்துவ மாநாட்டில் - இசையால் மருத்துவம் (ஆங்கிலம்) ஒரெயொரு தமிழ் பிரதிநிதி (2011) – மனோ வித்தியாபதி சம்மான.இவ்விருதைப் பெற்றுக்கொண்ட ஒரே இலங்கைத் தமிழர் இவராவார்.
  • வலிகாமம் மேற்கு கலாசார பேரவையின் கலைவாரிதி பட்டம் – 2015

நூல் பட்டியல்

  • இசை ஆய்வு கட்டுரை
  • கற்பித்தலில் புதிய லய அணுகுமுறை
  • மனோதர்ம சங்கீதம்

உசாத்துணை

Template:Being Created