பாலதாஸ்

From Tamil Wiki
Revision as of 17:57, 13 June 2022 by Ramya (talk | contribs) (Created page with "பாலதாஸ் ஈழத்து நாடகக் கலைஞர். ஈழத்து மரபு வழி நாடக உலகில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருந்த காலகட்டத்தில் உருவான நடிகர். மரபு வழிக்கூத்தை அப்படியே நடிக்காமல் காலமாற்றத...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

பாலதாஸ் ஈழத்து நாடகக் கலைஞர். ஈழத்து மரபு வழி நாடக உலகில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருந்த காலகட்டத்தில் உருவான நடிகர். மரபு வழிக்கூத்தை அப்படியே நடிக்காமல் காலமாற்றத்திற்கேற்ப புதுமைகளை செய்து நடித்தார்.

வாழ்க்கைக் குறிப்பு

கலை வாழ்க்கை

யாழ்ப்பாணத்தில் 50, 60களில் இளைஞனான பாலதாஸ் தன் நடிப்புத்திறன் பலராலும் ரசிக்கப்பட்டது. மரபுவழி கூத்தரங்கின் வளர்ச்சிப் போக்கில் ஆடல், பாடல், ஹார்மோனிய வாசிப்புத் திறமைகளோடு பங்களிப்பு செய்தார். நடிப்பு பாவங்களை வெளிப்படுத்தக் கூடிய சதைப்பிடிப்புடைய முகம் அவர் நடிப்பிற்கு பலம். உச்சஸ்தாயி குரலும், மிடுக்கான நடிப்பும், கம்பீரமான உடலும் அவரின் பலம். 1965இல் இலங்கை கலைக்கழக நாடகப்பிரிவு நடத்திய தேசிய நாடகப் போட்டியில் நடிகனாக பங்கு கொண்டார். ராவணசேனன் நாடகத்தில் கும்பகர்ணனாக நடித்தார். 1960களின் நடுப்பகுதியில் பாளையூர் ”வளர்பிறைக் கலா மன்றம்” ஆரம்பிக்கப்பட்டு அதன் உப தலைவராக பாலதாஸ் இருந்தார். 1810-1915 வரை ஆடப்பட்ட கிறுஸ்தவ கூத்துக்களை தன் சிறுபிராயத்தில் பாலதாஸ் பார்த்து வளர்ந்தார்.

மாணவர்
  • ஜோன்சன் ராஜ்குமார்
கூத்து பங்களிப்புகள்
  • விடிய விடிய ஆடப்பட்ட பிரதான நாடகங்களை ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் ஆற்றுகை செய்தார். இதனால் இக்கூத்துகள் பாடசாலைகளிலும் பிற இடங்களிலும் மேடையேற்றவும் யாழ்ப்பாணத்துக் குடாநாட்டினர் அல்லாதோரும் இவற்றைப் பார்க்கவுமான ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டது .
  • கூத்துகளுக்கு மத்தளமும் தாளமும் பாவிப்பதே வழமை.ஹார்மோனியம் சை நாடகங்களுக்கே பாவிக்கப்பட்டது . ஆனால் , இசை நாடகங்களினால் ஈர்க்கப்பட்டிருந்ததுடன் நல்ல இசை யாளனாகவும் இருந்த பாலதாஸ் , நாடகத்தில் இசைக்கு அதன் சுருதிக்கு முக்கியத்துவமளித்தார் . அவரது நாடகங்களில் ஹார்மோனியம் பேசியது .
  • அவரே ஒரு சிறந்த ஹார்மோனிய வித்துவானாகவும் இருந்தார் . இதனை அவர் அன்று பிரபல்யமாயிருந்தவரும் , கூத்துக்கு முதன் முதல் ஹார்மோனியம் வாசித்தவருமான சுருதி மரியானிடமிருந்து கற்றுக்கொண்டார் என அறிகிறோம்.ஆற்றலும் கூர் உணர்வும் கொண்ட பாலதாஸ் . இதனை மென்மேலும் வளர்த்து ஆற்றல் மிக்க ஒரு ஹார்மோனிய வித்துவானும் ஆகினார் . பாலதாஸின் ஹார்மோனியத் திறமை பற்றி ஒருவர் பின் வருமாறு குறிப்பிட்டுள்ளார் . முன்பெல்லாம் நாட்டுக்கூத்திற்கு ஆர்மோனியம் வாசிக்கும் மரபு இருக்கவில்லை . அதனை அறிமுகப்படுத்திய பெருமை , சுருதி மரியான் என்று செல்லமாக அழைக்கப்படும் மாசிலாமணி மரியாம்பிள்ளை அவர்களுடையதாகும் . முதல் முதலாக ஆர்மோனிய வாத்தியம் பாசையூரில் கண்டி அரசன் நாட்டுக்கூத்திற்கு வாசிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது .

பாலதாஸ் அவர்களுக்கு ஆர்மோனிய வாத்தியம் வாசிக்க வேண்டும் என்ற அவா ஏற்பட்டதனால் , சுருதி மரியான் அவர்களையே குருவாகக் கொண்டு அக்கலையை முறையாக . கற்றுக் குருவையும் மிஞ்சும் அளவிற்கு நாட்டுக்கூத்திற்கும் , இசை நாடகத்திற்கும் இன்று வரை சிறப்புற வாசித்து வருவதை யாவரும் அறிவர் . பாலதாஸ் அவர்களின் ஆர்மோனிய வாசிப்பின் சிறப்பம்சம் என்னவென்றால் , பாடகரின் குரல் வளம் அறிந்து அவரது பாடும் திறமைக்கு இசைவாக வாத்தியத்தை போட்டுக்கொடுப்பதிலும் , மற்ற நடிகன் மேடையில் தாள , ராகத்தை விட்டுப் போய்க்கொண்டிருந்தால் அதனைப் பார்வையாளர்கள் செவிகொள்ளாதவாறு தனது ஸ்பெசல் வாசிப்பின் மூலம் ஊடறுத்து சீரமைத்து மீண்டும் அந்த நடிகன் உரிய தாள ராகத்திற்கு இசைவாகவும் தன் ஆற்றலின் எல்லைக்குள்ளும் வந்து பாடுவதற்குமான புறச்சூழலை அற்புதமாக ஏற்படுத்திக்கொடுப்பது மாகும் . இதில் இவர் கைதேர்ந்தவர் . அந்தக் கலையில் அவருக்கு இணை அவரே தான் . சாஸ்திரிய முறையில் ஆர்மோனியம் கற்ற பலர் , நாட்டுக்கூத்திற்கு வாசித்த பல சந்தர்ப்பங்களில் , இத்தகைய நிலை ஏற்படும் போது மேடையில் நடிகனை ' அம்போ ' என்று விட்டு விடுவதையும் நாம் கண்டிருக்கிறோம் . ஆனால் பாலதாஸ் மேடையில் நிற்கும் கலைஞனை ஒருபோதும் கைவிடுவதில்லை .

  • கூத்திற்கு அவர் அளித்த அவரது குரல் வளமும் நடிப்புமாகும் . பாலதாசின் நாடகங்களைப் பார்க்கும் சந்தர்ப்பங்கள் எனக்கு 1960 களிலிருந்து கிடைத்துள்ளன .1960 களின் நடுப்பகுதியில் கலைக்கழக நாடக உறுப்பினர் குழுவில் நான் பணிபுரிந்த காலங்களில் , பாலதாஸின் கண்டியரசன் நாடகத்தைப் பார்க்கும் வாய்ப்பு எனக்கு மட்டக்களப்பில் கிடைத்தது . அன்று அவரது குரல் வளமும் நடிப்பும் பலரையும் கவர்ந்தது.மேடை முழுவதையும் ஆக்கிரமித்து , அவர் நடந்த நடைகளும் பாடிய பாடல்களும் இப்போதும் கண்முன் மலர்கின்றன .
  • ஐந்தாவது பிரிவு அவர் யாழ்ப்பாணக் கத்தோலிக்கக் கூத்தில் ஆட்டங்களையும் உட் புகுத்திய பாங்காகும் . 1974 இல் யாழ்ப்பாணத்தில் கலைக்கழகம் யாழ்ப் பாணக் கூத்துகளுக்கிடையே ஒரு போட்டி நடத்தியது யாழ்ப்பாணத்தின் பல கிராமங்களிலிருந்தும் பல கூத்துக்கள் அன்று போட்டிக்கு வந்தன . யாழ்ப்பாண வடமோடி , தென்மோடி , இசைநாடகம் , காத்தவரயன் கூத்து ஆகிய கூத்துகள் அனைத்தையும் ஒருங்கு சேரப் பார்க்கும் சந்தர்ப்பம் அதிஸ்டவசமாக அன்று எனக்குக் கிட்டியது . அதில் பாஸையூர் வளர்பிறை நாடக மன்றத்தின் கண்டி அரசன் நாடகமும் இடம் பெற்றது.பாலதாஸ் அதில் கண்டி அரசனாகத்தோன்றி ஆடி நடித்ததைக் கண்டேன்.அவர் ஆடல் அழகு என்னை வெகுவாகக் கவர்ந்தது . லயம் மிகுந்த உடல் அவர் உடல் ஒரு சிறந்த நடிகனுக்கு லயம் மிகுந்த உடல் ஒரு கொடை . இயற்கை அக்கொடையினை அவருக்கு வழங்கியிருந்தது . நாடகத்தில் கண்டி அரசன் நாடகமே முதல் இடம் பெற்றது : முடிவுகள் அறிவிக்கப்பட்டபின் அவரைப் பாராட்டிய நான் யாழ்ப்பாணத் தென்மோடிக் கூத்துக்களில் ஆட்டங்கள் இல்லையே எனக் கூறியபோது ' கூத்தென்றால் ஆட்டம் இருக்கவேண்டும் ' என்றார் . உண்மைதான் . கூத்து என்பதற்கு அகராதி தரும் கருத்தும் இதுவே தன் அனுபவ ஞானத்தால் இதனை உணர்ந்து யாழ்ப்பாணத் தென்மோடி மரபில் கண்டி அரசனில் ஆட்டத்தினைப் புகுத்தியமை அவரது ஒரு நாடகப் பங்களிப்பாகும் . ஈழத்தில் மரபுவழிக் கூத்தரங்கின் வளர்ச்சிப்போக்கில் தனது ஆடல் , பாடல் , ஹார்மோனிய வாசிப்புத் திறமைகளோடு கலந்து பங்களிப்புச் செய்தவர் பாலதாஸ் . அவரின் நாடகச் செயற்பாடுகளின் விபரங்கள் பதிவு செய்யப்பட வேண்டும் . அவை நுணித்து ஆராயப்பட வேண்டும் .

விருதுகள்

நடித்த நாடகங்கள்

  • கண்டியரசன் நாடகம்
  • ராவணசேனன் நாடகம்

உசாத்துணை

  • ”நாடகம் – அரங்கியல்: பழையதும் புதியதும்” பேராசிரியர் சி. மெளனகுரு: குமரன் புத்தக இல்லம்: கொழும்பு-சென்னை 2021