பாலகுமாரன்

From Tamil Wiki
Revision as of 14:14, 20 January 2022 by Senthilkumar (talk | contribs) (உ)

எழுத்தாளர் பாலகுமாரன், இருநூறுக்கும் மேற்பட்ட நாவல்கள், நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியவர். புகழ்பெற்ற பல தமிழ் திரைப்படங்களுக்கு வசனம், கதைகள் எழுதியுள்ளார்.

பாலகுமாரன், தஞ்சாவூர் மாவட்டத்தில், திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பழமார்நேரி என்னும் ஊரில் பிறந்தவர். தந்தை பெயர் வைத்தியநாதன். தாயார் சுலோசனா, ஒரு தமிழ் பண்டிதர். தனது தாயாரிடமிருந்தே வாசிப்பு மற்றும் எழுத்தார்வம் பிறந்ததாக கூறியுள்ளார். 1946ம் ஆண்டு பிறந்த பாலகுமாரன், பதினொராம் வகுப்பு வரை பள்ளி படிப்பு முடித்து, சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சில் தேர்ச்சிப்பெற்று, 1969ம் ஆண்டு சென்னையிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றதொடங்கினார்.

’டெலிபோன் துடைப்பவள்’ என்னும் தலைப்பில் பாலகுமாரன் எழுதிய கவிதை, முதன்முதலாக கணையாழி இதழில் வெளியானது. பிறகு டஃபே டிராக்டர் நிறுவனத்தில், வேலை பார்க்கும் போது நடந்த வேலை நிறுத்தபோராட்டத்தில் கலந்துக்கொண்டு அந்த அனுபவங்களை ’மெர்க்குரிப் பூக்கள்’ என்னும் பெயரில் சாவி இதழில் தொடர்கதையாக எழுதினார். நல்ல வரவேற்பை மெர்க்குரிப் பூக்கள் நாவல் பெற்றதை தொடர்ந்து, இரும்பு குதிரைகள் தொடர்கதையை கல்கி இதழில் எழுதினார். பிறகு தொடர்ந்து பல நாவல்களை எழுதினார்.

மாலன், சுப்ரமணிய ராஜூ போன்றவர்களுடன் நட்புக்கொண்டிருந்த பாலகுமாரன், எழுத்தின் நுணுக்கங்களை சொல்லிதந்ததாக எழுத்தாளர் சுஜாதா அவர்களை குறிப்பிடுகிறார்.

திரைத்துறையில் ஆர்வம் கொண்டு இயக்குனர் பாலசந்தருடன் புன்னகை மன்னன், சிந்து பைரவி உள்ளிட்ட திரைப்படங்களில் பணியாற்றினார். பிறகு இயக்குனர் பாக்கியராஜுடன் இணைந்து இது நம்ம ஆளு என்கிற திரைப்படத்தை இயக்கினார்.

பிறப்பு, இளமை

  • பிறந்த ஊர் : தஞ்சாவூர் மாவட்டம் பழமார்நேரி
  • பிறந்த தேதி : 07-05-1946
  • பெற்றோர் பெயர் : வைத்தியநாதன், சுலோசனா
  • கல்வி பயின்ற ஊர்கள், பள்ளிகள் கல்லூரிகள்.
  • மனைவி பெயர்: கமலா, சாந்தா
  • .குழந்தைகள் பெயர் : ஸ்ரீகெளரி, சூர்யா

படைப்புகள்

    • நாவல்கள்
    • சிறுகதைகள்
    • சிறார் நூல்கள்
    • மொழிபெயர்ப்புகள்
    • மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள்

நாவல்கள்

நாவல் வெளிவந்த ஆண்டு வெளிவந்த இதழ் பதிப்பகம் குறிப்புகள்
மெர்க்குரி பூக்கள் சாவி
இரும்புக் குதிரைகள் 1984 கல்கி
தாயுமானவன்
கரையோர முதலைகள்
மெளனமே காதலாக
கை வீசம்மா கை வீசு
கொம்புத் தேன்
கனவுகள் விற்பவன்
உள்ளம் கவர் கள்வன்
ஆனந்த வயல்
அகல்யா
அடுக்கு மல்லி
அப்பம் வடை தயிர்சாதம்
அத்திப்பூ
அப்பா!
அமிர்த யோகம்
அன்பரசு
ஆசைக்கடல்
இரண்டாவது சூரியன்
இனிது இனிது காதல் இனிது
இனி இரவு எழுந்திரு
என் கண்மணித் தாமரை
என்னுயிரும் நீயல்லவோ
என்னுயிர் தோழி
என் கண்மணி
கங்கை கொண்ட சோழன்
கடலோர குருவிகள்
கல்யாண முருங்கை
பனி விழும் மலர்வனம்
திருப்பூந்துருத்தி
நிலாக்கால மேகம்
பந்தயப் புறா
பயணிகள் கவனிக்கவும்
மாலை நேரத்து மயக்கம்
சுக ஜீவனம்
சின்ன சின்ன வட்டங்கள்
சிநேகமுள்ள சிங்கம்
பந்தயப் புறா
ஆசை எனும் வேதம்
பச்சை வயல் மனது
தலையணைப் பூக்கள்
உடையார்

விருதுகள்

  • இலக்கியச் சிந்தனை விருது (மெர்க்குரிப் பூக்கள்)
  • ராஜா சர் அண்ணாமலை செட்டியார் ட்ரஸ்ட் விருது (இரும்புக் குதிரைகள்)
  • தமிழ்நாட்டு மாநில விருது (சுகஜீவனம் - சிறுகதை தொகுப்பு)
  • கலைமாமணி

திரையுலக விருதுகள்

  • தமிழ்நாடு மாநில விருது (காதலன் - சிறந்த வசனம்)