பாலகுமாரன்: Difference between revisions

From Tamil Wiki
(புதிய பக்கம்)
 
(அப்டேட்ஸ்)
Line 4: Line 4:

மாலன், சுப்ரமணிய ராஜூ போன்றவர்களுடன் நட்புக்கொண்டிருந்த பாலகுமாரன், தனக்கு எழுத்தின் நுணுக்கங்களை சொல்லிதந்ததாக எழுத்தாளர் சுஜாதாவை குறிப்பிடுகிறார்.
மாலன், சுப்ரமணிய ராஜூ போன்றவர்களுடன் நட்புக்கொண்டிருந்த பாலகுமாரன், தனக்கு எழுத்தின் நுணுக்கங்களை சொல்லிதந்ததாக எழுத்தாளர் சுஜாதாவை குறிப்பிடுகிறார்.
திரைத்துறையில் ஆர்வம் கொண்டு இயக்குனர் பாலசந்தருடன் புன்னகை மன்னன், சிந்து பைரவி உள்ளிட்ட திரைப்படங்களில் பணியாற்றினார். பிறகு இயக்குனர் பாக்கியராஜுடன் இணைந்து இது நம்ம ஆளு என்கிற திரைப்படத்தை இயக்கினார்.

Revision as of 12:22, 20 January 2022

எழுத்தாளர் பாலகுமாரன், 150க்கும் மேற்பட்ட நாவல்கள், நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியவர். புகழ்பெற்ற பல தமிழ் திரைப்படங்களுக்கு வசனம், கதைகள் எழுதியுள்ளார்.

பாலகுமாரன் தஞ்சாவூர் மாவட்டத்தில், திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பழமார்நேரி என்னும் ஊரில் பிறந்தவர். தந்தை பெயர் வைத்தியநாதன். தாயார் சுலோசனா, ஒரு தமிழ் பண்டிதர். தனது தாயாரிடமிருந்தே வாசிப்பு மற்றும் எழுத்தார்வம் பிறந்ததாக கூறியுள்ளார். 1946ம் ஆண்டு பிறந்த பாலகுமாரன், பதினொராம் வகுப்பு வரை பள்ளி படிப்பு முடித்து, சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சில் தேர்ச்சிப்பெற்று, 1969ம் ஆண்டு சென்னையிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றதொடங்கினார். கவிதை மீது நாட்டம் கொண்டு, சில கவிதைகளை கணையாழி இதழில் எழுதியுள்ளார். பிறகு டிராக்டர் நிறுவனத்தில் வேலை பார்க்கும் போது நடந்த வேலை நிறுத்தபோராட்டத்தில் கலந்துக்கொண்டு அந்த அனுபவங்களை மெர்க்குரி பூக்கள் என்னும் பெயரில் சாவி இதழில் தொடர்கதையாக எழுதினார். நல்ல வரவேற்பை மெர்க்குரி பூக்கள் நாவல் பெற்றதை தொடர்ந்து பல நாவல்களை எழுதினார்.