second review completed

பாயிஸா நவ்பல்

From Tamil Wiki
பாயிஸா நவ்பல்

பாயிஸா நவ்பல் ஈழத்துப் பெண் எழுத்தாளர், கவிஞர். ஹைக்கூ கவிதைகள் எழுதினார். சிறுவர் பாடல்கள் பல பாடினார்.

வாழ்க்கைக் குறிப்பு

பாயிஸா நவ்பல் இலங்கை மட்டக்களப்பு ஓட்டமாவடி மீராவோடையில் சேகுலெவ்வை, கதீஜா உம்மா இணையருக்குப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் ஆறு சகோதரர்கள், இரண்டு சகோதரிகள். மட்டக்களப்பு மீராவோடை மகாவித்தியாலயம், வாழைச்சேனை அந்நூர் மகாவித்தியாலயம் ஆகியவற்றில் கல்வி கற்றார். தையல், அழகுக்கலை, சமையல், விவசாயம் ஆகியவற்றில் டிப்ளோமா பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

நவ்பலை பாயிஸா திருமணம் செய்து கொண்டார். ஒரு மகன், ஒரு மகள்.

அமைப்புப் பணிகள்

  • நுட்பம் இலக்கிய குழுமத்தின் நிறுவனர்.
  • மட்டக்களப்பு இலக்கிய பேரவையின் உறுப்பினர்.
  • தமிழா ஊடக வலையமைப்பின் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்.
  • மீராவோடை மகளிர் அமைப்பின் தலைவி.
  • மட்டுப்படுத்தப்பட்ட கல்குடா தொகுதி சுயதொழில் கூட்டுறவு சங்கத் தலைவி.
  • அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் கல்குடாத் தொகுதி மகளிர் அணித் தலைவி
  • .ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர்.

இலக்கிய வாழ்க்கை

பாயிஸா ஒன்பது வயது முதல் ஹைக்கூ கவிதைகள் எழுதினார். பள்ளிக் காலத்தில் இவர் எழுதிய ஆயிரம் ஹைக்கூ கவிதைகள் கொண்ட தொகுப்பு நூலை வெளியிட்டார். 'நுட்பம் தையல் நூல்', 'நுட்பக் குழந்தைகள்' – சிறுவர்கள் நூல், 'நுட்பக் குழந்தைகள் இறுவட்டு', '1000 முத்துக்கள் ஹைக்கூ தொகுப்பு', 'கவிநுட்பத் துளிப்பா ஹைக்கூ நூல்', 'நுட்பப் பாக்கள்'- கவிதை நூல், 'நுட்பம் குழுவின் ஆண்டு மலர்', 'மனம்தொடும் மலர்கள்' – கவிஞர்களின் தொகுப்பு நூல், 'துளிப்பா மாலை'- பல ஹைக்கூ கவிஞர்களின் தொகுப்பு, 'சுவரெழுத்தின் ஆய்வுக்கட்டுரைகள்' – பலரின் ஆய்வுக்கட்டுரை தொகுப்பு போன்ற தொகுப்பு நூல்களை வெளியிட்டார்.

சிறுவர் பாடல்கள் 19 அடங்கிய இறுவட்டு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த சிறுவர் பாடல்களை இவரே இயற்றி மெட்டமைத்துப் பாடியுள்ளார். 'நுட்பம்' என்னும் இலக்கிய குழுமம் ஒன்றை அமைத்து அதன் தலைவியாகவும் பணி ஆற்றுகின்றார். 'இம்போட் மிரர்' பத்திரிகையின் ஆசிரியையாகவும் செயற்பட்டு வருகிறார்.

விருது

  • 2017-ல் கவிச்சுடர் விருது, கவிமணி விருது, கவிநிலா, சிறந்த நிர்வாகிக்கான விருது, அன்னை தாய்மடி விருது, காதல் பழரசம் விருது.
  • 1000 முத்துக்கள் நூலாசிரியருக்கான சிறப்பு விருது.
  • சாரல் விருது, ஊழலளா விருது, பூஞ்சோலை சிறப்பு விருது.
  • 2018-ல் சென்னை ஹைக்கூ சிறந்த நூலுக்கான விருது.

நூல் பட்டியல்

  • நுட்பம் தையல் நூல்
  • நுட்பக் குழந்தைகள் – சிறுவர்கள் நூல்
  • நுட்பக் குழந்தைகள் இறுவட்டு
  • 1000 முத்துக்கள் ஹைக்கூ தொகுப்பு
  • கவிநுட்பத் துளிப்பா ஹைக்கூ நூல்
  • நுட்பப் பாக்கள் கவிதை நூல்
  • நுட்பம் குழுவின் ஆண்டு மலர்
  • மனம்தொடும் மலர்கள் – கவிஞர்களின் தொகுப்பு நூல்
  • நுளிப்பா மாலை பல ஹைக்கூ கவிஞர்களின் தொகுப்பு
  • சுவரெழுத்தின் ஆய்வுக்கட்டுரைகள் (பலரின் ஆய்வுக்கட்டுரை தொகுப்பு)

உசாத்துணை


✔ Second review completed


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.