பாண்டித்துரைத் தேவர்

From Tamil Wiki
Revision as of 12:20, 17 February 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "பாண்டித்துரைத் தேவர் (21 மார்ச் 1867 - 2 டிசம்பர் 1911) தமிழறிஞர், நிலக்கிழார். மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கம் அமைத்த அமைப்பாளர்களில் முதல்வர். இவரே நான்காம் தமிழ்ச் சங்கத்தின் முதல...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

பாண்டித்துரைத் தேவர் (21 மார்ச் 1867 - 2 டிசம்பர் 1911) தமிழறிஞர், நிலக்கிழார். மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கம் அமைத்த அமைப்பாளர்களில் முதல்வர். இவரே நான்காம் தமிழ்ச் சங்கத்தின் முதல் தலைவராகப் பணியாற்றினார். நான்காம் தமிழ்ச்சங்கம் சார்பில் செந்தமிழ் என்னும் இதழ் வெளியிட்டார்.

பிறப்பு, கல்வி

பாலவநந்தம் ஜமீன்தார் பொன்னுசாமித் தேவருக்கு மூன்றாவது மகனாக 1867-ஆம் மார்ச் 21 ல் பிறந்தார். இளமையில் தந்தையை இழந்தமையால், சேஷாத்திரி ஐயங்கார் என்பவரின் மேற்பார்வையில் வளர்ந்தார். இக்காலகட்டத்தில் அழகர் ராஜ் என்ற தமிழ்ப் புலவர் இவருக்குத் தமிழ் ஆசிரியராகவும் வழக்க்குரைஞர் வெங்கடேஸ்வர சாஸ்த்திரி ஆங்கில ஆசிரியராகவும் இருந்தனர். இஇராமநாதபுரத்தில் சிவர்டிஸ் என்ற ஆங்கிலேயாரால் நடத்தப்பட்ட உயர்பள்ளியில் மேல்கல்வி கற்றார்.சேஷாத்திரி ஐயங்காரால் மேற்பார்வை செய்யப்பட்ட தேவரின் சொத்துகள் எல்லாம் இவர் பதினேழு வயதை அடைந்ததும் இவரிடமே அளிக்கப்பட்டன. இச்சொத்துகளில் பாலவநத்தம் ஜமீனும் அடங்கும். இவர் ராமநாதபுரம் சேதுபதி மன்னருக்கு அணுக்கமானவராக இருந்தார்.

இலக்கியவாழ்க்கை

பாண்டித்துரைத் தேவர் தமிழிலக்கியச் செயல்பாடுகளுக்கு நிதியளித்தவர், அறிஞர்களை ஆதரித்தவர், இலக்கியச் செயல்பாடுகளை அமைப்புசார்ந்து ஒருங்கிணைத்தவர் என மூன்று வகைகளில் தமிழ்ப்பணி ஆற்றினார்.

கொடைவள்ளல்

பாண்டித்துரைத் தேவரின் காலகட்டத்தில் அதுவரை தமிழ் இலக்கியத்தையும் கலைகளையும் ஆதரித்த நிலக்கிழார்களும் செல்வந்தர்களும் படிப்படியாக அழிந்துவிட்டிருந்தனர். நூற்றைம்பதாண்டுகால ஆங்கில ஆட்சி அவர்களின் அதிகாரத்தை இல்லாமலாக்கியது. 1770 களிலும் 1870 களிலும் உருவான பெரும் பஞ்சங்கள் பலருடைய செல்வநிலையை அழித்தன. ஊர்கள் அழிந்தன. மக்கள் கூட்டம்கூட்டமாக இடம்பெயர்ந்தனர். விளைவாக மரபான தமிழறிஞர் குடிகள் ஆதர்வின்றி அழிந்தன. அவர்களால் பேணப்பட்ட சுவடிகளும் அழிந்துகொண்டிருந்தன. இக்காலகட்டத்தில்தான் தமிழ்