being created

பவா செல்லதுரை: Difference between revisions

From Tamil Wiki
mNo edit summary
mNo edit summary
Line 29: Line 29:
== வெளிவந்துள்ள நூல்கள் ==
== வெளிவந்துள்ள நூல்கள் ==
====== கவிதை ======
====== கவிதை ======
# எஸ்தரும், எஸ்தர் டீச்சரும் – 1989
* எஸ்தரும், எஸ்தர் டீச்சரும் – 1989
====== சிறுகதைத் தொகுப்பு ======
====== சிறுகதைத் தொகுப்பு ======
# நட்சத்திரங்கள் ஒளிந்துகொள்ளும் கருவறை -  2008
* நட்சத்திரங்கள் ஒளிந்துகொள்ளும் கருவறை -  2008
# டொமினிக் -2016
* டொமினிக் -2016
# நீர் மற்றும் கோழி - 2017
* நீர் மற்றும் கோழி - 2017
====== கட்டுரைகள் ======
====== கட்டுரைகள் ======
# 19, டி. எம். சாரோனிலிருந்து 2011
* 19, டி. எம். சாரோனிலிருந்து 2011
# எல்லா நாளும் கார்த்திகை – 2013
* எல்லா நாளும் கார்த்திகை – 2013
# நிலம் – 2014
* நிலம் – 2014
# பஷீரின் அறை அத்தனை எளிதில் திறக்கக்கூடியதல்ல -  2016
* பஷீரின் அறை அத்தனை எளிதில் திறக்கக்கூடியதல்ல -  2016
# பங்குக்கறியும் பின்னிரவுகளும்- 2018
* பங்குக்கறியும் பின்னிரவுகளும்- 2018
#  மேய்ப்பர்கள்- 2020
*  மேய்ப்பர்கள்- 2020
====== நாவல் ======
====== நாவல் ======
# உறவுகள் பேசுகிறது -. - 1989
* உறவுகள் பேசுகிறது -. - 1989
====== தொகுத்த புத்தகங்கள் ======
====== தொகுத்த புத்தகங்கள் ======
# கந்தர்வன் கதைகள் – 2012
* கந்தர்வன் கதைகள் – 2012
# ஸ்பானிய சிறகுகளும், வீரவாளும்
* ஸ்பானிய சிறகுகளும், வீரவாளும்
# சிறகிசைத்த காலம் – 2013
*சிறகிசைத்த காலம் – 2013
== பிற மொழிகளில் பவா செல்லதுரையின் நூல்கள் ==
== பிற மொழிகளில் பவா செல்லதுரையின் நூல்கள் ==
===== மலையாளம் =====
===== மலையாளம் =====
====== சிறுகதை தொகுப்பு ======
====== சிறுகதை தொகுப்பு ======
1.       நட்சத்திரங்கள் ஒளிக்குந்ந   கற்ப பாத்ரம் - மலையாளத்தில் திரு.ஸ்டான்லி


2.       டொமினிக் - மலையாளத்தில் Dr.K வெங்கடாசலம்
* நட்சத்திரங்கள் ஒளிக்குந்ந   கற்ப பாத்ரம் - மலையாளத்தில் திரு.ஸ்டான்லி
 
* டொமினிக் - மலையாளத்தில் Dr.K வெங்கடாசலம்
3.       தேன் - மலையாளத்தில் : பால் சக்கரியா
* தேன் - மலையாளத்தில் : பால் சக்கரியா
====== கட்டுரை   ======
====== கட்டுரை   ======
* எல்லா நாளும் கார்த்திகை - மலையாளத்தில் Dr.T.N ரகுராம்
* எல்லா நாளும் கார்த்திகை - மலையாளத்தில் Dr.T.N ரகுராம்
===== ஆங்கிலத்தில் சிறுகதை மற்றும் கட்டுரைகள் =====
===== ஆங்கிலத்தில் சிறுகதை மற்றும் கட்டுரைகள் =====
* Dominic  - sidhraj ponraj
* Dominic  - sidhraj ponraj
* Ruins of the Night - Janaki Venkatraman
* Ruins of the Night - Janaki Venkatraman
Line 66: Line 62:
* Shepherd - Dr.K subramaniyaneditedit source
* Shepherd - Dr.K subramaniyaneditedit source
* Shared Meat and Late Nights – ENGLISH Dr. Priyalakshmi -2021
* Shared Meat and Late Nights – ENGLISH Dr. Priyalakshmi -2021
===== தெலுங்கு =====
===== தெலுங்கு =====
====== சிறுகதை ======
====== சிறுகதை ======
* நக்‌ஷத்தாரலூ தக்குண்ணா அபாயரான்யம் - தெலுங்கு: ஜில்லா பாலாஜி
* நக்‌ஷத்தாரலூ தக்குண்ணா அபாயரான்யம் - தெலுங்கு: ஜில்லா பாலாஜி
== பெற்ற விருதுகள், பரிசுகள் ==
== பெற்ற விருதுகள், பரிசுகள் ==
* தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சிறந்த சிறுகதைக்கான விருது - நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை
* தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சிறந்த சிறுகதைக்கான விருது - நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை
* தமிழக அரசின் சிறந்த கட்டுரைக்கான விருது -  எல்லா நாளும் கார்த்திகை
* தமிழக அரசின் சிறந்த கட்டுரைக்கான விருது -  எல்லா நாளும் கார்த்திகை
Line 83: Line 75:
தமிழ் சினிமாவில் சிறிய கதாபாத்திரங்களில் நடிக்கத் துவங்கியவர், இப்போது முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கும் குணசித்திர நடிகராக அறியப்படுகிறார்.
தமிழ் சினிமாவில் சிறிய கதாபாத்திரங்களில் நடிக்கத் துவங்கியவர், இப்போது முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கும் குணசித்திர நடிகராக அறியப்படுகிறார்.
====== நடித்துள்ள திரைப்படங்கள் ======
====== நடித்துள்ள திரைப்படங்கள் ======
* ஜோக்கர் -2016
* ஜோக்கர் -2016
* பேரன்பு -2019
* பேரன்பு -2019

Revision as of 22:15, 24 May 2022

திருவண்ணாமலையைச் சேர்ந்த பவாசெல்லத்துரை தமிழ் இலக்கிய உலகின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர். அவர் சிறுகதைகள், நாவல், கட்டுரைகள், கவிதைகள் எழுதியுள்ளார். மனித வாழ்வின் அவலங்களை, நெகிழ்ச்சியான தருணங்களை இயல்பாகக் கண்முன் உலவச் செய்யும் எழுத்தாளர் பவா செல்லத்துரை ஆவார். அவர் எழுத்தாளர் மட்டுமன்றி பேச்சாளர், கவிஞர் ,கதைசொல்லி, திரைப்பட நடிகர், பதிப்பாளர், இயற்கை விவசாயி, அரசியலாளர் எனப் பன்முகத் தன்மை கொண்டவர். பவா செல்லத்துரை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தலைவர்களில் ஒருவர். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துடன் இணைந்து திருவண்ணாமலையில் களப்பணி, இலக்கியப்பணி, இலக்கியக் கருத்தரங்குகள், பயிலரங்குகள், கண்காட்சிகள் என நூற்றுக்கும் மேலாக நடத்தியுள்ளார்.

பிறப்பு

https://bavachelladurai.blogspot.com/2019/10/1.html
நன்றி bavachelladurai.blogspot.com

பவா. செல்லதுரை ஆசிரியர் தனக்கோட்டி அய்யாவிற்கும், தனம்மாளுக்கும் பதினாறு ஆண்டுகால காத்திருப்பிற்குப் பிறகு 1965 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 27 -ல் திருவண்ணாமலையில் பிறந்தார்.  

இளமை,கல்வி

பவா. செல்லதுரை திருவண்ணாமலையிலுள்ள சாரோன் போர்டிங் பள்ளியில் தனது தொடக்ககால பள்ளிப் படிப்பை நிறைவு செய்து, டேனிஷ் மிஷன் மேல்நிலைப்பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு வரை தொடர்ந்தார்.  திண்டிவனம் அரசினர் கலைக்கல்லூரியில் பி. காம் பட்டப் படிப்பு பயின்றார். அவருடைய தந்தை ஆசிரியராகப் பணி புரிந்ததால் பவாவின் பள்ளிப் பருவம் பல்வேறு ஊர்களில் கழிந்தது. அந்த அனுபவங்களும், ஜெயகாந்தனின் ‘ஒரு மனிதனும் சில எருமைமாடுகளும்’ நாவலை வாசித்த தாக்கமும் சேர்ந்து அவரை ஒரு நாவலை எழுத வைத்தது. ‘உறவுகள் பேசுகிறது’ என்ற தலைப்பிலான அந்நாவல் திருவண்ணாமலையிலிருந்து வெளிவந்த ‘தீபஜோதி’ இதழில் வெளியானது. அப்போது பவா செல்லத்துரைக்கு வயது 16. பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். முதல் நாவல் வெளிவந்த பெருமிதம், சக மாணவர்கள் அளித்த ஊக்கம், ‘வசந்தம்’ என்ற கையெழுத்துப் பிரதி நடத்திய அனுபவம் எல்லாம் சேரவே, அவர் தொடர்ந்து எழுதினார்.

குடும்பம்

திருவண்ணாமலை சாரோன் போர்டிங் பள்ளியில் கலை இலக்கிய மாநாடு நடைபெற்றது. அங்கு கே.வி.ஷைலஜா அவர்களோடு ஏற்பட்ட இலக்கியச் சந்திப்பு, காதலாக மலர்ந்து, இருவரும் 1994 -ல் திருமணம் செய்து கொண்டனர்.‌ கே. வி. ஷைலஜா ஒரு மொழிபெயர்ப்பாளராக உள்ளார். மகன் வம்சி, மகள் மானசா இருவருமே வாசிப்பில் ஆர்வமுடையவர்கள். கலை, இலக்கிய, குறும்பட முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இலக்கியப் பங்களிப்பு

பவா செல்லதுரைக்கு நண்பர் உதயசங்கருடனான நட்பும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துடனான தொடர்பும் தீவிர இலக்கிய வாசிப்புக்கு வழிவகுத்தன.. புதுமைப்பித்தன், வண்ணதாசன், வண்ணநிலவன் என தேடித்தேடி வாசித்தார். மேடைகளில் வாசித்த, இதழ்களில் எழுதிய கவிதைகளைத் தொகுத்து ஒரு தொகுப்பு வெளியிட்டார். கந்தர்வன் அதற்கு முன்னுரை எழுதினார். கி.ரா., தி.க.சி.,வண்ணநிலவன் எனப் பலரது பாராட்டுக்களை அத்தொகுப்பு பெற்றது. அந்த ஊக்கத்தில் பல சிறுகதைகளையும், கவிதைகளையும் தொடர்ந்து எழுத ஆரம்பித்தார்.கல்கியில் வெளியான 'முகம்' என்ற சிறுகதை இலக்கியச் சிந்தனை பரிசு பெற்றது. பவா என்ற இலக்கியவாதியை அச்சிறுகதை உலகுக்கு அடையாளம் காட்டியதுடன், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பாடமாகவும் வைக்கப்பட்டது. தொடர்ந்து வெளியான 'வேறுவேறு மனிதர்கள்' சிறுகதை பரவலாகப் பேசப்பட்டதுடன், காமராஜர் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலும் இடம்பெற்றது.

பவா செல்லதுரைபல இதழ்களில் வெளியான தன் சிறுகதைகளைத் தொகுத்து 'நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை' என்ற நூலாக்கி வெளியிட்டார். அது வரவேற்பைப் பெற்றதுடன், பிரபல எழுத்தாளர்களின் பாராட்டுக்களையும் பெற்றது. இந்நூலில் வரும் ”ஏழுமலை ஜமா” என்னும் சிறுகதையை அவருடைய தோழர் கருப்பு கருணா குறும்படமாகவும் இயக்கினார்.நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை என்ற சிறுகதைத் தொகுப்பில் வேட்டை, பச்சை இருளன், சத்ரு கதைகள் வாசகர்களின் பரவலான பாராட்டைப் பெற்றவை. ”ஸ்பானிய சிறகுகளும், வீரவாளும்” எனும் சிறுகதைத் தொகுப்பு ஒரு மாறுபட்ட முயற்சி. அந்நூல் இலத்தீன், அமெரிக்கக் கதைகளின் மொழிபெயர்ப்புகளும், தமிழ்ச் சிறுகதைகளும் கலந்து தொகுக்கப்பட்ட நூலாகும். கதைகள் மட்டுமல்லாமல் கவிதை, கட்டுரை, நாவலும் எழுதியிருக்கிறார். சிறந்த சிறுகதைகளை

இலக்கிய விமர்சனம்

பவா செல்லதுரை வறண்ட நிலப்பரப்பை, இந்த கிராமங்களை தன்னுடைய கதைகளின் மூலம் நினைவு கூர வைக்கிறார். பவாவின் இரண்டு கதைகள் ஜெயமோகனின் சிறந்த சிறுகதைகள் பட்டியலில் இடம் பெறுகின்றன – ஏழுமலை ஜமா மற்றும் ஓணான் கொடி சுற்றிய ராஜாம்பாள் நினைவுகள்.

ஏழுமலை ஜமாஎன்ற சிறுகதையில் கூத்து வாத்தியார் வாழ்க்கைத் தேவைகளுக்காக என்னென்னவோ செய்தாலும் கூத்துக்கு மீளும் தருணம் சிறப்பாக வந்திருக்கிறது.

தமிழ் இலக்கியத்தில் விளிம்பு நிலை மக்களை, அவர்களது வாழ்வியலை, சமூக அமைப்பை உலகறியச் செய்ததில் முற்போக்கு இலக்கியப் படைப்பாளிகளுக்கு மிக முக்கிய இடமுண்டு. அந்த வகையில், மனித வாழ்வின் அவலங்களை, நெகிழ்ச்சியான தருணங்களை இயல்பாகக் கண்முன் உலவச் செய்யும் எழுத்தாளர் பவா செல்லத்துரை.

இவரது 'ஏழுமலை ஜமா' என்ற சிறுகதை மிக முக்கியமானது. ஒரு கூத்துக் கலைஞனின் அக உணர்வை துல்லியமாகப் படம்பிடித்துக் காட்டியிருக்கும் அச்சிறுகதை, குறும்படமாகவும் வெளியாகிப் பல விருதுகளைப் பெற்றது. பல இதழ்களில் வெளியான சிறுகதைகளைத் தொகுத்து 'நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை' என்ற நூலாக்கி வெளியிட்டார். அது வரவேற்பைப் பெற்றதுடன், பிரபல எழுத்தாளர்களின் பாராட்டுக்களையும் பெற்றது. '19 டி.எம். சாரோனிலிருந்து' என்ற இவரது தொகுப்பும் மிக முக்கியமானது. இலக்கிய உலகில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியவை இவரது படைப்புகள். குறிப்பாக 'எல்லா நாளும் கார்த்திகை' தொகுப்பு, ஜெயகாந்தன், பாலுமகேந்திரா, மம்முட்டி, சுந்தர ராமசாமி, பாரதிராஜா, நாசர், வண்ணநிலவன், சா.கந்தசாமி போன்ற நாம் அறிந்த பிரபலங்களின் அறியாத மற்றொரு முகத்தை, அவர்களது அக உலகை, ஆசைகளை, ஏக்கங்களை, எண்ணங்களை மிக விரிவாகக் காட்டுவது. "பரவசம் தோய்ந்த, உணர்ச்சியில் சில்லிட்ட, வியப்பில் பூரித்த, அற்புதத்தில் ஸ்தம்பித்த, வார்த்தைகளால் பவா பேசுகிறார். பவாவின் கண்கள் பத்து வயதுச் சிறுமியின் விழிகள். கிராமத்திலிருந்து பட்டணம் வந்து, பேரடுக்குப் பெருவீடுகளைக் கண்டு திகைத்து நிற்கும் பத்து வயதுக் குழந்தையின் நிர்மலமான ஆச்சரியப் பார்வை அது. உணர்ச்சிகளை ஒளித்துப் போலி பெரிய மனுஷத்தனம் காட்டாத சத்தியத்தின் குரல் அவருடையது. மனித உன்னதங்கள் தன் தொட்டுவிடும் தூரத்தில் நின்றுகொண்டு தன் விகாசத்தை வெளிக்காட்டுகையில் அத் தருணத்தின் பேரொளியைக் கைகளுக்குள் பொத்தி அப்படியே, தொங்கும் உண்மையின் கவிச்சி வாசனையோடு எழுதுகிறார்" என்று பவாவின் எழுத்தை மதிப்பிடுகிறார் பிரபஞ்சன்.

சிறுவயது முதல் தான் கண்டவற்றை, கேட்டவற்றை, அனுபவித்தவற்றை ஒரு பாத்திரமாக நெருங்கியும், சாட்சியாக விலகியும் நின்று வெளிப்படுத்துபவையாக பவா செல்லத்துரையின் படைப்புகள் உள்ளன. அவற்றின் பாசாங்கின்மையும், முகத்தில் அறையும் நிஜமும் வாசகனைத் தாக்குகின்றன. சமூகத்தின் பார்வையில் அரதப் பழசானவர்கள், ஒன்றுக்கும் ஆகாதவர்கள், ஏழை, எளியவர்கள், செல்லாக்காசுகள் என்றெல்லாம் ஒதுக்கி வைக்கப்படுபவர்கள் இவரது படைப்புகளில் சிறந்த சொற்சித்திரமாக, மிகச் சிறந்த ஆளுமையாக வெளிப்படுகிறார்கள். வாழ்க்கையின் முன் தங்கள் நிஜ முகத்தைக் காட்டுகிறார்கள். இவரது கட்டுரைகளில் தெரியும் உண்மையும், வாழ்க்கையின் அனுபவமும் நம்மை வேறு ஓர் உலகிற்கு இட்டுச் செல்கின்றன என்று சொன்னால் அது மிகையல்ல. திருவண்ணாமலை யோகி ராம்சுரத்குமாருடனான பவாவின் அனுபவங்கள், அவர்கள் இருவருக்கிடையேயும் இருக்கும் அன்பையும், நட்பையும், பிணைப்பையும் பறைசாற்றுகின்றன. "பவாவின் எழுத்து வாசிப்பவர்களைத் தடுமாற வைக்கிறது. சதா மூளையின் கட்டுப்பாட்டிலிருக்கும் மனதைச் சற்றே இடம்பெயர வைக்கிறது" என்கிறார் எழுத்தாளர் அய்யனார் விஸ்வநாத். மலையாளத்திலும், ஆங்கிலத்திலும் பவாவின் நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டு வரவேற்புப் பெற்றுள்ளன.

ன்றனமுற்போக்கு எழுத்தாளர் சங்கத்துடன் இணைந்து பவா ஆற்றிவரும் தீவிரமான களப்பணி, இலக்கியப்பணி குறிப்பிடத்தக்கது. திருவண்ணாமலையில் விடிய விடிய நடக்கும் பல கலை இரவு நிகழ்ச்சிகளிலும், சமூக, களப் பணிகளிலும் இவரது பங்கும், உழைப்பும் மிக முக்கியமானது. 'முற்றம்' என்ற இலக்கியக் கூட்டத்தை மாதாமாதம் நடத்தி வருகிறார். முக்கிய எழுத்தாளர்கள் பலர் இதில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிர். கவிஞரும், எழுத்தாளருமான கே.வி. ஷைலஜா, பவாவின் மனைவி. நல்ல நூல்களைத் திருவண்ணாமலையிலிருந்து வெளியிட்டு வரும் வம்சி பதிப்பகம் இவர்களுடையது. ஷைலஜா மலையாளத்திலிருந்து தமிழுக்கு குறிப்பிடத்தகுந்த மொழிபெயர்ப்புகளைச் செய்திருக்கிறார். இதுவரை ஏழு மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியாகி இருக்கின்றன. அவற்றுள் பாலச்சந்திரன் சுள்ளிக்காட்டின் வாழ்க்கையை விவரிக்கும் 'சிதம்பர ரகசியம்' குறிப்பிடத் தக்கது. சிறுகதை, புதினம், கட்டுரை, மொழிபெயர்ப்பு, கவிதை, சிறார் இலக்கியம், திரையுலகம் என 150க்கும் மேற்பட்ட தலைப்புகளில் சீரிய புத்தகங்களைப் பதிப்பித்துள்ளது வம்சி. சிறுகதைப் போட்டிகளை நடத்தி, பரிசளித்து, தொகுப்பாகவும் வெளியிடுகிறது.

எழுத்தாளர்களின் வேடந்தாங்கலாக விளங்கும் பவாவின் வீடு கலை, இலக்கியவாதிகளால் எப்போதும் நிறைந்திருக்கும் ஒன்று. திரை, இலக்கிய உலகைச் சேர்ந்த பலர் பவாவுக்கு மிக நெருக்கமான நண்பர்கள். "எனக்கும் கோணங்கிக்கும் பவாவின் வீடுதான் தாய்வீடு. பவாவைப் போல எழுத்தாளர்களை நேசிக்க வேறு எவராலும் முடியாது. பவாவின் அன்பும் நட்புமே என் எழுத்திற்கு எப்போதும் உத்வேகம் அளித்து வருகிறது" என்று நெகிழ்கிறார் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்.

வெளிவந்துள்ள நூல்கள்

கவிதை
  • எஸ்தரும், எஸ்தர் டீச்சரும் – 1989
சிறுகதைத் தொகுப்பு
  • நட்சத்திரங்கள் ஒளிந்துகொள்ளும் கருவறை -  2008
  • டொமினிக் -2016
  • நீர் மற்றும் கோழி - 2017
கட்டுரைகள்
  • 19, டி. எம். சாரோனிலிருந்து 2011
  • எல்லா நாளும் கார்த்திகை – 2013
  • நிலம் – 2014
  • பஷீரின் அறை அத்தனை எளிதில் திறக்கக்கூடியதல்ல -  2016
  • பங்குக்கறியும் பின்னிரவுகளும்- 2018
  •  மேய்ப்பர்கள்- 2020
நாவல்
  • உறவுகள் பேசுகிறது -. - 1989
தொகுத்த புத்தகங்கள்
  • கந்தர்வன் கதைகள் – 2012
  • ஸ்பானிய சிறகுகளும், வீரவாளும்
  • சிறகிசைத்த காலம் – 2013

பிற மொழிகளில் பவா செல்லதுரையின் நூல்கள்

மலையாளம்
சிறுகதை தொகுப்பு
  • நட்சத்திரங்கள் ஒளிக்குந்ந   கற்ப பாத்ரம் - மலையாளத்தில் திரு.ஸ்டான்லி
  • டொமினிக் - மலையாளத்தில் Dr.K வெங்கடாசலம்
  • தேன் - மலையாளத்தில் : பால் சக்கரியா
கட்டுரை  
  • எல்லா நாளும் கார்த்திகை - மலையாளத்தில் Dr.T.N ரகுராம்
ஆங்கிலத்தில் சிறுகதை மற்றும் கட்டுரைகள்
  • Dominic  - sidhraj ponraj
  • Ruins of the Night - Janaki Venkatraman
  • From 19 DM Saron - P.Ramgopal
  • Shepherd - Dr.K subramaniyaneditedit source
  • Shared Meat and Late Nights – ENGLISH Dr. Priyalakshmi -2021
தெலுங்கு
சிறுகதை
  • நக்‌ஷத்தாரலூ தக்குண்ணா அபாயரான்யம் - தெலுங்கு: ஜில்லா பாலாஜி

பெற்ற விருதுகள், பரிசுகள்

  • தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சிறந்த சிறுகதைக்கான விருது - நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை
  • தமிழக அரசின் சிறந்த கட்டுரைக்கான விருது -  எல்லா நாளும் கார்த்திகை
  • நொய்யல் இலக்கிய விருது - நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை
  • சிறந்த நடிகருக்கான விருது 2021 - செந்நாய்

பதிப்பாளர்

 தமிழ் இலக்கிய உலகில் ஜெயமோகனின் முதல் சிறுகதை நூலினை பதிப்பித்தது இவர்தான். ஜெயமோகனின் எழுத்துக்களை ரசிப்பதாகவும், அவரின் அரசியல் கருத்துக்களில் இருந்து முற்றிலும் மாறுபடுவதாகவும்  ஒவ்வொரு உரையாடலின் போதும் வெளிப்படுத்துகிறார்.

திரைப்பட நடிகர்

தமிழ் சினிமாவில் சிறிய கதாபாத்திரங்களில் நடிக்கத் துவங்கியவர், இப்போது முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கும் குணசித்திர நடிகராக அறியப்படுகிறார்.

நடித்துள்ள திரைப்படங்கள்
  • ஜோக்கர் -2016
  • பேரன்பு -2019
  • குடிமகன் – 2019
  • அமிபா – 2019
  • சைக்கோ  -2020
  • வால்டர் – 2020
  • யாதும் ஊரே யாவரும்கேளிர் – 2020
  • செந்நாய் -  2020
  • வெள்ளை யானை – 2021

கதை சொல்லி

பவா செல்லத்துரையை தமிழ் பேசும் உலகில் அறியாதவர் சிலரே.சிறுகதை எழுத்தாளர், பதிப்பாளர், மொழிபெயர்ப்பாளர்,நடிகர் என பன்முகம் கொண்டவர். இதைத்தவிர இந்த நூற்றாண்டின் மாபெரும் கதைசொல்லி அவர். ரொறொன்ரோ பல்கலைக்கழக தமிழ் இருக்கை நிதிசேர் நிகழ்வில் பங்குபெற விரைவில் கனடா வர இருக்கிறார்.

ஆவணப்படம்  

ஆர்.ஆர்.சீனிவாசன் இயக்கத்தில் “பவா என்றொரு கதை சொல்லி” எனும் ஆவணப்படம் வெளிவந்துள்ளது.

இதனை உருவாக்கிய செந்தழல் ரவி, மற்றும்எஸ்கேபி கருணா, ஒளிப்பதிவு செய்த சரவணக்குமார், பட்த்தொகுப்பாளர் தயாளன்,

பவா என்ற கதை சொல்லியின் ஆளுமை மட்டுமே இந்த ஆவணப்படத்தில் முதன்மைபடுத்தபட்டிருக்கிறது, மனம் நெகிழ பவா கதை சொல்கிறார், இக்கதை அவரது வாழ்நிலத்தின் கதை, அவர் அறிந்த மனிதர்களின் கதை,

அவரது குடும்பம், படைப்புகள், அவரது இலக்கிய ஈடுபாடு, நட்புவட்டம், அவர் நடத்திய இலக்கியக் கூட்டங்கள், முகாம்கள்,  கண்காட்சிகள், அதில் கலந்து கொண்ட ஆளுமைகள், பவா வெளியிட்டுள்ள புத்தகங்கள், பதிப்பகம் என விரிவாகச் சொல்வதற்கு நிறைய இருந்த போதும் படம் ஒரு கோணத்தில் மட்டுமே பவாவை அடையாளப்படுத்துகிறது

           பவாவின் பலமே அவரது நட்பு வட்டம்தான். தன்னுடைய இலக்கிய உரையாடல்களாலும், அன்பாலும் ஒருங்கிணைந்த தன்னியல்பான பெரும் நண்பர்களின் படை பவாவைச் சுற்றி எப்போதும் இருப்பதைப் பார்க்க முடியும். சல சலத்து ஓடும் இலக்கிய நதியாக பவா எப்போதும் தன்னை புதுப்பித்துக் கொண்டே, இயங்கிக் கொண்டிருக்கிறார்.

உசாவுத்துணை

https://www.tamilwriters.in/2021/06/blog-post_46.html https://sanjigai.wordpress.com/2013/06/16/%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/

https://siliconshelf.wordpress.com/2019/02/24/%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/

https://kanali.in/interview-with-bavachelladurai/

https://www.sramakrishnan.com/%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/

https://amuttu.net/2019/12/28/%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%A4/

http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=12639

https://ta.quora.com/%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D

https://vallinam.com.my/version2/?p=5645

https://vallinam.com.my/version2/?p=5645

https://tamil.indianexpress.com/literature/bava-chelladurai-writer-story-teller-interview-168212/



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.