being created

பவா செல்லதுரை: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
mNo edit summary
Line 1: Line 1:
பவா செல்லத்துரை எழுத்தாளர், பேச்சாளர், கதை சொல்லி, திரைப்பட நடிகர், பதிப்பாளர், அரசியலாளர் என பன்முகத் தன்மை கொண்டவர்.[[File:பவாசெல்லதுரை.jpg|alt=https://bavachelladurai.blogspot.com/2019/10/1.html|thumb|நன்றி bavachelladurai.blogspot.com]]
திருவண்ணாமலையைச் சேர்ந்த பவாசெல்லத்துரை தமிழ் இலக்கிய உலகில் உள்ள சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர். அவர் சிறுகதைகள், நாவல், கட்டுரைகள், கவிதைகள் எழுதியுள்ளார்.  மனித வாழ்வின் அவலங்களை, நெகிழ்ச்சியான தருணங்களை இயல்பாகக் கண்முன் உலவச் செய்யும் எழுத்தாளர் பவா செல்லத்துரை ஆவார். அவர் எழுத்தாளர் மட்டுமன்றி பேச்சாளர், கவிஞர் ,கதைசொல்லி, திரைப்பட நடிகர், பதிப்பாளர், அரசியலாளர் என பன்முகத் தன்மை கொண்டவர். பவா செல்லத்துரை  முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தலைவர்களில் ஒருவர். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துடன் இணைந்து திருவண்ணாமலையில்  களப்பணி, இலக்கியப்பணி, இலக்கியக் கருத்தரங்குகள், பயிலரங்குகள், கண்காட்சிகள் நூற்றுக்கும் மேலாக நடத்தியுள்ளார்.
 
== பிறப்பு ==
[[File:பவாசெல்லதுரை.jpg|alt=https://bavachelladurai.blogspot.com/2019/10/1.html|thumb|நன்றி bavachelladurai.blogspot.com]]
 
பவா. செல்லதுரை ஆசிரியர் தனக்கோட்டி அய்யாவிற்கும்,  தனம்மாளுக்கும் பதினாறு ஆண்டுகால காத்திருப்பிற்குப் பிறகு  1965 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 27 ல் திருவண்ணாமலையில் பிறந்தார்.   
 
== கல்வி, இளமை ==
பவா. செல்லதுரை திருவண்ணாமலையிலுள்ள சாரோன் போர்டிங் பள்ளியில் தனது தொடக்ககால பள்ளிப் படிப்பை நிறைவு செய்து, டேனிஷ் மிஷன் மேல்நிலைப்பள்ளியில்  பனிரெண்டாம் வகுப்பு வரை தொடர்ந்தார்.  திண்டிவனம் அரசினர் கலைக்கல்லூரியில் பி. காம் பட்டப் படிப்பு பயின்றார். அவருடைய தந்தை ஆசிரியர். அதனால் பவாவின் பள்ளிப் பருவம் பல்வேறு ஊர்களில் கழிந்தது. அந்த அனுபவம் பல திறப்புகளைத் தந்தது. ஜெயகாந்தனின் ‘ஒரு மனிதனும் சில எருமைமாடுகளும்’ நாவலை வாசித்த தாக்கத்தில் ஒரு நாவலை எழுதினார். ‘உறவுகள் பேசுகிறது’ என்ற தலைப்பிலான அந்நாவல் திருவண்ணாமலையிலிருந்து வெளிவந்த ‘தீபஜோதி’ இதழில் வெளியானது. அப்போது பவா செல்லத்துரைக்கு வயது 16. பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார்.
 
முதல் நாவல் வெளிவந்த பெருமிதம், சக மாணவர்கள் அளித்த ஊக்கம், ‘வசந்தம்’ என்ற கையெழுத்துப் பிரதி நடத்திய அனுபவம் எல்லாம் சேரவே, அவர் தொடர்ந்து எழுதினார். நண்பர் உதயசங்கருடனான நட்பும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துடனான தொடர்பும் தீவிர இலக்கிய வாசிப்புக்கு வழிவகுத்தன.. புதுமைப்பித்தன், வண்ணதாசன், வண்ணநிலவன் என தேடித்தேடி வாசித்தார். மேடைகளில் வாசித்த, இதழ்களில் எழுதிய கவிதைகளைத் தொகுத்து ஒரு தொகுப்பு வெளியிட்டார். கந்தர்வன் அதற்கு முன்னுரை எழுதினார். கி.ரா., தி.க.சி.,வண்ணநிலவன் எனப் பலரது பாராட்டுக்களை அத்தொகுப்பு பெற்றது. அந்த ஊக்கத்தில் பல சிறுகதைகளையும், கவிதைகளையும் தொடர்ந்து எழுத ஆரம்பித்தார்.
 
== குடும்பம் ==
 
உசாவுத்துணை
 
https://www.tamilwriters.in/2021/06/blog-post_46.html
 
https://sanjigai.wordpress.com/2013/06/16/%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/
 
https://siliconshelf.wordpress.com/2019/02/24/%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/
 
https://kanali.in/interview-with-bavachelladurai/
 
https://www.sramakrishnan.com/%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/
 
https://amuttu.net/2019/12/28/%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%A4/
 
http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=12639
 
https://ta.quora.com/%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D
 
https://vallinam.com.my/version2/?p=5645
 
https://tamil.indianexpress.com/literature/bava-chelladurai-writer-story-teller-interview-168212/

{{being created}}
{{being created}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 23:32, 17 May 2022

திருவண்ணாமலையைச் சேர்ந்த பவாசெல்லத்துரை தமிழ் இலக்கிய உலகில் உள்ள சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர். அவர் சிறுகதைகள், நாவல், கட்டுரைகள், கவிதைகள் எழுதியுள்ளார். மனித வாழ்வின் அவலங்களை, நெகிழ்ச்சியான தருணங்களை இயல்பாகக் கண்முன் உலவச் செய்யும் எழுத்தாளர் பவா செல்லத்துரை ஆவார். அவர் எழுத்தாளர் மட்டுமன்றி பேச்சாளர், கவிஞர் ,கதைசொல்லி, திரைப்பட நடிகர், பதிப்பாளர், அரசியலாளர் என பன்முகத் தன்மை கொண்டவர். பவா செல்லத்துரை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தலைவர்களில் ஒருவர். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துடன் இணைந்து திருவண்ணாமலையில் களப்பணி, இலக்கியப்பணி, இலக்கியக் கருத்தரங்குகள், பயிலரங்குகள், கண்காட்சிகள் நூற்றுக்கும் மேலாக நடத்தியுள்ளார்.

பிறப்பு

https://bavachelladurai.blogspot.com/2019/10/1.html
நன்றி bavachelladurai.blogspot.com

பவா. செல்லதுரை ஆசிரியர் தனக்கோட்டி அய்யாவிற்கும், தனம்மாளுக்கும் பதினாறு ஆண்டுகால காத்திருப்பிற்குப் பிறகு 1965 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 27 ல் திருவண்ணாமலையில் பிறந்தார்.  

கல்வி, இளமை

பவா. செல்லதுரை திருவண்ணாமலையிலுள்ள சாரோன் போர்டிங் பள்ளியில் தனது தொடக்ககால பள்ளிப் படிப்பை நிறைவு செய்து, டேனிஷ் மிஷன் மேல்நிலைப்பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு வரை தொடர்ந்தார்.  திண்டிவனம் அரசினர் கலைக்கல்லூரியில் பி. காம் பட்டப் படிப்பு பயின்றார். அவருடைய தந்தை ஆசிரியர். அதனால் பவாவின் பள்ளிப் பருவம் பல்வேறு ஊர்களில் கழிந்தது. அந்த அனுபவம் பல திறப்புகளைத் தந்தது. ஜெயகாந்தனின் ‘ஒரு மனிதனும் சில எருமைமாடுகளும்’ நாவலை வாசித்த தாக்கத்தில் ஒரு நாவலை எழுதினார். ‘உறவுகள் பேசுகிறது’ என்ற தலைப்பிலான அந்நாவல் திருவண்ணாமலையிலிருந்து வெளிவந்த ‘தீபஜோதி’ இதழில் வெளியானது. அப்போது பவா செல்லத்துரைக்கு வயது 16. பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார்.

முதல் நாவல் வெளிவந்த பெருமிதம், சக மாணவர்கள் அளித்த ஊக்கம், ‘வசந்தம்’ என்ற கையெழுத்துப் பிரதி நடத்திய அனுபவம் எல்லாம் சேரவே, அவர் தொடர்ந்து எழுதினார். நண்பர் உதயசங்கருடனான நட்பும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துடனான தொடர்பும் தீவிர இலக்கிய வாசிப்புக்கு வழிவகுத்தன.. புதுமைப்பித்தன், வண்ணதாசன், வண்ணநிலவன் என தேடித்தேடி வாசித்தார். மேடைகளில் வாசித்த, இதழ்களில் எழுதிய கவிதைகளைத் தொகுத்து ஒரு தொகுப்பு வெளியிட்டார். கந்தர்வன் அதற்கு முன்னுரை எழுதினார். கி.ரா., தி.க.சி.,வண்ணநிலவன் எனப் பலரது பாராட்டுக்களை அத்தொகுப்பு பெற்றது. அந்த ஊக்கத்தில் பல சிறுகதைகளையும், கவிதைகளையும் தொடர்ந்து எழுத ஆரம்பித்தார்.

குடும்பம்

உசாவுத்துணை

https://www.tamilwriters.in/2021/06/blog-post_46.html

https://sanjigai.wordpress.com/2013/06/16/%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/

https://siliconshelf.wordpress.com/2019/02/24/%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/

https://kanali.in/interview-with-bavachelladurai/

https://www.sramakrishnan.com/%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/

https://amuttu.net/2019/12/28/%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%A4/

http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=12639

https://ta.quora.com/%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D

https://vallinam.com.my/version2/?p=5645

https://vallinam.com.my/version2/?p=5645

https://tamil.indianexpress.com/literature/bava-chelladurai-writer-story-teller-interview-168212/

🔏Being Created

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.