under review

பழனிசாமி குமரன் தமிழ்ப்பள்ளி: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(Changed incorrect text:  )
 
(7 intermediate revisions by 4 users not shown)
Line 1: Line 1:
பழனிசாமி குமரன் தமிழ்ப்பள்ளி கெடா மாநிலத்தின் கோலாமூடா மாவட்டத்தில் அமைந்திருக்கும் தமிழ்ப்பள்ளியாகும். இப்பள்ளியின் பதிவு எண் KBD3096. பழனிசாமி குமரன் தமிழ்ப்பள்ளி முன்னர் சுங்கை டிவிசன் தோட்டத்தமிழ்ப்பள்ளி என அறியப்பட்டது.  
பழனிசாமி குமரன் தமிழ்ப்பள்ளி மலேசியாவின் கெடா மாநிலத்தின் கோலாமூடா மாவட்டத்தில் அமைந்திருக்கும் தமிழ்ப்பள்ளி. இப்பள்ளியின் பதிவு எண் KBD3096. பழனிசாமி குமரன் தமிழ்ப்பள்ளி முன்னர் சுங்கை டிவிசன் தோட்டத்தமிழ்ப்பள்ளி என அறியப்பட்டது.  
[[File:பள்ளிச்சின்னம் 2.jpg|thumb|பள்ளிச்சின்னம்]]
[[File:பள்ளிச்சின்னம் 2.jpg|thumb|பள்ளிச்சின்னம்]]

=== பள்ளி வரலாறு ===
===பள்ளி வரலாறு===
சுங்கை டிவிசன் தமிழ்ப்பள்ளி 1948 ஆம் ஆண்டு 56 மாணவர்களுடன்  தொடங்கப்பட்டது. சுங்கைத் தோட்டத்தின் உரிமையாளரான பெருநிலக்கிழார் என்.டி.எஸ் ஆறுமுகம் பிள்ளை அளித்த நிலத்தில் இப்பள்ளி கட்டப்பட்டது. தொடக்கக்காலக்கட்டத்தில் அதிகமான  பெற்றோர்கள் பள்ளிக்குப் பிள்ளைகளை அனுப்ப மறுத்திருக்கின்றனர். அப்போதைய பள்ளி தலைமையாசிரியர் திரு கோவிந்தசாமி தோட்டத்தில் வீடுதோறும் சென்று  பெற்றோர்களை வற்புறுத்தி மாணவர்களைப் பள்ளிக்கு அனுப்பச் செய்திருக்கிறார்.
சுங்கை டிவிசன் தமிழ்ப்பள்ளி 1948-ல் ஆண்டு 56 மாணவர்களுடன் தொடங்கப்பட்டது. சுங்கைத் தோட்டத்தின் உரிமையாளரான பெருநிலக்கிழார் என்.டி.எஸ் ஆறுமுகம் பிள்ளை அளித்த நிலத்தில் இப்பள்ளி கட்டப்பட்டது. தொடக்கக்காலக்கட்டத்தில் அதிகமான பெற்றோர்கள் பள்ளிக்குப் பிள்ளைகளை அனுப்ப மறுத்திருக்கின்றனர். அப்போதைய பள்ளி தலைமையாசிரியர் திரு கோவிந்தசாமி தோட்டத்தில் வீடுதோறும் சென்று பெற்றோர்களை வற்புறுத்தி மாணவர்களைப் பள்ளிக்கு அனுப்பச் செய்திருக்கிறார்.

=== கட்டட வரலாறு ===
===கட்டிட வரலாறு===
1970 களில் பக்கத்துத் தோட்டங்களில் இருந்து அதிகமானோர் சுங்கை தோட்டத்துக்குக் குடிபெயரத் தொடங்கினர். இதனால் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்தது. பள்ளியில் வகுப்பறை பற்றாக்குறை இருந்த காரணத்தால், அருகிலிருந்த கோவிலிலும் காலி வீட்டிலும் கூடுதல் வகுப்பறைகள் செயற்படத் தொடங்கின. மேலும், மாணவர் எண்ணிக்கை அதிகரித்ததால் பள்ளி காலை, மாலை என இருவேளைப்பள்ளியாகச் செயற்படத் தொடங்கியது.
1970-களில் பக்கத்துத் தோட்டங்களில் இருந்து அதிகமானோர் சுங்கை தோட்டத்துக்குக் குடிபெயரத் தொடங்கினர். இதனால் பழனிசாமி குமரன் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்தது. பள்ளியில் வகுப்பறை பற்றாக்குறை இருந்த காரணத்தால், அருகிலிருந்த கோவிலிலும் காலி வீட்டிலும் கூடுதல் வகுப்பறைகள் செயற்படத் தொடங்கின. மேலும், மாணவர் எண்ணிக்கை அதிகரித்ததால் பள்ளி காலை, மாலை என இருவேளைப்பள்ளியாகச் செயல்படத் தொடங்கியது.

1990 ஆம் ஆண்டு அப்போதைய கெடா மாநில முதலமைச்சர் டத்தோ படுக்கா ஒஸ்மான் அரோப் பள்ளி கூடுதல் கட்டிடம் பெற ரி.ம 40000 ஐ மானியமாகத் தந்தார். அந்த நிதி ஒதுக்கீட்டைக் கொண்டு பள்ளிக்கு இணைக்கட்டடம் கட்டப்பட்டது. 1998 ஆம் ஆண்டு அரசு அளித்த ரி.ம 23000 நிதி ஒதுக்கீட்டைக் கொண்டு இன்னும் ஒரு இணைக்கட்டடம் எழுப்பப்பட்டது. அதே ஆண்டு ம.இ.கா மெர்போக் தொகுதி அளித்த நிதியைக் கொண்டு தலைமையாசிரியர் அறை எழுப்பப்பட்டது.
1990-ம் ஆண்டு அப்போதைய கெடா மாநில முதலமைச்சர் டத்தோ படுக்கா ஒஸ்மான் அரோப் பள்ளி கூடுதல் கட்டிடம் பெற ரி.ம 40000-ஐ மானியமாகத் தந்தார். அந்த நிதி ஒதுக்கீட்டைக் கொண்டு பள்ளிக்கு இணைக்கட்டிடம் கட்டப்பட்டது. 1998-ம் ஆண்டு அரசு அளித்த ரி.ம 23000 நிதி ஒதுக்கீட்டைக் கொண்டு இன்னும் ஒரு இணைக்கட்டிடம் எழுப்பப்பட்டது. அதே ஆண்டு ம.இ.கா மெர்போக் தொகுதி அளித்த நிதியைக் கொண்டு தலைமையாசிரியர் அறை எழுப்பப்பட்டது.
[[File:8877385 5F6PB hezlSyPIgAU-p4xn1HaXOJN3uzk85nAqFSin8.jpg|thumb|பள்ளிப் புதியக்கட்டடம்]]
[[File:8877385 5F6PB hezlSyPIgAU-p4xn1HaXOJN3uzk85nAqFSin8.jpg|thumb|பள்ளி புதிய கட்டிடம்]]
2010 ஆம் ஆண்டு பள்ளியின் முன்னாள் மாணவரான மருத்துவர் குப்புவேலுமணியின் தந்தை திரு பழனிசாமி குமரன் பள்ளி புதிய கட்டடம் எழுப்ப 5 ஏக்கர் நிலத்தைத் தந்தார். பழைய பள்ளிக்கட்டடம் அமைந்திருந்த பகுதியிலிருந்து 200 மீட்டர் தொலைவில் புதிய நிலம் அமைந்திருக்கிறது. பள்ளிக்கு நிலத்தைத் தந்த திரு பழனிசாமி குமரனின் நினைவாகப் பள்ளிக்கும் பழனிசாமி குமரன் தமிழ்ப்பள்ளி எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. டிசம்பர் 2010 ஆம் ஆண்டு தொடங்கியக் கட்டடப்பணிகள் அக்டோபர் 2011 ஆம் ஆண்டு நிறைவுபெற்றது. 12 வகுப்பறைகளும் சிற்றுண்டிச்சாலையும் கொண்ட புதியக்கட்டடம் நடுவண் அரசின் ரி.ம 16.6 லட்சம் நிதியுதவியுடன் கட்டப்பட்டது.  2013 ஜூன் மாதம் பள்ளியின் புதியக்கட்டடத்தை அப்போதைய நலவாழ்வுத்துறை அமைச்சர் டத்தோ டாக்டர் சுப்பிரமணியம் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார். 2015 ஆம் ஆண்டு தோட்டத்துக்கருகே செயற்பட்டுவந்த தியோங் ஹுவாட் ரப்பர் நிறுவனத்தின் உதவியுடன் கார் நிறுத்துமிடம் கட்டப்பட்டது. 2016 ஆம் ஆண்டு தியோங் ஹுவாட் ரப்பர் நிறுவனத்தின் உதவியால் 8 வகுப்பறைகள் கொண்ட புதிய இணைக்கட்டடம் எழுப்பப்பட்டது.  
2010-ம் ஆண்டு பள்ளியின் முன்னாள் மாணவரான மருத்துவர் குப்புவேலுமணியின் தந்தை திரு பழனிசாமி குமரன் பள்ளி புதிய கட்டிடம் எழுப்ப 5 ஏக்கர் நிலத்தைத் தந்தார். பழைய பள்ளிக்கட்டிடம் அமைந்திருந்த பகுதியிலிருந்து 200 மீட்டர் தொலைவில் புதிய நிலம் அமைந்திருக்கிறது. பள்ளிக்கு நிலத்தைத் தந்த திரு பழனிசாமி குமரனின் நினைவாகப் பள்ளிக்கும் பழனிசாமி குமரன் தமிழ்ப்பள்ளி எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. டிசம்பர் 2010-ம் ஆண்டு தொடங்கியக் கட்டிடப்பணிகள் அக்டோபர் 2011-ல் நிறைவுபெற்றது. 12 வகுப்பறைகளும் சிற்றுண்டிச்சாலையும் கொண்ட புதிய கட்டிடம் நடுவண் அரசின் ரி.ம 16.6 லட்சம் நிதியுதவியுடன் கட்டப்பட்டது. ஜூன் 2013-ல் பள்ளியின் புதிய கட்டிடத்தை அப்போதைய நலவாழ்வுத்துறை அமைச்சர் டத்தோ டாக்டர் சுப்பிரமணியம் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார். 2015 -ம் ஆண்டு தோட்டத்துக்கருகே செயற்பட்டுவந்த தியோங் ஹுவாட் ரப்பர் நிறுவனத்தின் உதவியுடன் கார் நிறுத்துமிடம் கட்டப்பட்டது. 2016-ம் ஆண்டு தியோங் ஹுவாட் ரப்பர் நிறுவனத்தின் உதவியால் 8 வகுப்பறைகள் கொண்ட புதிய இணைக்கட்டிடம் எழுப்பப்பட்டது.  

=== பள்ளித் தலைமையாசிரியர் பட்டியல் ===
===பள்ளித் தலைமையாசிரியர் பட்டியல்===
{| class="wikitable"
{| class="wikitable"
|+
|+
Line 18: Line 18:
!பணியாற்றிய ஆண்டு
!பணியாற்றிய ஆண்டு
|-
|-
|திரு துரைசாமி  
|திரு துரைசாமி
|1946 - 1957
|1946 - 1957
|-
|-
|திரு கணேசன்  
|திரு கணேசன்
|1958 - 31.12.1975
|1958 - 31.12.1975
|-
|-
|திரு. அப்துல் ஹமிட்  
|திரு. அப்துல் ஹமிட்
 
|01.01.1976 - 15.03.1984
|01.01.1976 - 15.03.1984
|-
|-
|திரு ஆர்.கே சுந்தரம்  
|திரு ஆர்.கே சுந்தரம்
|16.03.1984 - 1986
|16.03.1984 - 1986
|-
|-
|திரு தெய்வசகாயம்  
|திரு தெய்வசகாயம்
|1987 - 1990
|1987 - 1990
|-
|-
|திரு எம்.கோவிந்தன்  
|திரு எம்.கோவிந்தன்
|1991 - 1993
|1991 - 1993
|-
|-
|திரு.பி.எஸ்.ராஜராம்  
|திரு.பி.எஸ்.ராஜராம்
|1993 - 1996
|1993 - 1996
|-
|-
|திரு சடையன்  
|திரு சடையன்
|1996 - 1998
|1996 - 1998
|-
|-
|திரு தெய்வசகாயம்  
|திரு தெய்வசகாயம்
|1998 - 1999
|1998 - 1999  
|-
|-
|திரு எஸ். ஆறுமுகம்  
|திரு எஸ். ஆறுமுகம்
|1999 - 30.06.2003
|1999 - ஜூன் 30, 2003
|-
|-
|திருமதி தேவி  
|திருமதி தேவி
|01.07.2003 - 15.08.2004
 
|ஜூலை 1, 2003 - ஆகஸ்ட் 15, 2004
|-
|-
|திரு முனியாண்டி  
|திரு முனியாண்டி
|16.08.2004 – 31.12.2010
|ஆகஸ்ட் 16, 2004 – டிசம்பர் 31, 2010
|-
|-
|திரு எஸ்.கலைச்செல்வம்  
|திரு எஸ்.கலைச்செல்வம்
|01.01.2011-28.02.2015
|ஜனவரி 01, 2011-பிப்ரவரி 28, 2015
|-
|-
|திருமதி கே.சரோஜினி  
|திருமதி கே.சரோஜினி
|01.03.2015-15.11.2019
|மார்ச் 1, 2015- நவம்பர் 15, 2019
|-
|-
|திருமதி ராஜம்மா  
|திருமதி ராஜம்மா
|   16.11.2019-
|நவம்பர்16, 2019 முதல்
|}
|}

=== பள்ளி முகவரி ===
===பள்ளி முகவரி ===
<poem>
Sekolah Jenis Kebangsaan (Tamil) Palanisamy Kumaran
Sekolah Jenis Kebangsaan (Tamil) Palanisamy Kumaran
Bahagian Sungai Peti Surat 63
Bahagian Sungai Peti Surat 63
08007 Sungai Petani
08007 Sungai Petani
Kedah Darul Aman, Malaysia
Kedah Darul Aman, Malaysia
 
</poem>
=== உசாத்துணை ===
===உசாத்துணை===
 
* [https://sjktpalanisamy.blogspot.com/2010/12/upacara-perletakan-batu-asas-di-tapak.html பள்ளி வலைத்தளம்]
* [https://sjktpalanisamy.blogspot.com/2010/12/upacara-perletakan-batu-asas-di-tapak.html பள்ளி வலைத்தளம்]
* மலேசியாவில் 200 ஆண்டுகள் தமிழ்க்கல்வியின் மேம்புகழ் (2016).

* மலேசியாவில் 200 ஆண்டுகள் தமிழ்க்கல்வியின் மேம்புகழ் (2016).
{{Finalised}}
{{Ready for review}}
[[Category:Tamil Content]]
[[Category:மலேசிய பண்பாடு]]
[[Category:மலேசிய பண்பாடு]]
[[Category:Tamil Content]]
[[Category:Being Created]]

Latest revision as of 13:48, 7 March 2024

பழனிசாமி குமரன் தமிழ்ப்பள்ளி மலேசியாவின் கெடா மாநிலத்தின் கோலாமூடா மாவட்டத்தில் அமைந்திருக்கும் தமிழ்ப்பள்ளி. இப்பள்ளியின் பதிவு எண் KBD3096. பழனிசாமி குமரன் தமிழ்ப்பள்ளி முன்னர் சுங்கை டிவிசன் தோட்டத்தமிழ்ப்பள்ளி என அறியப்பட்டது.

பள்ளிச்சின்னம்

பள்ளி வரலாறு

சுங்கை டிவிசன் தமிழ்ப்பள்ளி 1948-ல் ஆண்டு 56 மாணவர்களுடன் தொடங்கப்பட்டது. சுங்கைத் தோட்டத்தின் உரிமையாளரான பெருநிலக்கிழார் என்.டி.எஸ் ஆறுமுகம் பிள்ளை அளித்த நிலத்தில் இப்பள்ளி கட்டப்பட்டது. தொடக்கக்காலக்கட்டத்தில் அதிகமான பெற்றோர்கள் பள்ளிக்குப் பிள்ளைகளை அனுப்ப மறுத்திருக்கின்றனர். அப்போதைய பள்ளி தலைமையாசிரியர் திரு கோவிந்தசாமி தோட்டத்தில் வீடுதோறும் சென்று பெற்றோர்களை வற்புறுத்தி மாணவர்களைப் பள்ளிக்கு அனுப்பச் செய்திருக்கிறார்.

கட்டிட வரலாறு

1970-களில் பக்கத்துத் தோட்டங்களில் இருந்து அதிகமானோர் சுங்கை தோட்டத்துக்குக் குடிபெயரத் தொடங்கினர். இதனால் பழனிசாமி குமரன் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்தது. பள்ளியில் வகுப்பறை பற்றாக்குறை இருந்த காரணத்தால், அருகிலிருந்த கோவிலிலும் காலி வீட்டிலும் கூடுதல் வகுப்பறைகள் செயற்படத் தொடங்கின. மேலும், மாணவர் எண்ணிக்கை அதிகரித்ததால் பள்ளி காலை, மாலை என இருவேளைப்பள்ளியாகச் செயல்படத் தொடங்கியது.

1990-ம் ஆண்டு அப்போதைய கெடா மாநில முதலமைச்சர் டத்தோ படுக்கா ஒஸ்மான் அரோப் பள்ளி கூடுதல் கட்டிடம் பெற ரி.ம 40000-ஐ மானியமாகத் தந்தார். அந்த நிதி ஒதுக்கீட்டைக் கொண்டு பள்ளிக்கு இணைக்கட்டிடம் கட்டப்பட்டது. 1998-ம் ஆண்டு அரசு அளித்த ரி.ம 23000 நிதி ஒதுக்கீட்டைக் கொண்டு இன்னும் ஒரு இணைக்கட்டிடம் எழுப்பப்பட்டது. அதே ஆண்டு ம.இ.கா மெர்போக் தொகுதி அளித்த நிதியைக் கொண்டு தலைமையாசிரியர் அறை எழுப்பப்பட்டது.

பள்ளி புதிய கட்டிடம்

2010-ம் ஆண்டு பள்ளியின் முன்னாள் மாணவரான மருத்துவர் குப்புவேலுமணியின் தந்தை திரு பழனிசாமி குமரன் பள்ளி புதிய கட்டிடம் எழுப்ப 5 ஏக்கர் நிலத்தைத் தந்தார். பழைய பள்ளிக்கட்டிடம் அமைந்திருந்த பகுதியிலிருந்து 200 மீட்டர் தொலைவில் புதிய நிலம் அமைந்திருக்கிறது. பள்ளிக்கு நிலத்தைத் தந்த திரு பழனிசாமி குமரனின் நினைவாகப் பள்ளிக்கும் பழனிசாமி குமரன் தமிழ்ப்பள்ளி எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. டிசம்பர் 2010-ம் ஆண்டு தொடங்கியக் கட்டிடப்பணிகள் அக்டோபர் 2011-ல் நிறைவுபெற்றது. 12 வகுப்பறைகளும் சிற்றுண்டிச்சாலையும் கொண்ட புதிய கட்டிடம் நடுவண் அரசின் ரி.ம 16.6 லட்சம் நிதியுதவியுடன் கட்டப்பட்டது. ஜூன் 2013-ல் பள்ளியின் புதிய கட்டிடத்தை அப்போதைய நலவாழ்வுத்துறை அமைச்சர் டத்தோ டாக்டர் சுப்பிரமணியம் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார். 2015 -ம் ஆண்டு தோட்டத்துக்கருகே செயற்பட்டுவந்த தியோங் ஹுவாட் ரப்பர் நிறுவனத்தின் உதவியுடன் கார் நிறுத்துமிடம் கட்டப்பட்டது. 2016-ம் ஆண்டு தியோங் ஹுவாட் ரப்பர் நிறுவனத்தின் உதவியால் 8 வகுப்பறைகள் கொண்ட புதிய இணைக்கட்டிடம் எழுப்பப்பட்டது.

பள்ளித் தலைமையாசிரியர் பட்டியல்

தலைமையாசிரியர் பணியாற்றிய ஆண்டு
திரு துரைசாமி 1946 - 1957
திரு கணேசன் 1958 - 31.12.1975
திரு. அப்துல் ஹமிட் 01.01.1976 - 15.03.1984
திரு ஆர்.கே சுந்தரம் 16.03.1984 - 1986
திரு தெய்வசகாயம் 1987 - 1990
திரு எம்.கோவிந்தன் 1991 - 1993
திரு.பி.எஸ்.ராஜராம் 1993 - 1996
திரு சடையன் 1996 - 1998
திரு தெய்வசகாயம் 1998 - 1999
திரு எஸ். ஆறுமுகம் 1999 - ஜூன் 30, 2003
திருமதி தேவி ஜூலை 1, 2003 - ஆகஸ்ட் 15, 2004
திரு முனியாண்டி ஆகஸ்ட் 16, 2004 – டிசம்பர் 31, 2010
திரு எஸ்.கலைச்செல்வம் ஜனவரி 01, 2011-பிப்ரவரி 28, 2015
திருமதி கே.சரோஜினி மார்ச் 1, 2015- நவம்பர் 15, 2019
திருமதி ராஜம்மா நவம்பர்16, 2019 முதல்

பள்ளி முகவரி

Sekolah Jenis Kebangsaan (Tamil) Palanisamy Kumaran
Bahagian Sungai Peti Surat 63
08007 Sungai Petani
Kedah Darul Aman, Malaysia

உசாத்துணை

✅Finalised Page