பழநிபாரதி

From Tamil Wiki
Revision as of 21:19, 13 January 2024 by ASN (talk | contribs) (Page Created by ASN)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
கவிஞர், திரைப்பாடலாசிரியர் பழநிபாரதி

பழநிபாரதி (பழ. பாரதி) (பிறப்பு: ஜூலை 14, 1966) கவிஞர், திரைப்படப் பாடலாசிரியர். இதழாளராகப் பணியாற்றினார். தமிழக அரசின் கலைமாமணி விருது, மகாகவி பாரதியார் விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றார். தமிழ்த் திரையுலகின் குறிப்பிடத்தகுந்த பாடலாசிரியர்களுள் ஒருவர்.

பிறப்பு, கல்வி

பழநிபாரதி, சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள செக்காலையில், ஜூலை 14, 1966 அன்று, சாமி பழநியப்பன் – கமலா இணையருக்குப் பிறந்தார்.  இயற்பெயர் பழ. பாரதி. கவிஞர் அறிவுமதி பழநிபாரதி என்ற பெயரைச் சூட்டினார். பழநிபாரதி, சென்னை மாநகராட்சிப் பள்ளியில் தொடக்கக் கல்வி கற்றார். கோடம்பாக்கத்தில் உள்ள கணபதி மேல்நிலைப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்தார். இளங்கலை படிப்பில் சேர்ந்து ஓராண்டிலேயே இடை நின்றார்.

தனி வாழ்க்கை

பழநிபாரதி, சுதந்திர எழுத்தாளர். கவிஞர். திரைப்படப் பாடலாசிரியர்.