under review

பரந்தாமன்: Difference between revisions

From Tamil Wiki
(Corrected error in line feed character)
(Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
 
Line 7: Line 7:
பரந்தாமன் இளமையில் ருக்மிணி என்னும் பெண்ணை காதலித்தார். விழாக்களில் நடனமாடும் அப்பெண்ணை மணக்க அவர் அன்னை ஒப்புக்கொள்ளவில்லை. பரந்தாமன் சென்னைக்குச் சென்றுவிட ருக்மிணி தற்கொலை செய்துகொண்டார், இதை அவர் தீராநதி இதழுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிடுகிறார்.

பரந்தாமன் 1966-ல் சத்யபாமாவை மணந்தார். நந்தலாலா என்ற மகனும், சுருதி என்ற மகளும் உள்ளனர். நந்தலாலா திரைப்படத் துறையில் உள்ளார். இவர் 2009-இல் "நரகம்’ என்ற குறும்படத் தயாரிப்புக்கு சர்வதேச விருது பெற்றுள்ளார்.  
பரந்தாமன் 1966-ல் சத்யபாமாவை மணந்தார். நந்தலாலா என்ற மகனும், சுருதி என்ற மகளும் உள்ளனர். நந்தலாலா திரைப்படத் துறையில் உள்ளார். இவர் 2009-ல் "நரகம்’ என்ற குறும்படத் தயாரிப்புக்கு சர்வதேச விருது பெற்றுள்ளார்.  
== இதழியல் ==
== இதழியல் ==
பரந்தாமன் 1972-ல் [[அஃக்]] என்னும் சிற்றிதழை தொடங்கினார். 1980 வரை அவ்விதழ் வெளிவந்தது.
பரந்தாமன் 1972-ல் [[அஃக்]] என்னும் சிற்றிதழை தொடங்கினார். 1980 வரை அவ்விதழ் வெளிவந்தது.

Latest revision as of 09:18, 24 February 2024

பரந்தாமன்

பரந்தாமன் (அஃக் பரந்தாமன்) (1940 - ஜூலை 22, 2017) தமிழில் சிற்றிதழ் நடத்திய இலக்கியச் செயல்பாட்டாளர். அச்சுத்தொழில் வல்லுநர். திரைப்பட ஆர்வம் கொண்டிருந்தார்.

பிறப்பு, கல்வி

சேலம் ஜாகீர் அம்மாபாளையத்தில் நல்லாக் கவுண்டர், லட்சுமி தம்பதிக்கு 1940-ல் பிறந்தவர் பரந்தாமன். சேலம் சிறுமலர் பள்ளியில் உயர்நிலை வகுப்பு வரை பயின்றார். பள்ளி நாட்களில் வானம், குறிஞ்சி ஆகிய கையெழுத்துப் பத்திரிகைகளை நடத்தியுள்ளார். ஓவியம் வரைவதிலும், கால் பந்தாட்டத்திலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். பள்ளிநாட்களில் கல்கண்டு ஆசிரியர் தமிழ்வாணன் கையெழுத்திட்டு அனுப்பிய கடிதம் மூலம் பத்திரிகைத் துறை மீது அதீத ஆர்வம் ஏற்பட்டது. இளமையில் தந்தை மறையவே அன்னை ஆலையில் வேலைபார்த்து பரந்தாமனை வளர்த்தார்

தனிவாழ்க்கை

பரந்தாமன்

பரந்தாமன் இளமையில் ருக்மிணி என்னும் பெண்ணை காதலித்தார். விழாக்களில் நடனமாடும் அப்பெண்ணை மணக்க அவர் அன்னை ஒப்புக்கொள்ளவில்லை. பரந்தாமன் சென்னைக்குச் சென்றுவிட ருக்மிணி தற்கொலை செய்துகொண்டார், இதை அவர் தீராநதி இதழுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிடுகிறார்.

பரந்தாமன் 1966-ல் சத்யபாமாவை மணந்தார். நந்தலாலா என்ற மகனும், சுருதி என்ற மகளும் உள்ளனர். நந்தலாலா திரைப்படத் துறையில் உள்ளார். இவர் 2009-ல் "நரகம்’ என்ற குறும்படத் தயாரிப்புக்கு சர்வதேச விருது பெற்றுள்ளார்.

இதழியல்

பரந்தாமன் 1972-ல் அஃக் என்னும் சிற்றிதழை தொடங்கினார். 1980 வரை அவ்விதழ் வெளிவந்தது.

திரைத்துறை

பரந்தாமன் திரைப்பட இயக்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார். ஜெயகாந்தனின் உன்னைப்போல் ஒருவன் படத்தை சேலத்தில் வெளியிட்டார். ’வந்தவர்கள் போகிறார்கள்’ என்னும் திரைக்கதையை திரைப்படமாக எடுக்க பல ஆண்டுகள் முயன்றார்

விருதுகள்

  • 1976-ல் அஃக் சார்பில் பிருந்தாவனம் அச்சகத்தில் இருந்து வெளிவந்த வண்ணதாசனின் "கலைக்க முடியாத ஒப்பனைகள்’ சிறுகதைத் தொகுப்புக்கு அச்சுக்காகவும், வெளியீட்டுக்காவும் இரண்டு தேசிய விருதுகள் பெற்றார்
  • அஃக் சிறு பத்திரிகை அச்சுக்காகவும், வெளியீட்டுக்காக என இரண்டு தேசிய விருதுகள் பெற்றார்.

மறைவு

இறுதிக்காலத்தில் உளப்பிறழ்வுக்கு ஆளாகி சென்னை மதுரவாயலில் உள்ள காப்பகத்தில் தங்கியிருந்த பரந்தாமன் ஜூலை 22, 2017-ல் மறைந்தார்.

உசாத்துணை

✅Finalised Page