under review

பம்மல் விஜயரங்க முதலியார்

From Tamil Wiki
Revision as of 20:35, 11 August 2023 by Jeyamohan (talk | contribs)
பம்மல் விஜயரங்க முதலியார்

பம்மல் விஜயரங்க முதலியார் (மார்ச் 1, 1830 - 1895) (மற்ற பெயர்கள்: பம்மல் விசயரங்க முதலியார், பம்மல் விசயரங்கனார்) பள்ளிகளுக்கு தேவையான தமிழ்ப் பாடநூல்களை அச்சிட்டு வெளியிட்டதில் முக்கியப் பங்காற்றினார்.

பிறப்பு மற்றும் கல்வி

விஜயரங்க முதலியார் சென்னையில் மார்ச் 1, 1830 அன்று பிறந்தார். பச்சையப்ப முதலியார் தொடக்கப்பள்ளியில் தொடங்கி சென்னை ராஜாஸ்தானி பள்ளியில் உயர் நிலைப்பள்ளி முடித்தார். பள்ளி இறுதியாண்டுத்தேர்வில் இரண்டாவதாக தேறியதற்காக அரசின் பொன் மோதிரம் ஒன்றைப்பரிசாக வென்றார்.

தனி வாழ்க்கை

பம்மல் விஜயரங்க முதலியார் மாணிக்க வேலம்மளைத் திருமணம் செய்து கொண்டார். அவரது மகன் தமிழ்நாடத்துறையின் முன்னோடியான பம்மல் சம்பந்த முதலியார்.

பணிகள்

பம்மல் விஜயரங்க முதலியார் 1851-ஆம் ஆண்டு இராபர்ட்சன் என்பவர் எழுதிய அமெரிக்க நாட்டு வரலாற்று நூலை தமிழில் மொழிபெயர்த்து 1852-ஆம் ஆண்டு வெளியிட்டார். இதற்காக பச்சையப்ப முதலியார் பரிசைப்பெற்றார்.

பம்மல் விஜயரங்க முதலியார் அரசினர் கல்லூரியில் தமிழாசிரியராக சிலகாலம் பணியாற்றி பின் பள்ளிகளின் துணைக்கண்காணிப்பாளராக மதுரை, திண்டுக்கல் முதலிய ஊர்களில் பணிபுரிந்தார். பின் 1890 வரை சென்னையில் பணி புரிந்து ஓய்வுபெற்றார்.

நூல்கள்

பம்மல் விஜயரங்க முதலியார் பள்ளிகளுக்கு தேவையான தமிழ் நூல்களை. பதிப்பித்தார் மேலும் பல தமிழ் நூல்கள் வெளிவருவதில் துணைபுரிந்தார். மூன்றாம் வகுப்பு நூல் ஒன்றை அச்சிட்டு வெளியிட்டார்.

சமுதாயப்பணிகள்

பம்மல் விஜயரங்க முதலியார் சென்னைப்பல்கலைக்கழக உறுப்பினராக சில காலம் பணியாற்றினார். சென்னையில் விஜயநகர மன்னர் உருவாக்கிய நான்கு பெண்கள் பள்ளிகளுக்கு ஊதியமில்லாமல் பணி புரிந்தார். ஆசிரியப்பணி தேர்வுக்குழுவுக்கு சிலகாலம் ஆலோசகராக இருந்தார். தொண்டை மண்டலம் துளுவ வேளாளர் பள்ளியில் சில காலம் பணிபுரிந்துள்ளார்.

பம்மல் விஜயரங்க முதலியார் சென்னை ஏகாம்பரநாதர் கோவில், காஞ்சி ஏகாம்பரநாதர் கோவில் மற்றும் திருவேட்டீச்சுரர் கோவில்களுக்கு அறங்காவலராக இருந்தார்.

இறப்பு

விஜயரங்க முதலியார் 1895-ஆம் ஆண்டு மறைந்தார்.

இலக்கிய இடம்

பம்மல் விஜயரங்க முதலியார் தமிழ்ப்புலவர்களை ஆதரித்த வள்ளல் என்னும் நிலையிலும், சைவ மறுமலர்ச்சிக்கு பாடுபட்டவர் என்னும் நிலையிலும், தமிழ்வழிக் கல்விக்கான நூல்களை பதிப்பித்த கல்வியாளர் என்னும் நிலையிலும் வரலாற்று இடம் உடையவர்

உசாத்துணை


✅Finalised Page