under review

பன்னிரு ஜோதிர்லிங்கத் தலங்கள்

From Tamil Wiki
Revision as of 04:29, 27 December 2023 by Tamizhkalai (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
பன்னிரு ஜோதிர்லிங்கத் தலங்கள்

சிவபெருமான் ஒளிவடிவில் காட்சி அளித்த தலங்கள் ஜோதிர்லிங்கத் தலங்கள். இவற்றின் எண்ணிக்கை 12. இவை இந்தியாவின் பல பகுதிகளில் அமைந்துள்ளன. ஜோதிர்லிங்கங்களின் எண்ணிக்கை மொத்தம் 64 என்றும், அவற்றில் முக்கியமானதும் சிறப்புப் பொருந்தியதாகவும் இருப்பவை 12 என்றும் கருதப்படுகிறது.

ஜோதிர்லிங்க வரலாறு

ஜோதிர்லிங்கங்கள், தாமே தோன்றிய சுயம்புலிங்கங்கள் என்பது தொன்மம். திருவாதிரை நட்சத்திர நன்னாளில் சிவபெருமான் தன்னை ஜோதிர்லிங்க வடிவில் வெளிப்படுத்தியதாக நம்பப்படுகிறது. திருவாதிரை நன்னாளில் சிவபக்தர்கள் ஜோதிர்லிங்கத் தலங்களை வழிபடுவது சிறப்பானதாகக் கருதப்படுகிறது.

ஜோதிர்லிங்கத் தலங்களின் சிறப்பு

சிவபக்தர்கள் பன்னிரு ஜோதிர்லிங்கத் தலங்களையும் அவசியம் தரிசிக்க வேண்டும் என்ற ஓர் நம்பிக்கை உள்ளது. பன்னிரு ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்று மட்டுமே தமிழ்நாட்டில் அமைந்துள்ளது. ராமேஸ்வரத்தில் உள்ள ராமேஸ்வரர் லிங்கம், பன்னிரு ஜோதிர் லிங்கங்களுள் ஒன்று.

ஜோதிர்லிங்கத் துதி

ஜோதிர்லிங்கங்கள் எவை எவை என்பது பற்றியும், அவற்றை வணங்குவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றியும் கீழ்காணும் துதி விளக்குகிறது. ஜோதிர்லிங்கத் தலங்களை வணங்குவதால், ஏழேழு ஜென்மங்களில் செய்த பாபங்கள் அனைத்தும் விலகும் என்று இத்துதி குறிப்பிடுகிறது.

சௌராஷ்ட்ரே சோமநாதம்ச ஸ்ரீசைலே மல்லிகார்ஜுனம்
உஜ்ஜயின்யாம் மஹாகாலம் ஓம்காரமாமலேஸ்வரம்
பரல்யம் வைத்யநாதஞ்ச டாகினியாம் பீம சங்கரம்
சேது பந்தேது ராமேசம், நாகேசம் தாருகவனே
வாரணஸ்யந்து விஸ்வேசம் த்ரயம்பகம் கௌதமீதடே
ஹிமாலயேது கேதாரம், க்ரிஷ்ணேசம்ச சிவாலயே
ஏதானி ஜ்யோதிர்லிங்கானி, சாயம் ப்ராதஹ் படேன்னரஹ
சப்த ஜென்ம கிருதம் பாபம் ஸ்மரணேன வினஷ்யதி

பன்னிரு ஜோதிர்லிங்கத் தலங்கள்

எண் ஜோதிர்லிங்கத்தின் பெயர் நகரம் மாநிலம்
1 சோமநாதேஸ்வரர் சோமநாதம் குஜராத்
2 மல்லிகார்ஜுனர் ஸ்ரீ சைலம் ஆந்திரப் பிரதேசம்
3 மகா காளேஸ்வரர் உஜ்ஜயினி மத்தியப் பிரதேசம்
4 ஓம்காரேஸ்வரர் இந்தூர் மத்தியப் பிரதேசம்
5 கேதாரீஸ்வரர் கேதர்நாத் உத்தராஞ்சல்
6 பீமசங்கரர் பூனா மகாராஷ்டிரா
7 விஸ்வேஸ்வரர் வாரணாசி உத்தரப்பிரதேசம்
8 திரியம்பகேஸ்வரர் நாசிக் மகாராஷ்டிரா
9 நாகநாதேஸ்வரர் ஔண்டா மகாராஷ்டிரா
10 வைத்தியநாதேஸ்வரர் பரளி மகாராஷ்டிரா
11 ராமேஸ்வரர் ராமேஸ்வரம் தமிழ்நாடு
12 குஷ்மேஸ்வரர் ஔரங்காபாத் மகாராஷ்டிரா

உசாத்துணை


✅Finalised Page