பத்துத் தூண் (மதுரை)

From Tamil Wiki
Revision as of 13:13, 14 June 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "பத்துத் தூண் (பொயு 1636) : மதுரையில் அமைந்துள்ள பத்து பெரிய கல்தூண்கள். இவை திருமலை நாயக்கர் காலகட்டத்தைச் சேர்ந்தவை. மதுரையில் திருமலைநாயக்கரின் தம்பி முத்தியாலு நாயக்கரின் அரண...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

பத்துத் தூண் (பொயு 1636) : மதுரையில் அமைந்துள்ள பத்து பெரிய கல்தூண்கள். இவை திருமலை நாயக்கர் காலகட்டத்தைச் சேர்ந்தவை. மதுரையில் திருமலைநாயக்கரின் தம்பி முத்தியாலு நாயக்கரின் அரண்மனையின் முகப்புத்தூண்கள் இவை என தொல்லியலாளர்கள் கருதுகிறார்கள்

இடம்

மதுரையில் மீனாட்சியம்மன் கோயில், திருமலை நாயக்கர் மகால் அருகே விளக்குத்தூண் என்னும் பகுதியில் கடைகள் அமைந்துள்ள இடுங்கலான சந்துக்குள் இந்த தூண்கள் நின்றிருக்கின்றன.

வரலாறு

மதுரையில் திருமலை நாயக்கர் கட்டிய சுவர்க்க விலாசம் என்னும் அரண்மனை இன்று திருமலைநாயக்கர் மகால் என அழைக்கப்படுகிறது. அந்த அரண்மனை வளாகத்தின் ஒருபகுதியாக திருமலை நாயக்கரின் தம்பி முத்தியாலு நாயக்கர் தங்குவதற்காக ரங்கவிலாசம் என்னும் அரண்மனை பொயு 1636ல் கட்டப்பட்டது. அந்த மாளிகையின் முகப்புத்தூண்கள்தான் பத்துத் தூண்கள் எனப்படுகின்றது. ரங்க விலாசத்தின் மற்றைய பகுதிகள் மறைந்துவிட்டன. சில ஆய்வாளர்கள், ரங்க விலாசம் கட்டி முடிக்கப்படவில்லை என்று கருதுகிறார்கள்

அமைப்பு

பத்துத்தூண்கள் ஒவ்வொன்றும் ஒரே உயரமானவை. சிற்பங்கள் ஏதும் இல்லாத உருண்டையான கருங்கற்களை அடுக்கி கட்டப்பட்டவை. ஒவ்வொரு தூணும் இருபது அடி உயரமும், ஐந்து அடி சுற்றளவும் கொண்டது. பொறியியலாளர் கூற்றுப்படி செங்கல்லாலும் சுதையாலும் ஆன ரங்கமகால் மாளிகையின் மொத்த எடையையும் சுமந்து அதை உறுதியாக மண்ணில் நிறுத்தும் பொருட்டே இந்த பத்துத் தூண்கள் அமைக்கப்பட்டன. இவற்றின் எடையே மாளிகையை நிலைநிறுத்தியது.

உசாத்துணை

பத்துத் தூண்கள் தமிழ் இணையநூலகம்