பத்தினிக்கோட்டம்

From Tamil Wiki
Revision as of 12:48, 19 June 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "thumb|பத்தினிக்கோட்டம் பத்தினிக்கோட்டம் ( ) ஜெகசிற்பியன் எழுதிய சரித்திர நாவல் == எழுத்து வெளியீடு == பத்தினிக் கோட்டம் நாவலின் முதல் பாகம் 1964 லும் இரண்டாம் பா...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
பத்தினிக்கோட்டம்

பத்தினிக்கோட்டம் ( ) ஜெகசிற்பியன் எழுதிய சரித்திர நாவல்

எழுத்து வெளியீடு

பத்தினிக் கோட்டம் நாவலின் முதல் பாகம் 1964 லும் இரண்டாம் பாகம் 1976 லும் வெளிவந்தது

பின்புலம்

சாளுக்கிய அரசன் முதலாம் விக்ரமாதித்யன் (பொயு 655–680) இரண்டாம் புலிகேசிக்குப்பின் ஆட்சிக்கு வந்தார். அப்போது சாளுக்கிய நாடு நரசிம்மவர்ம பல்லவனால் கைப்பற்றப்பட்டு பதிமூன்று ஆண்டுகளாகப் பல்லவர் ஆட்சியின் கீழ் இருந்தது. மேலைக் கங்க ஆட்சியாளரின் மகள் கங்கமகாதேவியை மணந்து அவர்களின் படையுதவியுடன் விக்ரமாதித்யன் வாதாபியை கைப்பற்றினார். தன் தாயாதிகளை ஒழித்து சாளுக்கிய அரசை வலுவாக நிநிலைநிறுத்தினார்.

விக்ரமாதித்யன் நரசிம்மவர்ம பல்லவனின் மகன் இரண்டாம் மகேந்திரவர்ம பல்லவனுடன் தொடர்ந்து எல்லைப்போர்களில் இருந்தார். அதன்பின் மகேந்திரவர்ம பல்லவனின் மகன் முதலாம் பரமேஸ்வர வர்மனுடன் போரிட்டார். பாண்டிய அரசன் அரிகேசரி பராங்குச மாறவர்மன் துணையுடன் பல்லவர்களை தாக்கினார். பல்லவர் தலைநகரமான காஞ்சீபுரத்தை கைப்பற்றி உறையூர் வரை படைகொண்டு வந்தார்.

பரமேஸ்வர வர்மன் காஞ்சிபுரத்தில் இருந்து அகன்று படைகளை திரட்டிக்கொண்டு விக்ரமாதித்யனின் நட்புநாடான கங்கநாட்டின் மேல் படையெடுத்துச் சென்று கங்கமன்னர் பூவிக்ரமனை விளாந்தை என்னும் இடத்தி பொயு 670 ல் நடந்த போரில் தோற்கடித்தார். அதன்பின் பொயு 674ல் பெருவளநல்லூர் என்னும் இடத்தில் நடந்த போரில் விக்ரமாதித்யனின் படைகளை தோற்கடித்தார். விக்ரமாதித்யனின் மகன் வினயாதியனும் பேரன் விஜயாதித்யனும் தோற்கடிக்கப்பட்டனர்.

உசாத்துணை

பத்தினிக் கோட்டம் சிலிக்கான் ஷெல்ப்