பஞ்சும் பசியும்

From Tamil Wiki
Revision as of 01:07, 25 March 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "thumb|பஞ்சும் பசியும் பஞ்சும் பசியும் ( ) தொ.மு.சி.ரகுநாதன் எழுதிய நாவல். பஞ்சாலைத் தொழிலாளர்கள் சுரண்டப்படுவதையும் அதற்கு எதிராக அவர்கள் சங்கம் வைத்துப் போரா...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
பஞ்சும் பசியும்

பஞ்சும் பசியும் ( ) தொ.மு.சி.ரகுநாதன் எழுதிய நாவல். பஞ்சாலைத் தொழிலாளர்கள் சுரண்டப்படுவதையும் அதற்கு எதிராக அவர்கள் சங்கம் வைத்துப் போராடுவதையும் சித்தரிக்கிறது. தமிழில் எழுதப்பட்ட முதல் சோஷலிச யதார்த்தவாத நாவல் என்று கருதப்படுகிறது.

எழுத்து, வெளியீடு

கதைச்சுருக்கம்

உலகப்போருக்குப்பின் உலகமெங்கும் துணிகளுக்கான தேவை ஓங்கியபோது மில்தொழிலில் வளர்ச்சி உருவானது. அதன் பின் இந்தியாவின் பருத்தி உற்பத்தியில் சுணக்கமும் ஏற்றுமதிக்கொள்கைகளில் சிக்கல்களும் உருவானபோது தொழிலில் முடக்கம் உருவானது. அக்காலகட்டத்தில் நடைபெறுகிறது இக்கதை. மில்கள் வளர்ந்தபோது தொழிலாளர்கள் நிலை உயரவில்லை, தொழில் சரியும்போது அவர்கள் மேலும் வறுமைக்கு தள்ளப்படுகிறார்கள். மில் முதலாளிகளான தாதுலிங்க முதலியார், கைலாச முதலியார், வடிவேலு முதலியார் போன்றவர்கள் ஒரு பக்கமும் உழைப்பாளர்களும் அவர்களை ஒருங்கிணைத்து தொழிற்சங்கத்தை உருவாக்கும் சங்கர் போன்றவர்கள் மறுபக்கமும் நிறுதப்பட்டு சுரண்டலின் சித்திரமும் இறுதியில் தொழிலாளர் சங்கம் வைத்து நடத்தும் வேலைநிறுத்தமும் சித்தரிக்கப்படுகிறது. தொழிலாளர்களின் பெரும் ஊர்வலத்துடன் நாவல் முடிவடைகிறது.

மொழியாக்கம்

செக்கோஸ்லாவக்கியா அகாதமியில் திராவிடவியல் பிரிவின் தலைவராக இருந்த டாக்டர் கமில் ஸ்வலெபில்.இந்நூலை செக் மொழியில் மொழிபெயர்த்துள்ளார். அந்நாட்டின் தலைநகரான பிராகில் உள்ள பிராஸ் பதிப்பகம் இம் மொழி பெயர்ப்பின் முதற் பதிப்பை 1957ல் வெளியிட்டது,

மதிப்பீடு

சமுதாய இயக்கவிதிகளையும் எதிர்கால சமூக வளர்ச்சியையும் நன்கு விளங்கிக்கொண்டு அவ்வுணர்வுடன் குறிப்பிடத்தக்க பாத்திரங்களை மெய்மையுடன் சித்தரிப்பவனே சரியான யதார்த்தவாதி. இத்தகைய சிறப்புமிக்க யதார்த்தவாத இலக்கியநெறி தமிழ் இலக்கிய உலகில் பெருவழக்கு பெற்றுள்ளதென கூறமுடியாது. இந்தவகையில் ரகுநாதனின் பஞ்சும் பசியும் ஒன்றுதான் வியந்து கூறத்தக்கது என்று இலங்கை விமர்சகர் கைலாசபதி குறிப்பிடுகிறார்.

உசாத்துணை