நொச்சித்திணை

From Tamil Wiki
Revision as of 00:45, 21 July 2022 by Tamizhkalai (talk | contribs)

பகை மன்னன் ஒருவன், தனது மதிலின் புறத்தே சூழ்ந்து, உழிஞை சூடி, முற்றுகையிடும்போது, மதிலுக்குரிய அரசன் நொச்சிப் பூவை அல்லது மாலையைச் சூடி மதிலைக் காத்து நிற்பது நொச்சித் திணை ஆகும். " எயில் காத்தல் நொச்சி" (திணைகளைத் தொகுத்த பழஞ்செய்யுளிலிருந்து) நொச்சித் திணை எட்டுத் துறைகளை உடையது. அவை:

  • மறனுடைப்பாசி
  • ஊர்ச்செரு
  • செருவிடை வீழ்தல்
  • குதிரை மறம்
  • எயிற்போர்
  • எயில்தனை அழித்தல்
  • அழிபடை தாங்கல்
  • மகள் மறுத்து மொழிதல்

என்பனவாம். இவற்றோடு திணை ஒன்றனையும் கூட்டித் ‘திணையும் துறையும் ஒன்பது’ என்பர் ஆசிரியர்.