நீலகண்ட சிவம்

From Tamil Wiki
Revision as of 15:39, 23 February 2022 by Subhasrees (talk | contribs) (நீலகண்ட சிவம்)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

நீலகண்ட சிவம் பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த கர்னாடக இசைக் கலைஞர். 4000க்கும் மேற்பட்ட பாடல்களை இயற்றியவர். இவருடைய கீர்த்தனைகள் அடையாறு கலாக்‌ஷேத்ராவால் ஸ்வரப்படுத்தப்பட்டு இரு தொகுதிகளாக வெளியிடப்பட்டன.

பிறப்பு, கல்வி

சுப்பிரமணியம் என்னும் இயற்பெயர் கொண்ட நீலகண்ட சிவம் திருவனந்தபுரம் கரமனை அக்கிரஹாரத்தில் 1839-ல் பிறந்தார்.

இவருடைய முன்னோர் மூன்று தலைமுறை முன்னர் திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து திருவனந்தபுரம் குடிபெயர்ந்திருக்கிறார்கள். நீலகண்ட சிவத்தின் தந்தை பத்மநாபசுவாமி ஆலயத்தில் பணிபுரிந்தார். வெகுகாலம் குழந்தையில்லாதிருந்து சிவனருளால் பிறந்த குழந்தை என்பதால் சுப்பிரமணியம் எனப் பெயர் இட்டனர்.

தனிவாழ்க்கை