நிகழ் (இதழ்)

From Tamil Wiki
Revision as of 08:53, 15 February 2022 by Jeyamohan (talk | contribs)

நிகழ் (1983- 1996 ) ஞானி நடத்திய சிற்றிதழ். நிகழ் இலக்கியம் மற்றும் மார்க்ஸிய ஆய்வுகளுக்காக நடத்தப்பட்டது. தமிழில் நவீன இலக்கியத்தை மார்க்ஸிய அடிப்படையில் ஆராய்ந்த கட்டுரைகளை வெளியிட்டது. பல புதிய எழுத்தாளர்களை அறிமுகம் செய்தது.

வரலாறு

மார்க்ஸிய ஆய்வுக்காகவும் இலக்கியத்திற்காகவும் 1983ல் கோவையிலிருந்து ஞானி அவருடைய நண்பர்கள் சிலரோடு இணைந்து நிகழ் இதழை தொடங்கினார். தொடக்கத்தில் சுகுமாரன் ஆசிரியராக இருந்தார். அடுத்து நாவலாசிரியர் க. ரத்தினம் ஆசிரியராக இருந்தார். 1985ல் நிகழ் ஏழு இதழ்களுடன் நின்றுவிட்டது. 1988ல் கண்பார்வை இழந்து பணி ஓய்வுபெற்ற ஞானி நிகழ் இதழை மீண்டும் தொடங்கினார். மும்மாத இதழாக 1996 வரை நடத்தினார். இரண்டாம் கட்டத்தில் 25 இதழ்கள் வெளியாயின.

உள்ளடக்கம்

முதல்கட்ட நிகழ் இதழ் பெரும்பாலும் இலக்கிய இதழாகவே வெளிவந்தது. சுந்தர ராமசாமியின் ஜே. ஜே. சில குறிப்புகள் நாவல் குறித்து விரிவான உரையாடலை நிகழ் வெளியிட்டது. டி. எஸ். எலியட்டின் இலக்கியக் கொள்கை என்ற ஞானியின் விரிவான கட்டுரை நிகழில் இடம் பெற்றது. கன்னட மொழியிலிருந்து வீ.அரசு மொழிபெயர்த்த கவிதைகள், விமலாதித்த மாமல்லன், கோணங்கி ஆகியவர்களின் சிறுகதைகள் தொடக்ககால நிகழ் இதழில் வெளிவந்தன. இரண்டாம் கட்ட நிகழ் இலக்கியம், மார்க்ஸிய விமர்சனம் ஆகிய இரண்டையும் பேசுபொருளாகக் கொண்டிருந்தது.

சோவியத் ருஷ்யாவின் வீட்சிக்கு பின் மார்க்சியம் தன்னை எப்படி மறுஅமைப்பு செய்யவேண்டும் என்னும் கோணத்தில் எஸ். என். நாகராஜன் முன்வைத்த ஆய்வுக் கட்டுரைகள் தொடர்ந்து வெளியிட்டது. ரவி சீனிவாஸ் க.பூர்ணசந்திரன் ஆகியோர் புதிய பொருளியல், சமூகவியல் போக்குகளைப் பற்றி எழுதினார்கள். ன்நவீனத்துவம் குறித்த கட்டுரைகளும் நிகழில் இடம்பெற்றன. முத்துக் குமாரசுவாமி, நாகார்ஜுனன், நோயல் இருதயராஜ் முதலியோர் எழுதினர்.யமோகன் தவிர காவேரி, தேவிபாரதி, நாஞ்சில் நாடன், சுப்ரபாரதிமணியன் முதலியவர்களின் சிறுகதைகளும் வெளியிடப்பட்டன. தருமராஜ் மிகச் சிறந்த தலித் சிறுகதை ஒன்றை எழுதினார். ஜெயமோகன் தவிர தேவதேவன், மனுஷ்ய புத்திரன், பாப்லோ அறிவுக்குயில், அண்ணாத்துரை கரிகாலன், அறிவன், எஸ்தர், எட்வர்டு அறிவன், தாமரை ஆறுமுகம், அன்பு வசந்த குமார், கணகுறிஞ்சி ரத்தினம், பொன். சந்திரன், க. பூரணச்சந்திரன், சிங்கராயர், இரவி சீனிவாஸ், ஜீவ ஒளி, ஜி. எஸ். ஆர். கிருஷ்ணன்

மொழியாக்கங்கள் தொடர்ச்சியாக வெளிவந்தன. ஜெரோமி ரிப்சின்சி என்பவரின் அர்ஜென் என்ற உலகளவில் புகழ் பெற்ற நூல் குறித்து, சிங்கராயர் எழுதினார்.

விவாதங்கள்

பிரமிள் ஃப்ரிஜோ காப்ராவும் சுஜாதாவும் நவீன அறிவியலை மதத்திற்குள் இழுக்கும் திரிபு முயற்சிகளை கண்டித்து எழுதினார்.

ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் குறித்து விமர்சனம் செய்து ஜீவ ஒளி எழுதினார்.

தரம்பாலின் ஆய்வுகளைத் தொகுத்து ஜி. எஸ். ஆர். கிருஷ்ணன் எழுதினார். இந்து, இந்தி, இந்தியா என்று எஸ். வி. ராஜதுரை எழுதிய நூலை விமர்சித்து ஜி. எஸ். ஆர். கிருஷ்ணன் எழுதினார். எஸ். வி. ராஜதுரை மறுப்புரை தந்தார்.

காப்பன் பாதிரியார். இவரது கருத்துகளைச் சா. தா. செல்வராசு தொகுத்து எழுதினார். விடுதலை இறையியல் குறித்து இன்னொரு கட்டுரை தந்தவர் அருள்திரு அல் போன்சு. விடுதலை இறையியலுக்குள் மக்களுக்கான இறையியல் குரல் இல்லை என்று மறுத்து டேவிட் சித்தையா எழுதினார். இவருக்கு அல்போன்சு பதில் தந்தார்.

தேவி பிரசாத். இவரது உலகாயுதம் என்ற புகழ்பெற்ற நூலின் ஒரு முக்கியமான ஒரு கட்டுரையைச் சிங்கராயர் தொகுத்துத் தந்தார். ஜெயமோகன், தேவி பிரசாத்தின் பொருள் முதல்வாத எல்லைகள் குறித்து எழுதினார். இந்திய மெய்யியல் குறித்துக் கலாநிதி நா. சுப்பிரமணியன் எழுதிய விரிவான கட்டுரையும் நிகழில் இடம்பெற்றது.

காந்தியாரின் சத்தியாகிரகம் என்ற போர்முறையை கிராம்சி மறுத்தார் என்றும் ஏற்றுக்கொண்டார் என்றும் விவாதக் கட்டுரைகள் நிகழில் வந்தன.

மேற்கத்திய மார்க்சியம் குறித்து இதைப் போலவே மாறுபட்ட மதிப்பீடுகளைத் தரும் கட்டுரைகளும் இடம்பெற்றன. டார்வினின் வாழ்க்கை ஒருவகையில் அற்புதங்கள் நிறைந்த வாழ்க்கை. இர்விங் ஸ்டோன் எழுதிய நூலை அழகிய நடையில் சிங்கராயர் தமிழில் தந்தார். இவ்வகையான கட்டுரைகளை மரபான, வைதீக மார்க்சியர் கண்டுகொள்ளவேமாட்டார்கள். மார்க்சியம் தன்னளவில் முற்ற முடிந்த ஒரே மெய்யியல் என்றுதான் இவர்கள் உரத்துப் பேசுவார்கள். மார்க்சியம் தன்னளவில் விரிந்துகொடுத்து உலகளவில் வளர்ந்துவரும் அறிவுத் துறை முதலியவற்றின் ஆக்கங்களைத் தனக்குள் செரித்துக்கொள்ள முடியும் என்னும் நோக்கத் தோடுதான், பூகோ, ஐவான் எலிச் முதலியவர்கள் பற்றிய கட்டுரைகளையும் நிகழ் வெளியிட்டது. உலகளவிலான தலைசிறந்த இலக்கியப் படைப்புகள் குறித்த விரிவான கட்டுரைகளும் இந்நோக்கில்தான் வெளியிடப்பட்டன. டால்ஸ்டாய், தாஸ்தாவெஸ்கி, டி. எஸ். எலியட், கிரகாம்கிரின், சால்பெல்லோ முதலியவர்கள் குறித்த கட்டுரைகளும் இடம்பெற்றன.

ஏசுநாதரைப் புரட்சியாளர் எனச் சில விடுதலை இறையியலாளர்கள் காண்கின்றனர். இந்தியாவிலும் இக்குரல் எழுகிறது என்ற முறையில் நிகழ் சில கட்டுரைகளை வெளியிட்டது. கிறிஸ்துவத்திற்குள் இந்தியாவில் இவ்வகையில் முதல் குரலை எழுப்பியவர்

1. இந்தியாவில் தத்துவம் கலாச்சாரம், 2. அறிவியல், அதிகாரம், ஆன்மீகம், 3. மார்க்சியம்:தேடலும் திறனாய்வும், 4. படைப்பியல்: சில சிகரங்களும் வழித் தடங்களும், 5. நிகழ் மதிப்புரைகள் 100.