நா. சுகுமாரன்

From Tamil Wiki
Revision as of 12:57, 17 August 2022 by Ramya (talk | contribs) (Created page with "நா. சுகுமாரன் (பிறப்பு: ஜூன் 11, 1957) தமிழில் எழுதி வரும் கவிஞர். மொழிபெயர்ப்பாளர், இலக்கிய விமர்சகர், இதழாசிரியர், தொலைக்காட்சி செய்தி ஆசிரியர். == வாழ்க்கைக் குறிப்பு == சென்னை பல்கலை...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

நா. சுகுமாரன் (பிறப்பு: ஜூன் 11, 1957) தமிழில் எழுதி வரும் கவிஞர். மொழிபெயர்ப்பாளர், இலக்கிய விமர்சகர், இதழாசிரியர், தொலைக்காட்சி செய்தி ஆசிரியர்.

வாழ்க்கைக் குறிப்பு

சென்னை பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.ஸி பட்டம் பெற்றார்.

இலக்கிய வாழ்க்கை

சுகுமாரன் அடூர் கோபாலகிருஷ்ணனின் சினிமா பற்றிய புத்தகமொன்றை (சினிமா அனுபவம்) தமிழில் மொழிபெயர்த்தார். 'காலச்சுவடு' பத்திரிகையின் பொறுப்பாசிரியராகப் பணியாற்றுகிறார்.

நூல் பட்டியல்

கவிதைத் தொகுப்புகள்
  • கோடைக்காலக் குறிப்புகள்(1985)
  • பயணியின் சங்கீதங்கள் (1991)
  • சிலைகளின் காலம்(2000)
  • வாழ்நிலம் (2002)
  • பூமியை வாசிக்கும் சிறுமி (2007)
மொழிபெயர்ப்புகள்
  • மார்க்சிய அழகியல் - ஒரு முன்னுரை (விமர்சனம் 1985)
  • வெட்டவெளி வார்த்தைகள் (கன்னட வசன கவிதைகள் 2000)
  • இது தான் என் பெயர் (சக்கரியாவின் மலையாள நாவல் 2001)
  • கவிதையின் திசைகள்(உலகக் கவிதைகள் 2001)
  • பாப்லோ நெருதா கவிதைகள் (100 கவிதைகளின் மொழிபெயர்ப்பு 2005)
  • பெண் வழிகள் (மலையாள பெண்நிலைக் கவிதைகள் 2005)
  • மயிலம்மா - போராட்டமே வாழ்க்கை (ஆதிவாசிப் போராளியின் வாழ்க்கை 2006)
  • சினிமா அனுபவம் (2006)
  • காளி நாடகம் (உண்ணி ஆர். இன் சிறுகதைகள் 2007)
  • மதில்கள் (வைக்கம் முகம்மது பஷீரின் நாவல் 2008)
  • அரபிக்கடலோரம் (சக்கரியாவின் கட்டுரைகள் 2008)
கட்டுரைகள்
  • திசைகளும் தடங்களும் (2003)
  • தனிமையின் வழி ( 2007)
  • இழந்த பின்னும் இருக்கும் உலகம் (2008)
  • வெளிச்சம் தனிமையானது (2008)

இணைப்புகள்