under review

நடுவெழுத்தலங்காரம்

From Tamil Wiki
Revision as of 13:35, 15 November 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (changed template text)

நடுவெழுத்தலங்காரம் என்பது பாடப்பெறுபவரின் பெயரை செய்யுளின் நடுவே உள்ள வார்த்தைகளில் கோர்ப்பது.

எடுத்துக்காட்டு

வே.கி. நாரயணசாமிப்பிள்ளை என்ற புலவர் வெண்மணித்தம்பிப் பிள்ளை மீது பாடிய நடுவெழுத்தலங்காரப் பாடல்

சுத்தாகா யம்பழனம் வனசஞ் சூளை
சோறுவேய் விளக்குகச கசகசப்பா றத்தை
ஒத்தசெழி விவைபத்துப் பதமொவ் வொன்றும்
உறின்மூவக் கரகாப்ப ணோங்கெ ழுத்தால்
வைத்தவபி தானவள்ளல் நின்னைப் பாட
வல்லனல்லே னாயினுநின் மாட்டெற் குள்ள
சித்தஞ்செய் வித்துகாண் பிரியா வன்பு
செய்குவாய் சுவணபுட்பம் பெய்கு வாயே

  • சுத்தாகாயம் - தூவெளி
  • பழனம் - பண்ணை
  • வனசம் - தாமரை
  • சூளை - கணிகை
  • சோறு - சாதம்
  • வேய் - காம்பு
  • விளக்கு - தீபிகை
  • கசகசப்பால் - அபின்
  • தத்தை - கிள்ளை
  • செழிவு - விளைவு

இந்த பத்துவார்த்தைகளின் நடுவெழுத்தைக் கூட்டினால் வெண்மணித்தம்பிப் பிள்ளை வருகிறது. இவ்வாறு அமையப் பாடுவதால் நடுவெழுத்தலங்காரம் எனப்படுகிறது

உசாத்துணை


✅Finalised Page