being created

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 36: Line 36:
தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் 31-4-1965 அன்று மரணமடைந்தார்.
தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் 31-4-1965 அன்று மரணமடைந்தார்.


== நினைவுச்சின்னங்கள் ==
== விருதுகள் ==
திருநெல்வேலி மாநகராட்சியில் 'பாஸ்கரத் தொண்டைமான்' என்று அவர் பேரில் தெரு ஒன்று  உள்ளது.
திருநெல்வேலி மாநகராட்சியில் 'பாஸ்கரத் தொண்டைமான்' என்று அவர் பேரில் தெரு ஒன்று  உள்ளது.



Revision as of 20:23, 8 February 2022

Anangan is working on

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் (22-7-1904 - 31-4-1965) எழுத்தாளர். பயணக் கட்டுரையாளர். பயணக் கட்டுரைகள் எழுதிய முன்னோடிகளில் ஒருவர். மாவட்ட ஆட்சியர். கோயில் கலை பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டவர். பேச்சாளர். டி.கே. சிதம்பரநாத முதலியாரின் வட்டத்தொட்டி என்னும் இலக்கியக்குழுமத்தைச் சேர்ந்தவர்.

வாழ்க்கை குறிப்பு

பிறப்பு, கல்வி

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் 22-7-1904ஆம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்தார். தந்தை தொண்டைமான் முத்தையா ஓவியர், புகைபடக் கலைஞர். தமிழ் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்றவர். அன்னை முத்தம்மாள். உடன் பிறந்தவர்கள் ஐவர். எழுத்தாளர் தொ.மு.சி ரகுநாதன் இவரின் இளைய சகோதரர். தொ.மு. பாஸ்கரத் தொண்டைமானின் தாத்தா சிதம்பரத் தொண்டைமான் தமிழறிஞர். திருப்புகழ்சாமி என்னும் முருகதாச ஸ்வாமிகளின் சிஷ்யர். அவர் `ஸ்ரீரெங்கநாதர் அம்மானை', `நெல்லைப்பள்ளு' ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் திருநெல்வேலியில் தொடக்க கல்வி கற்றார். திருநெல்வேலி இந்து கல்லூரியில் இளங்கலைப் (B.A) பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

கல்லூரி காலத்தில் பாலம்மாள் என்பவரை மணந்தார். அவர்களுக்கு நான்கு பிள்ளைகள்.

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் பட்டப்படிப்பை முடித்தவுடன் வனத்துறையில்(Forest Department) சேர்ந்தார். பின் வருவாய் துறையில்(revenue department) ஆய்வாளராக இருந்தார். அதிலிருந்து தாசில்தார், மாவட்ட உதவி ஆட்சியர் ஆகிய பதவிகளில் இருந்தார். இந்திய அரசு தொ.மு. பாஸ்கரத் தொண்டைமானை மாவட்ட ஆட்சித் தலைவராக (conferred I.A.S) ஆக்கி வேலூர் மாவட்டத்திற்கு கலெக்டராக நியமித்தது. 1959ஆம் ஆண்டு பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.

இலக்கிய வாழ்க்கை

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் கலைக் குடும்பத்தில் பிறந்தவர். கல்லூரி நாட்களில் ஆனந்த போதினி பத்திரிக்கையில் எழுதத் தொடங்கினார்.  திருநெல்வேலி இந்து கல்லூரியில் பணிப்புரிந்த சுப்பிரமணியக் கவிராயரும், ரா.பி. சேதுப் பிள்ளையும் தொ.மு. பாஸ்கரத் தொண்டைமானுக்கு தமிழில் ஆர்வத்தை முதலில் வளர்த்தவர்கள். பின்னர் டி.கே.சி யின் 'வட்டத்தொட்டி' நட்புவட்டத்தில் இணைந்தார். வட்டத்தொட்டியில் கம்பன் அடிப்பொடி சா. கணேசன், வெள்ளைக்கால் சுப்பிரமணிய முதலியார், நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை, கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, ராஜாஜி, கல்கி ரா. கிருஷ்ண மூர்த்தி ஆகிய தமிழறிஞ்ரகள் பங்கு பற்றவர்கள். வட்டத்தொட்டியில் தொ.மு. பாஸ்கரத் தொண்டைமானும் முக்கியமானவராக இருந்தார்.

கல்கியில் ''வேங்கடம் முதல் குமரி வரை" என்ற கோயில் பயணக்கட்டுரைத் தொடரை எழுதினார். அவை பாலாற்றின் மருங்கிலே(1960), பொன்னியின் மடியிலே(1961) காவெரிக் கரையிலே(1961) பொருநைத் துறையிலே(1961)  என்று தனித்தனி துணைத் தலைப்புடன் வெளிவந்தது. தினமணிகதிர் முதலிய பத்திரிக்கைகளிலும் கட்டுரைகள் எழுதியுள்ளார். கோயில் கலை ரசனை சார்ந்து நூல்கள் எழுதியுள்ளார். கம்பராமாயணத்தில் ஈடுபாடு கொண்டு கம்பன் சுயசரிதம், கம்பன் கண்ட கடவுள் ஆகிய நூல்களும் எழுதியிருக்கிறார்.

பகங்களிப்பு

கோயில் கலைப் பகங்களிப்பு

தஞ்சயில் பணியாற்றிய போது கோயில்களில் பராமரிப்பின்றி கிடக்கும் சிறப்பங்கள், செப்புத் திருமேனிகளை சேகரித்து தஞ்சை சரஸ்வதி மஹாலில் கலைக் கூடம் அமைத்துள்ளார்.

கோயில்  கலை அழகு கெடாமல் கோயில் திருப்பணி செய்ய உதவியுள்ளார். கோயிலுக்கு சொந்தமான மூர்த்திகள் வேறெங்காவது இருந்தால் அதை மீட்டு உரிய கோயில்களில் சேர்த்துள்ளார்.

பயண இலக்கியப் பங்களிங்ப்பு

பயண இலக்கியத்தில் தொ.மு. பாஸ்கரத் தொண்டைமானின் வேங்கடம் முதல் குமரி வரை, வேங்கடத்துக்கு அப்பால், ஆகிய நூல்கள் செவ்வியல் படைப்பாகக் கருதப்படுகிறது.

இலக்கிய இடம்

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமானின் முக்கிய பங்களிப்பு தமிழக்கத்திலும் வட இந்தியாவிலும் பயணம் செய்து, கோயில் பயணக் கட்டுரைகள் எழுதியது.  கோயிலுக்கான வழிகாட்டி நூலாக அனைவரும் வாசிக்கும் படி எளிய அழகிய நடையில்  எழுதியிருக்கிறார்.  இவரது நூல்கள் பயணக்கட்டுரைத்தன்மை கொண்டவை, எளிமையானவை. ஆனால் சிற்பங்களைப்பற்றியும் கோயில் பற்றியும் நுணுக்கமான ரசனை இவருக்குண்டு. வேங்கடம் முதல் குமரி வரை, மதுரை மீனாட்சி, கலைஞன் கண்ட கடவுள், கல்லும் சொல்லாதோ கவி, இந்தியக் கலைச் செல்வம், தமிழர் கோயில்களும் பண்பாடும் ஆகிய   நூல்கள் முக்கியமானவை.

மறைவு

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் 31-4-1965 அன்று மரணமடைந்தார்.

விருதுகள்

திருநெல்வேலி மாநகராட்சியில் 'பாஸ்கரத் தொண்டைமான்' என்று அவர் பேரில் தெரு ஒன்று  உள்ளது.

நூல்கள்

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமானின் சில நூல்கள்.

வேங்கடம் முதல் குமரி வரை 1960.

வேங்கடத்துக்கு அப்பால்

ரசிகமணி டி.கே.சி

கல்லும் சொல்லாதோ கவி

தமிழர் கோயில்களும் பண்பாடும்

கலைஞன் கண்ட கடவுள்

கம்பன் கண்ட இராமன்

தொ.மு பாஸ்கரத் தொண்டைமானின் நூல்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டுள்ளன.

உசாத்துணை

சந்தியா பதிப்பகம் வெளியிட்ட "வேங்கடம் முதல் குமரி வரை" நூலின் தொகுப்பாசிரியர் ப. சரவணன் எழுதிய முன்னுரை.


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.


https://kallarkulavaralaru.blogspot.com/2018/10/blog-post.html

https://www.keetru.com/index.php/2009-10-07-11-03-58/10-sp-228139869/9975-2010-07-16-01-14-34