தொல்காப்பியர் காலம்

From Tamil Wiki
Revision as of 20:23, 10 March 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with " தொல்காப்பியத்தின் காலத்தை கணிக்க அகச்சான்றுகள் மட்டுமே உள்ளன. இந்தியாவின் பிற இலக்கியங்களுடன் ஒப்பிட்டும், பழந்த்தமிழிலக்கியங்களின் சொல்லாட்சிகள் மற்றும் பேசுபொருட்களு...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


தொல்காப்பியத்தின் காலத்தை கணிக்க அகச்சான்றுகள் மட்டுமே உள்ளன. இந்தியாவின் பிற இலக்கியங்களுடன் ஒப்பிட்டும், பழந்த்தமிழிலக்கியங்களின் சொல்லாட்சிகள் மற்றும் பேசுபொருட்களுடன் ஒப்பிட்டும் ஊகங்கள் செய்யப்படுகின்றன. இந்த ஊகங்களுக்கு பின்னணியில் அரசியல்நோக்கங்கள் உள்ளன. தங்கள் தொன்மையை பிற பண்பாடுகளுக்கும் முன்னர் கொண்டு செல்லும் திட்டத்துடன் செய்யப்பட்ட கணிப்புகள் உள்ளன. இக்காலக்கணிப்புகள் நிகழ்ந்த தொடக்க காலகட்டத்தில் வரலாற்றாய்வும் தொல்லியல் ஆய்வும் தொடக்கநிலையில் இருந்தன. ஆகவே காலக்கணிப்புகள் மிகத்தொன்மையான காலத்துக்குக்கூட செல்கின்றன. கீழ்க்கண்டவை புகழ்பெற்ற காலக்கணிப்புகள்

  • க. வெள்ளை வாரணர் பொ. மு. 5320-ம் நூற்றாண்டு
  • மறைமலையடிகள் பொ.மு. 3500-ம் நூற்றாண்டு
  • கா. சுப்பிரமணிய பிள்ளை பொ.மு. 2000-ம் நூற்றாண்டு
  • ச. சோ. பாரதியார் [பொ.மு. 1000-ம் நூற்றாண்டு
  • க. நெடுஞ்செழியன் பொ.மு. 1400-ம் நூற்றாண்டு
  • மா. கந்தசாமி பொ.மு. 1400-ம் நூற்றாண்டு
  • கே. கே. பிள்ளை பொ.மு. 400-ம் நூற்றாண்டு
  • மு. வரதராசனார் பொ.மு. 500-ம் நூற்றாண்டு
  • ஞா. தேவநேயப் பாவாணர் பொ.மு. 700-ம் நூற்றாண்டு
  • சி. இலக்குவனார் பொ.மு. 700-ம் நூற்றாண்டு
  • இரா. இளங்குமரன் பொ.மு. 700-ம் நூற்றாண்டு
  • கே.ஜி. சங்கரையர் : பொ.மு.3-ம் நூற்றாண்டு
  • ரா. இரகவையங்கார் :பொ.மு.145-ம் நூற்றாண்டு
  • சீனிவாசையங்கர் : பொயு 1 ஆம் -ம் நூற்றாண்டு
  • தெ.பொ.மீனாட்சிசுந்தரம் பிள்ளை பொயு 2-ம் நூற்றாண்டு
  • பெரிடேல் கீத் : பொயு 4-ம் நூற்றாண்டு
  • எஸ். வையாபுரிப்பிள்ளை : பொயு 4 அல்லது 5-ம் நூற்றாண்டு
  • கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி : பொயு 5-ம் நூற்றாண்டு
  • கே.எஸ் சிவராஜபிள்ளை : பொயு.6-ம் நூற்றாண்டு