தேவிபாரதி

From Tamil Wiki
Revision as of 19:57, 18 January 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "thumb|தேவிபாரதி தேவிபாரதி (ந.ராஜசேகரன்) (30-12-1957 ) தமிழில் எழுதும் முதன்மையான படைப்பாளிகளில் ஒருவர். இடதுசாரிப் பார்வையில் இருந்து காந்தியப்பார்வைக்கு வந்த படைப்பாளி. உளவியல் ந...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
தேவிபாரதி

தேவிபாரதி (ந.ராஜசேகரன்) (30-12-1957 ) தமிழில் எழுதும் முதன்மையான படைப்பாளிகளில் ஒருவர். இடதுசாரிப் பார்வையில் இருந்து காந்தியப்பார்வைக்கு வந்த படைப்பாளி. உளவியல் நெருக்கடிகளை சமூகப்பின்னணியில் நிறுவி ஆராயும் படைப்புகள் என விமர்சகர்கள் குறிப்பிடும் நாவல்களை எழுதியவர்.

பிறப்பு கல்வி

தேவிபாரதியின் இயற்பெயர் ராஜசேகரன். ஈரோடு மாவட்டம் கஸ்பாப்பேட்டை என்னும் ஊரில் நல்லமுத்து முத்தம்மாள் இணையரின் மகனாக 30-12-1957ல் பிறந்தார்.  கஸ்பாபேட்டை, ஈரோடு, அறச்சலுர் சென்னிமலை, வடுகபட்டி என ஐந்து ஊர்களிலாக பதினொன்றாம் வகுப்பு [மெட்ரிகுலேஷன்] வரை படித்தார்.

தனிவாழ்க்கை

தேவிபாரதி இருமுறை மணம் புரிந்துகொண்டு மணமுறிவு பெற்றவர். பள்ளிப்படிப்பு முடித்தபின் ஆசிரியர் பயிற்சிபெற்று ஆரம்பப்பள்ளி ஆசிரியராக 2006 ஜூன் வரை பணியாற்றினார். வேலையை உதறிவிட்டு சிலகாலம் திரைத்துறையில் பணியாற்றினார். அதன்பின் 2008 முதல் ஏழாண்டுகள் காலச்சுவடு மாத இதழிலும் ஓராண்டுக்காலம் புதுயுகம் தொலைக்காட்சியிலும் வேலைபார்த்தார்

இலக்கியவாழ்க்கை

நாற்பதாண்டுகளாக எழுதிக்கொண்டிருக்கும் தேவிபாரதி தொடக்கத்தில் இடதுசாரி மார்க்ஸிய லெனினிய இயக்கங்களுடன் தொடர்புகொண்டிருந்தார். அவர்களின் இதழ்களில் எழுதினார். 1979ல் முதல் சிறுகதை பிரசுரமாகியது. 19 ல் எழுதப்பட்ட பலி என்னும் சிறுகதை அவருக்கு இலக்கியக் கவனத்தைப்பெற்றுத் தந்தது. காலச்சுவடு இதழிலும் பிற இதழ்களிலும் தொடர்ந்து எழுதினார் இலக்கிய ஆக்கத்தில் செல்வாக்கு செலுத்திய முன்னோடிகள் என அசோகமித்திரன் பிறகு பூமணி, தி.ஜாணகி ராமன், சுந்தரராசாமி ஆகியோரைக் குறிப்பிடுகிறார்.

விருதுகள்

நிழலின் தனிமை, ஜெயந்தன் விருது,

அறிஞர் போற்றுதும் விருது, திருச்சி

தன்னறம் விருது 2022

நூல்பட்டியல்

சிறுகதை தொகுதிகள்

பலி

கண் விழுத்த மறுநாள்

மூன்றாவது விலா எலும்பும் விழுதுகற்ற ஆல மரமும்.

பிறகொரு இரவு -சிறுகதைகள்

கறுப்புக் கடவுள் கடவுள்,-சிறுகதைகள்

கட்டுரைகள்

புழுதிக்குள் சில சித்திரங்கள்

நாவல்கள்

நிழலின் தனிமை

நட்ராஜ் மகராஜ்

அற்ற குளத்து அறபுத மீன்கள் -கட்டுரைகள்

நீர்வழப் படூஉம் -நாவல்.