தெ.வே.ஜெகதீசன்

From Tamil Wiki
Revision as of 07:46, 30 April 2022 by Jeyamohan (talk | contribs)

தெ.வே.ஜெகதீசன் ( ) தமிழறிஞர், நாட்டாரியல் ஆய்வாளர், கல்வியாளர். நாகர்கோயில் தென் திருவிதாங்கூர் இந்துக்கல்லூரியில் தமிழ்த்துறை தலைவராகப் பணியாற்றுகிறார்

பிறப்பு, கல்வி

தெரிசனங்கோப்பு வேலாயுதப்பெருமாள் ஜெகதீசன் டி.எஸ்.வேலாயுதப் பெருமாள் பிள்ளைக்கும் மாத்தம்மாளுக்கும் 16 மே-1965 ல் நாகர்கோயில் அருகே அருமநல்லூரில் பிறந்தார். அருமநல்லூர் தொடக்கப்பள்ளியில் ஆரம்பக்கல்வியும் பூதப்பாண்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளிநிறைவுக் கல்வியும் முடித்தார். தென்திருவிதாங்கூர் இந்து கல்லூரியில் இளநிலைப் பட்டம் பெற்றபின் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழில் முதுநிலைப் பட்டம் பெற்றார். தென்திருவிதாங்கூர் இந்துக்கல்லூரியில் ஆய்வுநிறைஞர் (எம்ஃபில்) பட்டம் பெற்று பேராசிரியர் ஸ்ரீகுமாரின் கீழ் வலங்கை நூல்கதை ஓர் ஆய்வு என்னும் தலைப்பில் இலக்கியத்தையும் நாட்டாரியலையும் இணைத்து ஆய்வுசெய்து முனைவர் பட்டம்பெற்றார்.

தனிவாழ்க்கை

தெ.வே.ஜெகதீசன் 1997ல் தென்திருவிதாங்கூர் இந்துக்கல்லூரியில் ஆசிரியராக பணிக்குச் சேர்ந்து தமிழ்த்துறை தலைவராக பணிபுரிகிறார். மனைவி ஏ.நாகலட்சுமி. மகன் ராகவ் கார்த்திகேயன்.

கல்விப்பணி