second review completed

துன் சம்பந்தன் பாஜம் தமிழ்ப்பள்ளி

From Tamil Wiki
LOGO TUN SAMBANTHAN2.jpg

துன் சம்பந்தன் பாஜம் தமிழ்ப்பள்ளி மலேசியாவின் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் மந்தின் வட்டாரத்தில் அமைந்துள்ளது. 1937-ம் ஆண்டு துவங்கப்பட்டஇந்தப் பள்ளியின் பதிவு எண் NBD 4086. . இது ஓர் அரசின் முழு உதவி பெற்ற பள்ளி.

வரலாறு

துன் சம்பந்தன் பாஜம் தமிழ்ப்பள்ளி சிரம்பானிலிருந்து கோலாலம்பூருக்குச் செல்லும் பழைய சாலையில் 19-வது கிலோமீட்டரில் கிளைப்பாதையாகப் பிரிந்துச்செல்லும்  பத்தாங் பெனார் நீலாய் வழியில் சுமார் 4-வது கிலோ மீட்டரில் அமைந்துள்ளது. 1937 மே 6, 1937-ல் இப்பள்ளி தோற்றுவிக்கப்பட்டது. ஆரம்பத்தில் இப்பள்ளி பாஜம் தோட்டத்தில் 4 வகுப்புகளுடனும் 22 மாணவர்களுடனும் இயங்கியது.

மாணவர் வரு கை

மாணவர்கள் பாஜம் தோட்டம், மத்தின் தோட்டம், கெபோக் தோட்டம் மற்றும் கம்போங் பாரு பாஜவிலிருந்து இப்பள்ளிக்கு வந்தனர்.

அரசு முழு மான்யம் பெறும் பள்ளி

Untitledfc.jpg

பிப்ரவரி 1981 முதல் நாளில் இப்பள்ளி கம்போங் பாரு பாஜமிலுள்ள சீனர்களுக்கு உரிமையான கட்டிடத்தில் செயல்பட ஆரம்பித்தது. பின்னர், அரசு முழு மான்யம் பெறும் பள்ளியாக மாறி, சுமார் 135 மாணவர்களுடன் ஏழு ஆசிரியர்களுடனும் செயல்பட ஆரம்பித்தது.

பள்ளி பெயர்

இப்பள்ளிக்கு நாட்டின் மாபெரும் தலைவர்களில் ஒருவரான துன் வீ.தி. சம்பந்தன் பெயர் சூட்டப்பட்டது. ஜூன் 19, 1982-ல் கல்வி அமைச்சு 'துன் சம்பந்தன் பாஜம் ஆரம்பத் தமிழ்ப்பள்ளி' எனப் பெயர் மாற்றத்தை அறிவித்தது.

இணைக்கட்டிடம்

மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்ததால் வகுப்பறைகள் பற்றாக்குறை ஏற்பட்டது. பள்ளி நிர்வாகம் இணைக் கட்டிடம் தேவையென விண்ணப்பம் செய்தது. விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்ட கல்வி அமைச்சு 3 வகுப்பறைகள், 1 மேடை அடங்கிய இணைக் கட்டிடத்தைக் கட்டிக் கொடுத்தது.

புதிய கட்டிடம்

Untitledd.jpg

மாணவர்கள் எண்ணிக்கை 341 ஆக அதிகரிக்கவே புதிய கட்டிடம் கோரி கல்வி அமைச்சிடம் அன்றைய பள்ளியின் தலைமை ஆசிரியர் இ.முனியாண்டி மனு செய்திருந்ததை தொடர்ந்து கல்வி அமைச்சு 4 அடுக்கு மாடிக் கட்டிடம் கட்டித்தந்தது. 1999-ல் ரோஸ்லா அபிதுல்லா இப்பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்த காலத்தில் இப்புதிய கட்டிடத்தில் பள்ளி இயங்க ஆரம்பித்தது.

உசாத்துணை

  • நெகிரி செம்பிலான் மாநிலத் தமிழ்ப்பள்ளி


✔ Second review completed


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.