தீவக அணி

From Tamil Wiki
Revision as of 20:08, 7 April 2022 by Tamizhkalai (talk | contribs) (Created page with "ஒரு குணத்தையோ, தொழிலையோ, இனத்தையோ, பொருளையோ குறிக்கும் ஒரு சொல், செய்யுளின் ஓர் இடத்தில் நின்று, அச்செய்யுளில் பல இடங்களிலும் உள்ள சொற்கேளாடு சென்று பொருந்திப் பொருளைத் தருவது...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

ஒரு குணத்தையோ, தொழிலையோ, இனத்தையோ, பொருளையோ குறிக்கும் ஒரு சொல், செய்யுளின் ஓர் இடத்தில் நின்று, அச்செய்யுளில் பல இடங்களிலும் உள்ள சொற்கேளாடு சென்று பொருந்திப் பொருளைத் தருவது தீவக அணியாகும். அது முதல் நிலைத் தீவகம், இடைநிலைத் தீவகம், கடை நிலைத் தீவகம் என்னும் மூன்று விதமாக வரும்.

குணம் தொழில் சாதி பொருள் குறித்து ஒரு சொல்

ஒருவயின் நின்றும் பலவயின் பொருள் தரின்

தீவகம்; செய்யுள் மூவிடத்து இயலும்    --(தண்டியலங்காரம், 39)

தீவக அணி-பெயர்க்காரணம்

தீவகம் என்னும் சொல்லுக்கு 'விளக்கு' என்று பொருள். ஓர் அறையில், ஓர் இடத்தில் வைக்கப்பட்ட விளக்கானது அவ்வறையில் பல இடங்களிலும் உள்ள பொருள்களுக்கு வெளிச்சம் தந்து விளக்குதல் போலச் செய்யுளின் ஓரிடத்தில் நின்ற ஒரு சொல் அச்செய்யுளின் பல இடங்களிலும் உள்ள சொற்களோடு சென்று பொருந்திப் பொருளை விளக்குவதால் இவ்வணி தீவக அணி எனப்பட்டது.

தீவக அணியின் வகைகள்

பாடலில் தீவகமாக வரும் சொல் தீவகச் சொல் எனப்படும். இச்சொல் செய்யுளின் முதலில் வந்தால் அது முதல்நிலைத் தீவகம்; செய்யுளின் இடையில் வந்தால் அஃது இடைநிலைத் தீவகம், இறுதியில் வந்தால் அது கடைநிலைத் தீவகம்' ஆகும். தீவகச் சொல் குணம், சாதி, தொழில், பொருள் ஆகிய நான்கு வகைப்படும். ஒவ்வொரு மூன்று நிலைகளும், ஒவ்வொரு நிலையிலும் நான்கு பொருள்களுமாக மொத்தம் பன்னிரண்டு வகைகளாக விரியும். அவையாவன

  • முதல் நிலைக் குணத் தீவகம்
  • முதல் நிலைத் தொழில் தீவகம்
  • முதல் நிலைச் சாதித் தீவகம்
  • முதல் நிலைப் பொருள் தீவகம்
  • இடைநிலைக் குணத் தீவகம்
  • இடைநிலைத் தொழில் தீவகம்
  • இடைநிலைச் சாதித் தீவகம்
  • இடைநிலைப் பொருள் தீவகம்
  • கடைநிலைக் குணத் தீவகம்
  • கடைநிலைத் தொழில் தீவகம்
  • கடைநிலைச் சாதித் தீவகம்
  • கடைநிலைப் பொருள் தீவகம்