தீபு ஹரி

From Tamil Wiki
Revision as of 12:48, 12 August 2022 by Ramya (talk | contribs) (Created page with "தீபு ஹரி (நவம்பர் 18, 1983) தமிழில் எழுதி வரும் கவிஞர். == வாழ்க்கைக் குறிப்பு == தீபு ஹரி ஈரோடு மாவட்டம் தாசரிபாளையம் கிராமத்தில் சுப்புலக்ஷ்மி, நடராஜ் இணையருக்கு நவம்பர் 18, 1983இல் பிறந்...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

தீபு ஹரி (நவம்பர் 18, 1983) தமிழில் எழுதி வரும் கவிஞர்.

வாழ்க்கைக் குறிப்பு

தீபு ஹரி ஈரோடு மாவட்டம் தாசரிபாளையம் கிராமத்தில் சுப்புலக்ஷ்மி, நடராஜ் இணையருக்கு நவம்பர் 18, 1983இல் பிறந்தார். பாரதி வித்யாலயா மெட்ரிக்குலேஷன், அரசு பெண்கள் மேல் நிலை பள்ளியில் பள்ளிக் கல்வி பயின்றார். கோவை சத்தியமங்கலம் நிர்மலா கல்லூரியில் ஆங்கில இலக்கியம் முதுகலைப் பட்டம் பெற்றார்.சிவந்தி கல்லூரியில் பி.எட் பட்டம் பெற்றார். , 2008, 2009இல் பகுதி நேர விரிவுரையாளராக சென்னையில் பணியாற்றினார். ஜூன் 4, 2009இல் நல்லசிவனை மணந்தார். மகள் நித்திலா.

இலக்கிய வாழ்க்கை

2018இல் தீபு ஹரிyஇன் முதல் கவிதை வெளியானது. 2019இல் முதல் கவிதைத் தொகுப்பு ”தாழம்பூ” தமிழினி பதிப்பகம் மூலம் வெளியானது. இலக்கிய ஆதர்சங்களாக பாரதியார், புதுமைப்பித்தன், சுந்தர ராமசாமி, எமிலி டிக்கன்சன், தஸ்தோவெஸ்கி, எர்னஸ்ட் ஹெமிங்வே, பஷீர் ஆகியோரைக் குறிப்பிடுகிறார்.

விருது

  • 2020இல் கவிஞர் தக்கை வே. பாபு நினைவு கவிதை விருது வழங்கப்பட்டது.

நூல்கள் பட்டியல்

  • நூல்தாழம்பூ (2019)
  • ஒருத்தி கவிதைகளுக்கும் இரவுகளுக்கும் திரும்புகிற பொழுது(2021)

வெளி இணைப்புகள்