being created

தி. தயானந்தன் பிரான்சிஸ்

From Tamil Wiki
Revision as of 23:55, 20 March 2024 by ASN (talk | contribs) (Page Created by ASN)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
டாக்டர் தயானந்தன் பிரான்சிஸ்

தயானந்தன் பிரான்சிஸ் (டாக்டர் தயானந்தன் பிரான்சிஸ்; முனைவர் தயானந்தன் பிரான்சிஸ்; டாக்டர் தயா) (ஆகஸ்ட் 14, 1932 – ஜூன் 9, 2007) கவிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், இதழாசிரியர், பதிப்பாளர், கிறித்தவ இலக்கிய ஆய்வாளர். தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார். கிறிஸ்தவ இலக்கியச் சங்கத்தின் பொதுச் செயலாளராகப் பணிபுரிந்தார். இலக்கியம் சார்ந்தும் கிறிஸ்தவம் சார்ந்தும் பல நூல்களைப் பதிப்பித்தார். ‘கிறிஸ்தவ தமிழ்க் காவலர்’ உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றார்.

பிறப்பு, கல்வி

தயானந்தன் பிரான்சிஸ், ஆகஸ்ட் 14, 1932 அன்று, ராணிப்பேட்டையில், ரெவரண்ட் டிக்கிகஸ் - கிரேஸ் ராஜம்மாள் இணையருக்குப் பிறந்தார். வேலூர் ஊரிஸ் உயர்நிலைப்பள்ளியில் பள்ளிக் கல்வி கற்றார். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இண்டர்மீடியட் படித்தார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பயின்று பி.ஏ. ஹானர்ஸ் பட்டம் பெற்றார். தமிழ் இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்றார். பெங்களூரில் ஐக்கிய இறையியல் கல்லூரியில் பயின்று பி.டி (Bachelor Of Divinity - B.D) பட்டம் பெற்றார். தொடர்ந்து மாஸ்டர் ஆஃப் தியாலஜி (M.Th) பட்டம் பெற்றார். பூனா பல்கலைக்கழகத்தில் பயின்று மொழியியலில் முனைவர் பட்டம் பெற்றார். லண்டன் பல்கலைக்கழகத்தில் பயின்று முதுநிலை முனைவர் (டி.லிட்) பட்டம் பெற்றார். இறையியல் கல்வியில் டி.டி. (Doctor Of Divinity - D.D) பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

தயானந்தன் பிரான்சிஸ் மணமானவர். மனைவி: பத்மினி. இவர்களுக்கு மூன்று மகன்கள்.





🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.