under review

தி.செ. சுப்பிரமணிய பிள்ளை: Difference between revisions

From Tamil Wiki
(Corrected error in line feed character)
No edit summary
 
Line 1: Line 1:
{{Read English|Name of target article=Thi.Se. Subramaniya Pillai|Title of target article=Thi.Se. Subramaniya Pillai}}
{{Read English|Name of target article=Thi.Se. Subramaniya Pillai|Title of target article=Thi.Se. Subramaniya Pillai}}
தி.செ. சுப்பிரமணிய பிள்ளை (1855 - மே 19, 1919) தமிழ்ப்புலவர். தனிப்பாடல்
தி.செ. சுப்பிரமணிய பிள்ளை (1855 - மே 19, 1919) தமிழ்ப்புலவர். தனிப்பாடல்
கள், இசைப்பாடல்கள் பல பாடியுள்ளார்.
கள், இசைப்பாடல்கள் பல பாடியுள்ளார்.
Line 23: Line 22:
1918-ல் சிரங்கு நோய் வந்தது. மே 19, 1919-ல் காலமானார்.  
1918-ல் சிரங்கு நோய் வந்தது. மே 19, 1919-ல் காலமானார்.  
== நூல் பட்டியல் ==
== நூல் பட்டியல் ==
* தனிப்பாடல்
* தனிப்பாடல்கள்
கள்
* இசைப்பாடல்கள்
* இசைப்பாடல்கள்
== உசாத்துணை ==
== உசாத்துணை ==

Latest revision as of 10:09, 31 August 2023

To read the article in English: Thi.Se. Subramaniya Pillai. ‎

தி.செ. சுப்பிரமணிய பிள்ளை (1855 - மே 19, 1919) தமிழ்ப்புலவர். தனிப்பாடல் கள், இசைப்பாடல்கள் பல பாடியுள்ளார்.

வாழ்க்கைக் குறிப்பு

திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் 1855-ல் செல்லம்பிள்ளைக்கும் பேச்சியம்மையாருக்கும் சுப்பிரமணியபிள்ளை மகனாகப் பிறந்தார். ஏழாம் நாள் தாய் இறந்தார். பாட்டனார் வீட்டில் திண்ணைப்பள்ளிக்கூடத்தில் கல்வி கற்றார். ஆங்கிலப்பள்ளியில் ஆங்கிலம் கற்றார். வகுப்பில் முதல் மாணவராக இருந்தார். பதினாறாவது வயதில் மெட்ரிக்குலேஷன் பரிட்சையில் தேறினார். பதினேழாவது வயதில் தான் பயின்ற பள்ளிக்கூடத்தில் பதினேழு ரூபாய் சம்பளத்தில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். சிங்கம்பட்டி இளவரசருக்கு தனியாசிரியராக இருந்தார். இருபது வயதில் தனியாகப் படித்து எஃப்.ஏ பரிட்சையில் தேறினார். பின்னர் வழக்கறிஞர் தேர்வு எழுதி பட்டம் பெற்றார்.

முதல் திருமணம் வீரலட்சுமியம்மாளுடன் பத்தொன்பதாவது வயதில் நிகழ்ந்தது. ஒன்பது வருடங்களுக்குப்பிறகு அவர் இறக்கவே தன் இருபத்தியெட்டாவது வயதில் அருணாச்சலத்தம்மாளை மணந்தார். அவரும் சில ஆண்டுகளில் இறந்துவிட சங்கரவடிவம்மாளை மூன்றாவதாக மணந்தார். தன் முப்பத்தியெட்டாவது வயதில் நான்காவது திருமணம் செய்து கொண்டார்.

இலக்கிய வாழ்க்கை

அழகிய சொக்கநாதபிள்ளையும், சுப்பிரமணிய பிள்ளையும் இலக்கிய நண்பர்கள். புதுச்செய்யுள்கள் இயற்றுவது, தமிழ் நூல்களை இயற்றுவது என இருவரும் ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருந்தனர். அழகிய சொக்கநாதபிள்ளைyஓடும் நண்பர்களோடும் இணைந்து நூல்கள் பல ஆராய்ச்சி செய்துள்ளார். தனியாக நூல்கள் இயற்றவில்லை. தனிப்படல்கள் பல இயற்றியுள்ளார்.

இசை

சந்தங்கள் தழுவிய பாடல்களை இயற்றினார். நாற்பதுக்கும் பேற்பட்ட ராகங்களை உணர்ந்திருந்தார். இசைப்பாடல்கள் பல இயற்றினார்.

பாடல் நடை

தனிப்பாடல்

இச்சை யுடணி ரங்கி ஈவார்தம் வாசலிலே
பிச்சை யெடுக்கின்ற பெண் பிள்ளாய் - உச்சிதமாய்
கூப்பிட்டுப் பாடுங் குயிலே உனக்குநல்ல
மாப்பிள்ளை தான் வருகுவான்

மறைவு

1918-ல் சிரங்கு நோய் வந்தது. மே 19, 1919-ல் காலமானார்.

நூல் பட்டியல்

  • தனிப்பாடல்கள்
  • இசைப்பாடல்கள்

உசாத்துணை


✅Finalised Page