being created

திரு.வி. கல்யாணசுந்தர முதலியார்

From Tamil Wiki
Revision as of 10:49, 8 March 2024 by Madhusaml (talk | contribs)
திரு.வி. கல்யாணசுந்தர முதலியார்

திரு.வி.கல்யாணசுந்தர முதலியார் (திரு.வி.க) (திருவாரூர் விருத்தாசலம் கலியாணசுந்தரம்) (ஆகஸ்ட் 26, 1883 - செப்டம்பர் 17, 1953) தமிழறிஞர், மேடைப் பேச்சாளர்.

பிறப்பு, கல்வி

திரு.வி.கல்யாணசுந்தர முதலியார் காஞ்சிபுரம் மாவட்டம் துள்ளம்(தற்போது தண்டலம்) சிற்றூரில் விருத்தாசல முதலியார், சின்னம்மாள் இணையருக்கு ஆறாவது மகனாக ஆகஸ்ட் 26, 1883-ல் பிறந்தார். தந்தை இலக்கியப் பயிற்சியும் இசைப்பயிற்சியும் உடையவர். ஆசிரியராகப் பணியாற்றினார். வணிகத்தில் ஈடுபட்டார். ஆசிரியராகத் திருவாரூரில் பணி செய்தபோது கலியாணசுந்தரமும் அங்கேயே வளர்ந்தார். இவர் பச்சையம்மாள் என்பவரை மணந்து மூன்று ஆண்களையும் ஒரு பெண் குழந்தையையும் பெற்றார். பச்சையம்மாள் இறந்த பின் சின்னம்மாளை மணந்தார். சின்னம்மாளுக்கு நான்கு ஆண் மக்கள், நான்கு பெண் மக்கள்.

தொடக்கத்தில் தந்தையிடம் கல்வி பயின்றார். பின்னர் சென்னையில் ராயப்பேட்டையில் தங்கி ஆரியன் தொடக்கப் பள்ளியில் பயின்றார். 1894-ல் வெஸ்லி பள்ளியில் நான்காம் வகுப்பில் சேர்ந்தார். அங்கு அவருக்கு ஒரு காலும் ஒரு கையும் முடங்கியது. இதனால் பள்ளிப் படிப்பு சிறிது காலம் தடைப்பட்டது. 1904-ஆம் ஆண்டில் ஆறாம் படிவத் தேர்வு எழுத முடியாமல் போனது. அதன்பின் பள்ளிப்படிப்பு நின்றது.

உவெசுலி பள்ளியில் ஆசிரியராக இருந்த யாழ்ப்பாணம் நா. கதிரைவேற்பிள்ளை என்ற தமிழறிஞரிடம் நட்பு ஏற்பட்டது. அவரிடம் தமிழ் பயிலத் தொடங்கினார். அவரிடம் தமிழ் நூல்களை முறையாகப் பயின்றார். கதிரவேற்பிள்ளை மறைந்த பின் மயிலை தணிகாசல முதலியாரிடம் தமிழ் மற்றும் சைவ நூல்களைப் பாடம் கேட்டார்.

தனிவாழ்க்கை

திரு.வி.கல்யாணசுந்தர முதலியார் கமலாம்பிகையை 1912-ல் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள். 1918-ல் மனைவி, பிள்ளைகளை இழந்தார்.

ஆசிரியப் பணி

திரு.வி.கல்யாணசுந்தர முதலியார் 1906-ல் ஸ்பென்சர் தொழிலகம் என்ற ஆங்கில நிறுவனத்தில் கணக்கராகச் சேர்ந்தார். விடுதலைப் போராட்டத்தில் ஈடுபாடு கொண்டதால் அவ்வேலையிலிருந்து நீங்கினார். 1909-ல் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள வெஸ்லியன் பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்து ஆறு ஆண்டுகள் பணியாற்றினார். இராயப்பேட்டை வெஸ்லி கல்லூரியில் தலைமை ஆசிரியராகச் சேர்ந்தார். நாட்டிற்கு உழைப்பதற்காக அவர் அப்பணியில் இருந்து விலகினார்.

அமைப்புப் பணிகள்

தொழிற்சங்கத்தைத் தோற்றுவித்தார்.

இதழியல்

தேசபக்தன் என்ற பத்திரிகையில் இரண்டரை ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றினார். திராவிடன், நவசக்தி போன்ற பத்திரிகைகளில் ஆசிரியராக இருந்தார்.

இலக்கிய வாழ்க்கை

அரசியல், சமுதாயம், சமயம் ஆகிய துறைகளில் எனப் பல துறைகளிலும் ஈடுபாடுகொண்டு பல நூல்களை எழுதினார்.

நூல் பட்டியல்

வாழ்க்கை வரலாறு

யாழ்ப்பாணம் தந்த சிவஞானதீபம், நா.கதிரைவேற்பிள்ளை சரித்திரம் - 1908 மனித வாழ்க்கையும் காந்தியடிகளும் - 1921 பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத்துணை - 1927 நாயன்மார் வரலாறு - 1937 முடியா? காதலா? சீர்திருத்தமா? - 1938 உள்ளொளி - 1942 திரு.வி.க வாழ்க்கைக் குறிப்புகள் 1 - 1944 திரு.வி.க வாழ்க்கைக் குறிப்புகள் 2 - 1944 உரை நூல்கள் பெரிய புராணம் குறிப்புரையும் வசனமும் - 1907 பட்டினத்துப்பிள்ளையார் திருப்பாடற்றிரட்டும் பத்திரகிரியார் புலம்பலும் விருத்தியுரையும் - 1923 காரைக்கால் அம்மையார் திருமுறை - குறிப்புரை - 1941 திருக்குறள் - விரிவுரை (பாயிரம்) - 1939 திருக்குறள் - விரிவுரை (இல்லறவியல்) 1941

அரசியல்

தேசபக்தாமிர்தம் (1919) என் கடன் பணி செய்து கிடப்பதே (1921) தமிழ்நாட்டுச் செல்வம் (1924) தமிழ்த்தென்றல் (அல்லது) தலைமைப்பொழிவு (1928) சீர்திருத்தம் (அல்லது) இளமை விருந்து (1930) தமிழ்ச்சோலை கட்டுரைத் திரட்டு 1 (1935) தமிழ்ச்சோலை கட்டுரைத் திரட்டு 2 (1935) இந்தியாவும் விடுதலையும் (1940) தமிழ்க்கலை (1953)

சமயம்

சைவசமய சாரம் - 1921 நாயன்மார் திறம் - 1922 தமிழ்நாடும் நம்மாழ்வாரும் - 1923 சைவத்தின் சமசரசம் - 1925 முருகன் அல்லது அழகு - 1925 கடவுட் காட்சியும் தாயுமானவரும் - 1928 இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம் - 1929 தமிழ் நூல்களில் பௌத்தம் - 1929 சைவத் திறவு - 1929 நினைப்பவர் மனம் - 1930 இமயமலை (அல்லது) தியானம் - 1931 சமரச சன்மார்க்க போதமும் திறவும் - 1933 சமரச தீபம் - 1934 சித்தமார்க்கம் - 1935 ஆலமும் அமுதமும் - 1944 பரம்பொருள் (அல்லது) வாழ்க்கை வழி - 1949

பாடல்கள்

முருகன் அருள் வேட்டல் - 1932 திருமால் அருள் வேட்டல் - 1938 பொதுமை வேட்டல் - 1942 கிறிஸ்துவின் அருள் வேட்டல் - 1945 புதுமை வேட்டல் - 1945 சிவனருள் வேட்டல் - 1947 கிறிஸ்து மொழிக்குறள் - 1948 இருளில் ஒளி - 1950 இருமையும் ஒருமையும் - 1950 அருகன் அருகே (அல்லது) விடுதலை வழி - 1951 பொருளும் அருளும் (அல்லது) மார்க்ஸியமும் காந்தியமும் - 1951 சித்தந் திருத்தல் (அல்லது) செத்துப் பிறத்தல் - 1951 முதுமை உளறல் - 1951 வளர்ச்சியும் வாழ்வும் (அல்லது) படுக்கைப் பிதற்றல் - 1953 இன்பவாழ்வு - 1925

பயண இலக்கியம்

இலங்கைச் செலவு (இலங்கைப் பயணம் குறித்த தொகுப்பு நூல்) பொதுவுடைமை தொடர்பான கட்டுரைகள் தொழிலாளர் லட்சியங்களைப் பற்றி ஓர் இந்திய ஒர்க் ஷாப்பிலிருந்து கர்னாடிக் மில் வேலைநிறுத்தம் தொழிலாளர் நிலையும் சென்னை சர்க்காரும் இந்திய தொழிலாளரின் சர்வதேச நோக்கு ஆம்ஸ்டர்டாம் சர்வதேச ஸ்தாபனமும், மாஸ்கோ சர்வதேச ஸ்தாபனமும் பெரம்பூர் பட்டாளத்தில் போலீஸ் அட்டூழியம் வேலைநிறுத்த உரிமை - கில்பர்ட் ஸ்லேடருக்குப் பதில் மில் வட்டாரத்துக் கலகங்கள்

உசாத்துணை


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.