under review

திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(Corrected error in line feed character)
 
Line 3: Line 3:
== நூல் பற்றி ==
== நூல் பற்றி ==
பெரும்பெற்றப்புலியூர் நம்பியால் எழுதப்பட்ட சைவ சமய நூல். இதன் வேறு பெயர் திருவாலவாயுடையார் திருவிளையாடல். இந்நூல் திருவிளையாடல் புராணத்துக்கு முன்பு தோன்றியது. பாண்டிய மன்னனின் வேண்டுகோளுக்கிணங்க பொ.யு. 1228-ல் ஆயிரத்தி எழுநூற்றி ஐம்பத்தி மூன்று செய்யுடகளாக இயற்றப்பட்டது.  இந்நூலை இயற்றி பாண்டிய அரசனிடம் இறையில் நிலம், பல்லக்கு பெற்றார். இந்நூலை 1906-ல் உ.வே.சாமிநாதன் ஐயர் அச்சில் வெளியிட்டார். 1927, 1972-ல் அடுத்தடுத்த பதிப்புகள் வந்தன.

இந்நூல் உத்தரமகாபுராணம் எனும் வடமொழி நூலான சாரசமுச்சயம் எனும் பிரிவிலிருந்து மொழிபெயர்த்து எழுதப்பட்டது. இதனை ஓதரிய எனும் செய்யுளின் மூலமாகவும், "அம்பதுமத்தார்" எனும் நூற்சிறப்பு பாயிரச் செய்யுள் மூலம் அறிந்து கொண்டதாக உ.வே.சா குறிப்படுள்ளார்.

== பாடல் நடை ==
== பாடல் நடை ==

Latest revision as of 20:14, 12 July 2023

திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம்

திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம் (பொ.யு. 1228) சைவ சமய நூல். தேவாரம் பெற்ற தலங்களுள் முதன்மையானதான திருவாலவா தலத்தை மையமாகக் கொண்டு பாடப்பட்ட புராணம்.

நூல் பற்றி

பெரும்பெற்றப்புலியூர் நம்பியால் எழுதப்பட்ட சைவ சமய நூல். இதன் வேறு பெயர் திருவாலவாயுடையார் திருவிளையாடல். இந்நூல் திருவிளையாடல் புராணத்துக்கு முன்பு தோன்றியது. பாண்டிய மன்னனின் வேண்டுகோளுக்கிணங்க பொ.யு. 1228-ல் ஆயிரத்தி எழுநூற்றி ஐம்பத்தி மூன்று செய்யுடகளாக இயற்றப்பட்டது. இந்நூலை இயற்றி பாண்டிய அரசனிடம் இறையில் நிலம், பல்லக்கு பெற்றார். இந்நூலை 1906-ல் உ.வே.சாமிநாதன் ஐயர் அச்சில் வெளியிட்டார். 1927, 1972-ல் அடுத்தடுத்த பதிப்புகள் வந்தன.

இந்நூல் உத்தரமகாபுராணம் எனும் வடமொழி நூலான சாரசமுச்சயம் எனும் பிரிவிலிருந்து மொழிபெயர்த்து எழுதப்பட்டது. இதனை ஓதரிய எனும் செய்யுளின் மூலமாகவும், "அம்பதுமத்தார்" எனும் நூற்சிறப்பு பாயிரச் செய்யுள் மூலம் அறிந்து கொண்டதாக உ.வே.சா குறிப்படுள்ளார்.

பாடல் நடை

சொக்கனென் றொருகா லோதில்
துயர்கெடும் பகையு மாளும்
சொக்கனென் றொருகா லோதில்
தொலைவிலாச் செல்வம் உண்டாம்
சொக்கனென் றொருகா லோதில்
சுருதி செல் யாண்டுஞ் செல்லும்
சொக்கனென் றொருகா லோதில்
சொர்க்கமும் எளிதா மன்றே

உசாத்துணை

✅Finalised Page