being created

திருவலஞ்சுழி மும்மணிக்கோவை

From Tamil Wiki
Revision as of 10:40, 4 August 2023 by Tamizhkalai (talk | contribs) (Created page with "'''திருவலஞ்சுழி மும்மணிக்கோவை''' பதினோராம் திருமுறையில் இடம் பெற்றுள்ள நூல்களில் ஒன்று. மும்மணிகோவை என்ற சிற்றிலக்கிய வகைமையில் இயற்றப்பட்டது. == ஆசிரியர் == திருவலஞ்சுழி மும்மண...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

திருவலஞ்சுழி மும்மணிக்கோவை பதினோராம் திருமுறையில் இடம் பெற்றுள்ள நூல்களில் ஒன்று. மும்மணிகோவை என்ற சிற்றிலக்கிய வகைமையில் இயற்றப்பட்டது.

ஆசிரியர்

திருவலஞ்சுழி மும்மணிக்கோவையை இயற்றியவர் நக்கீரதேவ நாயனார்.

நூல் அமைப்பு

திருவலஞ்சுழி என்னும் தேவாரப் பாடல்பெற்ற தலத்தில் கோவில் கொண்ட ஈசனைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டது. காவிரி இவ்வூரை வலமாக சுழித்துப் போவதால் திருவலஞ்சுழி எனப் பெயர் பெற்றது. திருவலஞ்சுழி இறைவரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு, அவர் பேரழகில் ஈடுபட்டு, காதல் கொண்டு, காம வருத்தம் உற்ற, தலைவியின் நீங்கா அன்பை வெளிப்படுத்தும் நூல் இது. கவல் வெண்பா கலித்துறை என்னும் மூன்றுவகைச் செய்யுட்களினால் அந்தாதித் தொடையாகப் பாடப்பட்ட பதினைந்து பாடல்களை உடையது.

பாடல் நடை

வணங்குதும்; வாழி; நெஞ்சே! புணர்ந்துடன்

பொருகடல் முகந்து கருமுகிற் கணம்,நற்

படஅர வொடுங்க மின்னிக் குடவரைப்

பொழிந்து கொழித்திழி அருவி குணகடல்

மடுக்குங் காவிரி மடந்தை வார்புனல்

உடுத்த மணிநீர் வலஞ்சுழி

அணிநீர்க் கொன்றை அண்ணல தடியே.

வணங்குவோம் வாழி நெஞ்சே! மேகக்கூட்டமானது கடலுடன் புணர்ந்து அலை பொருதும் கடல் முகந்து, கருமுகிற் கணங்களாகி, நல்ல படம் கொண்ட பாம்புக் கூட்டம் ஒடுங்க மின்னி, மேற்கு மலையில் மழையாகப் பொழியும். அந்த மழை நீர் கொழித்து இறங்கி அருவியாக இழியும். அந்த அருவியானது கிழக்குக் கடல் வந்து சேரும் முன் வார்புனல் உடுத்த காவிரி மடந்தையாகி, மணி நீர் கொண்டு வலம் சுழியில் உறையும் அணிநீர் கொன்றை அண்ணலது அடியை வணங்கிச் செல்லும். அந்த அண்ணலின் அடியை நாமும் வணங்குதும் வாழி நெஞ்சே!

தோழி கூற்று

பெண்கொண் டிருந்து வருந்துங்கொலாம்;பெருமான்திருமால் வண்கொண்ட சோலை வலஞ்சுழி யான்,மதி சூடிநெற்றிக் கண்கொண்ட கோபங் கலந்தன போல்மின்னிக்கார்ப்புனத்துப் பண்கொண்டு வண்டினம் பாடநின் றார்த்தன பன்முகிலே.




🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.