திருவரங்கன் உலா

From Tamil Wiki
Revision as of 14:27, 17 January 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with " = திருவரங்கன் உலா = '''திருவரங்கன் உலா''' ஒரு தமிழ் வரலாற்று கேளிக்கை நாவல். தில்லி சுல்தான் முகம்மது பின் துக்ளக்கின் [உலூக் கான்] படைகள் திருவரங்கத்தினை கொள்ளையடித்த வரலாற்றுச் ச...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

திருவரங்கன் உலா

திருவரங்கன் உலா ஒரு தமிழ் வரலாற்று கேளிக்கை நாவல். தில்லி சுல்தான் முகம்மது பின் துக்ளக்கின் [உலூக் கான்] படைகள் திருவரங்கத்தினை கொள்ளையடித்த வரலாற்றுச் சம்பவத்தினை அடிப்படையாக் கொண்டு ஸ்ரீவேணுகோபாலன் எழுதியது. இந்வலின் முதல் பாகம் திருவரங்கன் உலா என்றும், இரண்டாம் பாகம் மதுரா விஜயம் என்றும் வெளிவந்துள்ளது. சுல்தானின் படையெடுப்பில் இருந்து ரங்கநாதரின் உற்சவர் சிலையை வைணவர்கள் பல்வேறு இடங்களுக்கு கொண்டு சென்று திருவரங்கத்தை நாயக்கர்கள் மீட்டபின்னர் திரும்ப கொண்டுவந்த வரலாறு இந்நாவலில் பேசப்படுகிறது.

வரலாற்றுப்பின்புலம்

பொயு.1325-1351 தென்னகம் மீது படையெடுத்து வந்த முகம்மதுபின் துக்ளக் திருவரங்கத்தில் உள்ள ரங்கநாதரின் கோவிலை இக்கொள்ளையிட்டார். கோயிலைக் காக்க வைணவ ஆச்சாரியர்களும், மக்களும் ஆலய ஊழியர்களும் போராடினார்கள். சுல்தான் படைகளிடமிருந்து செல்வங்களை காக்க நகைகள், விக்ரகங்கள் போன்றவற்றை கொண்டு சென்று மறைத்தார்கள். உற்சவப் பெருமாளை திருக்கோட்டியூர், காளையார் கோவில், அழகர் மலை என்று பல இடங்களில் பதுக்கி வைத்திருந்து, இறுதியில் திருப்பதியில் பல காலம் பாதுகாப்பாக வைத்துள்ளார்கள். பின் கி.பி. 1371ல் உற்சவர் விக்ரகம் திருவரங்கத்திற்கு கொண்டுவரப்பெற்றது.

காண்க[தொகு]

  • மதுர விஜயம்
  • பொன்னியின் செல்வன்
  • உடையார்

ஆதாரங்கள்[தொகு]

  1. ↑ http://www.tamilvu.org/slet/l4100/l4100pd4.jsp?bookid=74&pno=49