தாகம்

From Tamil Wiki

தாகம் (இதழ்) 1985 யாழ்ப்பாணத்திலிருந்து சித்திரை-வைகாசியில் வெளியான இருமாத இதழ்.

வெளியீடு

1985இல் இலங்கை யாழ்ப்பாணத்திலிருந்து வெளியான இதழ். இருமாத இதழாக வெளியானது.

நோக்கம்

பெண்களின் பிரச்சனைகள், ஈழ விடுதலைப் போராட்டத்தில் அவர்களின் பங்கு, பிரச்சனைகள் பற்றி பேசுவதை நோக்கமாகக் கொண்ட இதழ்.

உள்ளடக்கம்

ஈழ விடுதலைப் போராட்டத்துடன் சம்பந்தப்பட்ட கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், கேள்வி பதில்கள் தாங்கி இந்த இதழ் வெளியானது. போராட்ட உணர்ச்சி ததும்ப இதில் ஆக்கங்கள் வெளியாகின.

பங்களிப்பாளர்கள்

ரங்கா வைதேகி இளங்கோ மாதவி லெனின் தில்லானா நஸீம் ஹிக்மெத் சேதுகா

இலக்கிய இடம்

ஈழ போராட்ட கால மன நிலையைப் பற்றியும், பெண்களின் நிலை பற்றியும் அறிய இவ்விதழ்கள் பயன்படுகின்றன.

இணைப்புகள்

  • தாகம் இதழ்கள்: ஆவணம்: நூலகம்

உசாத்துணை