being created

தலித் இயக்க வரலாறு

From Tamil Wiki
Revision as of 16:56, 23 October 2023 by Ramya (talk | contribs) (Created page with "தலித் இயக்க வரலாறு (பொ.யு. 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி முதல்) தமிழக வரலாற்றில் தலித்துகளின் அரசியல், சமூகவியல் முன்னேற்றம் சார்ந்த முக்கியமான இயக்கம். == வரலாறு == ===== சுதந்திரத்தி...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

தலித் இயக்க வரலாறு (பொ.யு. 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி முதல்) தமிழக வரலாற்றில் தலித்துகளின் அரசியல், சமூகவியல் முன்னேற்றம் சார்ந்த முக்கியமான இயக்கம்.

வரலாறு

சுதந்திரத்திற்கு முன்

அயோத்திதாசர் பொ.யு 1886இல் இந்துக்களில் தீண்டத்தகாதவர்கள் எனப்பட்டவர்கள் இந்துக்கள் அல்லாதவர்கள், அவர்கள் யாவரும் சாதியற்ற திராவிடர்கள் என்னும் கருத்தை முன்வைத்தார். இதனால் திராவிட கருத்தியலின் முன்னோடி என அறியப்பட்டார். தமிழர்கள் ஆதிதிராவிடர்கள், சாதி திராவிடர்கள் என பிரிந்து இருப்பதை உணர்ந்து சாதிபேதமற்ற திராவிட மகாஜன சபை என்ற அமைப்பை 1891-ல் உருவாக்கினார். இரட்டைமலை சீனிவாசன் 1891இல் ”பறையர் மகாஜன சபை” என்ற அமைப்பைத் தோற்றுவித்தார். 1893இல் இது ஆதிதிராவிட மகாஜன சபையாக ஆனது. இதே ஆண்டு 'பறையர்' என்ற பத்திரிக்கையைத் தொடங்கினார். ”ஆதிதிராவிடர் கூட்டமைப்பு”, ”சென்னை மாகாண தாழ்த்தப்பட்டவர் கூட்டமைப்பு” ஆகியவற்றின் தலைவராக இருந்தார்.

சுதந்திரத்திற்குப் பின்

திராவிடக் கட்சிகளின் வருகைகளுக்குப் பின் தனியாக தலித்துகளுக்கான தேவை இல்லாமல் இருந்தது. தி.மு.க, அ.இ.அ.தி.மு.க ஆகிய இரு கட்சிகளிலும் தலித்துகள் இருந்தனர். முற்போக்கு அமைப்புகளுடனும் இருந்தனர். இக்கட்சிகளோடு உறவு, முரணுடனேயே தலித்துகள் பயணம் செய்தனர். தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றத்துக்குத் திராவிடர் இயக்கமே காரணம் என்று சொல்லப்பட்ட கூற்றினை மறுத்து, தி.பெ.கமலநாதன் என்ற தலித் வரலாற்று அறிஞர் 1980-களின் மத்தியில் ஆங்கில நூலினை எழுதினார். அந்நூலின் பின்னிணைப்பில் 1891 முதல் 1935 வரை தலித்துகளால் நடத்தப்பட்ட மாநாடுகள், கூட்டங்கள், தீர்மானங்கள், கல்வி நிலையங்கள் ஆகியவற்றைப் பட்டியலிட்டார்.

1990களில் இந்திய அளவில் தலித் இயக்கம் தீவிரம் அடைந்தது. அது தலித் அரசியல், இலக்கியம், கலை, பண்பாடு என பல தளங்களில் தீவிரமடைந்தது. சோவியத்தின் வீழ்ச்சிக்குப் பின் முற்போக்கு இயக்கங்களும் செயலிழக்கத் தொடங்கின. தமிழகத்தில் சாதியம் சார்ந்த கட்சிகள் பல தனித்தனியாக உருவாகி அவை திராவிட கட்சிகளில் தங்கள் ஆற்றலை நிலை நிறுத்த முற்பட்டனர். தலித்துகளிலிருந்து உருவாகி வந்த படித்த அறிஞர்கள் தலித் மக்களின் தற்கால நிலை, கடந்தகால நிலை ஆகியவற்றை ஆராய்ந்து தொகுத்தனர். இதன்வழி திரவிட இயக்கத்தின் முன்னோடியாக ஈ.வெ.ரா மறுக்கப்பட்டு அயோத்திதாசர் முன்வைக்கப்பட்டார். விடுதலைக்கு முந்தலைய தலித் தலைவர்களின் அமைப்புகள், செயல்பாடுகள், சிந்தனைகள் தொகுக்கப்பட்டு முன்வைக்கப்பட்டன. அம்பேத்கரின் புத்தகங்கள், பிற தலித் இயக்கம் சார்ந்த புத்தகங்கள் முன்வைக்கப்பட்டன. 90-களுக்குப் பின் கவனம் பெற்ற நாட்டார் தெய்வங்கள், நாட்டார் வரலாற்றின் வழி தங்கள் பண்பாடு, கலைகளையும் மீட்டுறுவாக்கம் செய்தனர்.

காலக்கோடு

காலக்கோடு

ஆண்டு இயக்கம் தலைவர்கள்
1891 திராவிட மகாஜன சபை அயோத்திதாசர்
1893 ஆதிதிராவிட மகாஜன சபை ரெட்டைமலை சீனிவாசன்
1990 விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொல். திருமாவளவன் 1996 புதிய தமிழகம் கிருஷ்ணசாமி

தலித் அரசியல் அமைப்புகள்

  • விடுதலைச் சிறுத்தைகள்
  • புதிய தமிழகம்

உசாத்துணை


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.