standardised

தமிழன்பன்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 229: Line 229:
== உசாத்துணை ==
== உசாத்துணை ==


* ஈரோடு தமிழன்பன் கவிதைகள்l
* [https://eluthu.com/kavignar/Erode-Tamilanban.php ஈரோடு தமிழன்பன் கவிதைகள் | Erode Tamilanban Kavithaigal (eluthu.com)]
* [https://www.panippookkal.com/ithazh/archives/2821 கவிஞர் ஈரோடு தமிழன்பன்: பனிப்பூக்கள்]
* [https://www.panippookkal.com/ithazh/archives/2821 கவிஞர் ஈரோடு தமிழன்பன்: பனிப்பூக்கள்]
* [https://web.archive.org/web/20110724024037/http://thatstamil.oneindia.in/art-culture/essays/2006/tamilanban.html ஒன் இந்தியா-தமிழன்பன் சிறப்புப் பேட்டி]
* [https://web.archive.org/web/20110724024037/http://thatstamil.oneindia.in/art-culture/essays/2006/tamilanban.html ஒன் இந்தியா-தமிழன்பன் சிறப்புப் பேட்டி]

Revision as of 11:58, 16 April 2022

தமிழன்பன்

ஈரோடு தமிழன்பன் (செப்டம்பர் 28, 1933) தமிழ்க் கவிஞர். பாரதிதாசன் பரம்பரையினரின் மரபிலக்கியத்தில் இருந்து புதுக்கவிதைக்கு வந்தவர். வானம்பாடி கவிதை இயக்கத்தைச் சேர்ந்தவர்.

பிறப்பு, கல்வி

இயற்பெயர் ந.ஜெகதீசன். ஈரோடு மாவட்டம் சென்னிமலை என்ற ஊரில் வாழ்ந்த செ.இரா.நடராஜன்- வள்ளியம்மாள் இணையரின் மகனாக செப்டம்பர் 28, 1933 அன்று பிறந்தார். தனிப்பாடல் திரட்டு - ஓர் ஆய்வு என்ற ஆராய்ச்சிக்காக முனைவர் (பிஎச்.டி) பட்டம் பெற்றார். சென்னை, புதுக்கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் செய்தி வாசிப்பாளாராக பணியாற்றினார். தமிழ்நாடு அரசின் இயல் இசை நாடக மன்றத்தின் நிர்வாகக் குழு உறுப்பினராகவும், தமிழ்நாடு அரசின் அறிவியல் தமிழ் மன்றத்தின் உறுப்பினராகவும்  பணியாற்றி உள்ளார்.

தமிழன்பன்

இலக்கியவாழ்க்கை

பள்ளி மாணவனாக இருந்தபோதே 'சுய சிந்தனை' என்ற கையெழுத்துப் பிரதியை நடத்தியிருக்கிறார். முதல் கவிதை நூல் 1968-ல் 'கொடி காத்த குமரன்' வில்லுப்பாட்டு. விடிவெள்ளி, மலையமான் என பல புனைபெயர்களில் எழுதியபின் தமிழன்பன் என்னும் பெயர் நிலைத்தது. பாரதிதாசனுடன் பத்தாண்டுகள் (1954 முதல் 1964 வரை) பழகிய அனுபவம் கொண்டவர். 'நெஞ்சின் நிழல்கள்' என்னும் நாவல் பாரதிதாசன் பரிந்துரையால் சென்னை பாரி நிலையத்திலிருந்து 1965-ல் வெளியானது. ஆனால் தொடர்ந்து புனைவுகள் எழுதாமல் கவிஞராகவே நிலைகொண்டார். பாரதிதாசன் பரம்பரை கவிஞராக மரபுக்கவிதைகளை எழுதிவந்தவர் வானம்பாடி கவிதை இயக்கம் தொடர்புக்குப்பின் புதுக்கவிதையில் ஈடுபட்டார். ஹைக்கூ, சென்ரியூ, லிமரிக் என பல்வேறு கவிதைவடிவங்களில் எழுதியிருக்கிறார்.

விருதுகள்

  • தமிழக அரசின் கலைமாமணி விருது (1972)
  • சாகித்ய அக்காதமி விருது வணக்கம் வள்ளுவ என்னும் கவிதைத் தொகுப்பிற்காக (2000)
  • பாஷோ விருது, உலகத்தமிழ் ஹைக்கூ மன்றம் (2020)
தமிழன்பன்

ஆய்வுநூல்கள்,தொகைநூல்கள்

  • ஈரோடு தமிழன்பன் கவிதைப் பரிமாணங்கள் (2003-ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக் கழகம் கவிஞர் தமிழன்பன் கவிதைகள் குறித்து நடத்திய தேசியக் கருத்தரங்கில் படிக்கப்பெற்ற கட்டுரைகளின் முழுத் தொகுப்பு. தொகுப்பாசிரியர்கள் ய.மணிகண்டன், வ. ஜெயதேவன்
  • தமிழன்பன் மகாகவி- தி. அமிர்தகணேசன்.

இலக்கிய இடம்

ஈரோடு தமிழன்பன் திராவிட இயக்கமும் இடதுசாரி இயக்கமும் பொதுவாகக் கொண்டிருக்கும் அரசியல், சமூகவியல் கருத்துக்களை யாப்பற்ற கவிதைவடிவில் நேரடியான மொழியில் முன்வைத்தவர். பாப்லோ நெரூதா, வால்ட் விட்மான் கவிதைகளின் நெகிழ்வான உரையாடல் பாணியை கைக்கொண்டு எழுதப்பட்ட கவிதைகள் மேடைகளில் இருந்து நேரடியாக பொதுவாசகர்களை நோக்கி பேசுபவை.

தமிழன்பன் தொகைநூல்
தமிழன்பன் ஆய்வுநூல்

நூல்கள்

வெளியான ஆண்டு நூலின் பெயர் வகை பதிப்பகம் குறிப்புகள்
தமிழன்பன் கவிதைகள் கவிதை மரபுக்கவிதைத்தொகுதி
நெஞ்சின் நிழல் நாவல்
1970 சிலிர்ப்புகள் கவிதை பாரி நிலையம் மரபுக்கவிதைத்தொகுதி
தீவுகள் கரையேறுகின்றன கவிதை பூம்புகார் பதிப்பகம்
தோணிகள் வருகின்றன கவிதை
1982 அந்த நந்தனை எரித்த நெருப்பின் மிச்சம் கவிதை பூம்புகார் பதிப்பகம்
காலத்திற்கு ஒரு நாள் முந்தி கவிதை பூம்புகார் பதிப்பகம்
1985 Tamil thahu கவிதை பூம்புகார் பதிப்பகம்
ஊமை வெயில் கவிதை பூம்புகார் பதிப்பகம்
குடை ராட்டினம் பாடல் குழந்தைப்பாடல்கள்
சூரியப் பிறைகள் கவிதை ஹைக்கூ கவிதைகள்
1990 என்னைக்கவர்ந்த பெருமானார் (ஸல்) சொற்பொழிவு இசுலாமிய நிறுவனம் ட்ரஸ்ட், சென்னை அக்டோபர் 22, 1989-ல் ஜமாஅத்தே இஸ்லாமி என்னும் அமைப்பின் வேலூர் கிளையில் ஆற்றிய மிலாடிநபி உரை
1990 கண்ணுக்கு வெளியே சில கனாக்கள் கவிதை நர்மதா பதிப்பகம்
1995 என் வீட்டுக்கு எதிரே ஓர் எருக்கஞ் செடி கவிதை பாப்லோ பாரதி பதிப்பகம்
1998 நடை மறந்த நதியும் திசை மாறிய ஓடையும் கவிதை பூம்புகார் பதிப்பகம்
1999 அணைக்கவா என்ற அமெரிக்கா கவிதை பூம்புகார் பதிப்பகம்
1999 உன் வீட்டிற்கு நான் வந்திருந்தேன்.... வால்ட் விட்மன் கவிதை பாப்லோ பாரதி பதிப்பகம்
2000 பாரதிதாசனோடு பத்து ஆண்டுகள் கட்டுரைகள் விழிகள் பதிப்பகம்
2000 வணக்கம் வள்ளுவ! கவிதை பூம்புகார் பதிப்பகம் சாகித்ய அகாடமி விருது
2002 சென்னிமலைக் கிளிளோப்பாத்ராக்கள் கவிதை பாப்லோ பாரதி பதிப்பகம்
2002 வார்த்தைகள் கேட்ட வரம் கவிதை விழிகள் பதிப்பகம்
2002 மதிப்பீடுகள் திறனாய்வு மருதா
2003 இவர்களோடும் இவற்றோடும் கவிதை விழிகள் பதிப்பகம்
2004 கனாக்காணும் வினாக்கள் கவிதை விழிகள் பதிப்பகம்
2004 மின்னல் உறங்கும் போது கவிதை ஸ்ரீ துர்க்கா பதிப்பகம்
2005 கதவைத் தட்டிய பழைய காதலி கவிதை விழிகள் பதிப்பகம்
2005 விடியல் விழுதுகள் கவிதை பூம்புகார் பதிப்பகம்
2005 கவின் குறு நூறு கவிதை பாப்லோ பாரதி பதிப்பகம்
2007 பாப்லோ நெருதா பார்வையில் இந்தியா கட்டுரை பாப்லோ நெருதா ஸ்பானிய-லத்தீன் அமெரிக்க ஆய்வு நிறுவனம்
2008 இடுகுறிப் பெயரில்லை இஸ்லாம் ரஹ்மத் அறக்கட்டளை
2008 ஓலைச்சுவடியும் குறுந்தகடும் கவிதை விடிவெள்ளி வெளியீடு
2008 சொல்ல வந்தது.... கவிதை முத்தமிழ்ப் பதிப்பகம்

உசாத்துணை


⨮ Standardised


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.