தனுஷ்கோடி ராமசாமி

From Tamil Wiki
Revision as of 13:49, 1 April 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "தனுஷ்கோடி ராமசாமி ( ) தமிழ் எழுத்தாளர். இடதுசாரிப்பார்வை கொண்டவர்.இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் இலக்கிய அமைப்பான தமிழ்நாடு கலையிலக்கியப் பெருமன்றத்துடன் இணைந்து செயல்பட...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

தனுஷ்கோடி ராமசாமி ( ) தமிழ் எழுத்தாளர். இடதுசாரிப்பார்வை கொண்டவர்.இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் இலக்கிய அமைப்பான தமிழ்நாடு கலையிலக்கியப் பெருமன்றத்துடன் இணைந்து செயல்பட்டவர். ஆசிரியர்

பிறப்பு, கல்வி

தனுஷ்கோடி ராமசாமி விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கலிங்கல் மேட்டுப்பட்டி என்னும் ஊரில் 5-மே-1944ல் சக்கணத்தேவருக்கும் மாயக்காளுக்கும் பிறந்தார். ஆசிரியராகப் பணியாற்றிய சக்கணத்தேவருக்கு மாயக்காள், மீனம்மாள் என இரு மனைவிகள். மாயக்காளுக்கு தனுஷ்கோடி ராமசாமி, கணபதி, தர்மலிங்கம், லோகமுத்துக்கிருஷ்ணன் என்னுன் நான்கு ஆண்களும் தனலட்சுமி, மரகதம் என இரு பெண்களும். ஆசிரியையாக பணியாற்றிய மீனம்மாளுக்கு நவநீத கிருஷ்ணன், திருஞானசம்பந்தமூர்த்தி என இரு ஆண்களும் ருக்மிணி என ஒரு பெண்ணும். சக்கணத்தேவர் சிற்றூரில் செல்வாக்காக இருந்தார்.

தனுஷ்கோடி ராமசாமி சாத்தூர் ஆரியவைசிய உயர்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வியை முடித்து 1961ல் மதுரை தியாகராசர் கல்லூரில் புகுமுக வகுப்பில் சேர்ந்தார். தேர்வில் அவர் வெற்றிபெறவில்லை. சக்கணத்தேவர் அவ்வாண்டு மறைந்ததனால் அவரால் கல்வியை தொடரமுடியவில்லை. சாத்தூரில் இருந்த புனித தனிஸ்லாஸ் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து பயின்றார். 1964ல் பயிற்சியை நிறைவுசெய்தார்

தனிவாழ்க்கை


அரசியல்

தனுஷ்கோடி ராமசாமியின் அரசியல் பார்வையை உருவாக்கியவர் இருவர். ஆசிரியர் பயிற்சிக்கல்லூரியில் அவருக்கு கற்பித்த அருட்தந்தை பீட்டர் இராயப்பன். இடதுசாரிப்பார்வை கொண்ட இறையியலாளர் அவர்.