under review

தங்கை நேசன்

From Tamil Wiki
Revision as of 09:13, 24 February 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

தங்கை நேசன் (1876) சிங்கப்பூரில் இருந்து வெளிவந்த இஸ்லாமிய இதழ்.

வெளியீடு

தங்கை நேசன் என்ற இதழை மகுதூம் சாயபு 1875-ம் ஆண்டிற்குப் பின்னர் வெளியிட்டுள்ளார். இதற்கான சான்று அவர் நடத்தியுள்ள சிங்கை நேசன் இதழில் உள்ளது. இவ்விதழ் எவ்வளவு காலம் வந்தது, எப்போது வந்தது, உள்ளடக்கம் என்ன, எத்தனை பக்கம் என்ற ஆதாரங்கள் கிடைக்கவில்லை.

விவாதம்

ஈ. டபல்யூ. பிர்ஷ் என்னும் ஆங்கிலேயர் The Vernacular Press in the Straits என்னும் கட்டுரையை 1879-ம் ஆண்டு எழுதியுள்ளார். இக்கட்டுரையில் அவர் இக்கால கட்டத்தில் சிங்கப்பூரில் இருந்த அச்சகங்கள் குறித்துச் சில கருத்துகளைத் தெரிவித்து உள்ளார். அப்போது அந்த அச்சகங்கள் அச்சிட்டு உள்ள பத்திரிகைகளைப் பற்றியும் சில கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஜாவி பிராணக்கான் என்னும் பெயரிய நிறுவனம் ஜாவி பிராணக்கான், தங்கை சினாகென் என்னும் இரு பத்திரிகைகளை வெளியிட்டுள்ள செய்தியைக் குறிப்பிட்டுள்ளார். அவர், தங்கை சினாகென் – தங்கை நேசன் என்ற தமிழ்ப் பத்திரிகை 1876-ம் ஆண்டு முதல் மாதத்திற்கு இரு முறை வந்துள்ளது, ஏறக்குறைய இரண்டாண்டுகள் வந்திருக்கிறது, 150 படிகள் விற்பனையாயின எனக் கூறியுள்ளார். ஆனால் அவர் இந்த இதழை பார்த்து எழுதவில்லை, இதன் காலக்கணிப்பு பிழையானது என்று ஆய்வாளர் கருதுகிறார்கள்[1]

அடிக்குறிப்புகள்


✅Finalised Page