being created

தகடூர் தமிழ்க்கதிர்: Difference between revisions

From Tamil Wiki
(Page Created: Para Added: Images Added)
 
Line 13: Line 13:

இலங்கை, மலேசியா போன்ற நாடுகளில் வெளியான ஆய்வுத்தொகுப்பு நூல்களில் தகடூர் தமிழ்க்கதிரின் கட்டுரைகள் இடம்பெற்றன. ஐம்பதிற்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதினார். ஆய்வுக் கருத்தரங்க நிகழ்வுகள் சிலவற்றிற்குத் தலைமையேற்று நடத்தினார். தமிழ்க்குயில்கள் உள்ளிட்ட சில நூல்களைத் தொகுத்து வெளியிட்டார்.

====== நாட்டுப்புற ஆய்வு ======
தகடூர் தமிழ்க்கதிர், ‘வளரும் தமிழ் உலகம்’ மாத இதழில் தகடூர் நாட்டுப்புறப் பாடல்கள், தகடூர் வட்டாரப் பழமொழிகள், தகடூர் வட்டார விடுகதைகள், தகடூர் வட்டார நாட்டுப்புற கதைகள் ஆகியவற்றைத் தொடராக வெளியிட்டார்.

Revision as of 23:58, 17 March 2024

தகடூர் தமிழ்க்கதிர்

தகடூர் தமிழ்க்கதிர் (தி.மாதவன்) (பிறப்பு: பிப்ரவரி 16, 1962) கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், நாடக ஆசிரியர், சொற்பொழிவாளர், நாட்டுப்புற இலக்கிய ஆய்வாளர். பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். சித்த மருத்துவராகச் செயல்பட்டார். பொதுவாசிப்புக்குரிய சிறுகதைகளையும், நாடகங்களையும் எழுதினார். நாட்டுப்புற இலக்கியம் சார்ந்த நூல்களைத் தொகுத்து வெளியிட்டார்.

பிறப்பு, கல்வி

தி.மாதவன் என்னும் இயற்பெயரை உடைய தகடூர் தமிழ்க்கதிர், தருமபுரி மாவட்டத்தில் உள்ள கம்பைநல்லூரில், பிப்ரவரி 16, 1962 அன்று, திருப்பதி – பூங்காவனம் இணையருக்குப் பிறந்தார். கம்பைநல்லூரில் ஆரம்பக் கல்வி, உயர்நிலைக் கல்வி கற்றார். பள்ளிக் கல்வியை முடித்த பின் ஆசிரியர் பயிற்சி பெற்றார்.

தனி வாழ்க்கை

தகடூர் தமிழ்க்கதிர், பாவக்கல் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். மணமானவர்.

தகடூர் தமிழ்க்கதிர் - சுரதா

இலக்கிய வாழ்க்கை

தகடூர் தமிழ்க்கதிர், கௌரன் என்ற நண்பர் மூலம் இலக்கிய ஆர்வம் பெற்றார். பள்ளி ஆசிரியர் பாவலர் மணிவேலன் மூலம் மரபுப் பாக்களை முறைப்படி எழுதக் கற்றார். கடத்தூர் புலவர் நெடுமிடல், மாதவன் என்ற இயற்பெயரை தமிழ்க்கதிர் என்று மாற்றினார், அதனுடன் ‘தகடூர்’ என்ற முன்னொட்டை தரங்கை பன்னீர்ச் செல்வம் இணைத்தார். ’தகடூர் தமிழ்க்கதிர்’ என்ற புனை பெயரில் எழுதினார். ’தென்பெண்ணை’ என்னும் முதல் கவிதை, 1979-ல், ஈரோட்டில் இருந்து வெளிவந்த ’பூங்கோதை’ இதழில் வெளியானது. தொடர்ந்து பல கவிதைகளையும், ஆய்வுக் கட்டுரைகளையும் இலக்கியச் சிற்றிதழ்களில் எழுதினார். 40-க்கும் மேற்பட்ட இதழ்களில் தகடூர் தமிழ்க்கதிரின் கவிதைகள் வெளியாகின.

இலங்கை, மலேசியா போன்ற நாடுகளில் வெளியான ஆய்வுத்தொகுப்பு நூல்களில் தகடூர் தமிழ்க்கதிரின் கட்டுரைகள் இடம்பெற்றன. ஐம்பதிற்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதினார். ஆய்வுக் கருத்தரங்க நிகழ்வுகள் சிலவற்றிற்குத் தலைமையேற்று நடத்தினார். தமிழ்க்குயில்கள் உள்ளிட்ட சில நூல்களைத் தொகுத்து வெளியிட்டார்.

நாட்டுப்புற ஆய்வு

தகடூர் தமிழ்க்கதிர், ‘வளரும் தமிழ் உலகம்’ மாத இதழில் தகடூர் நாட்டுப்புறப் பாடல்கள், தகடூர் வட்டாரப் பழமொழிகள், தகடூர் வட்டார விடுகதைகள், தகடூர் வட்டார நாட்டுப்புற கதைகள் ஆகியவற்றைத் தொடராக வெளியிட்டார்.

🔏Being Created

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.