first review completed

டி.வி. சாம்பசிவம் பிள்ளை: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 37: Line 37:
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* [https://ta.xn----7sbiewaowdbfdjyt.pp.ua/147301/1/%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88.html டி.வி. சாம்பசிவம் பிள்ளை | ta.xn----7sbiewaowdbfdjyt.pp.ua]
* [https://ta.xn----7sbiewaowdbfdjyt.pp.ua/147301/1/%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88.html டி.வி. சாம்பசிவம் பிள்ளை | ta.xn----7sbiewaowdbfdjyt.pp.ua]
{{Standardised}}
{{first review completed}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 13:13, 23 April 2022

டி.வி.சாம்பசிவம் பிள்ளை (நன்றி தினமணி)

டி.வி. சாம்பசிவம் பிள்ளை (செப்டம்பர் 19, 1 880 -நவம்பர் 12, 1953) தமிழின் முதல் மருத்துவ அகராதியை வெளியிட்டவர்.

பிறப்பு, கல்வி

கர்நாடகா மாநிலம், பெங்களூரில் வில்வையா மன்னையாருக்கும், மனோண்மணி அம்மாளுக்கும் மகனாக செப்டம்பர் 19, 1880-ல் பிறந்தார். டி.வி. என்ற ஆங்கில முதலெழுத்துக்கள் தஞ்சாவூரையும், வில்வையா மன்னையார் என்ற அவரது தந்தையின் பெயரையும் குறிக்கின்றன. பிளேக் தொற்றுநோயின் காரணமாக, அவரின் குடும்பத்தினர் பிற்பாடு, பெங்களூரில் உள்ள தங்கள் பூர்வீகக் கிராமத்திற்கே குடியேறினர். சாம்பசிவம் பிள்ளை அவர்கள் பெங்களூரில் தனது படிப்பை முடித்தார்.

தனிவாழ்க்கை

டி.வி. சாம்பசிவம் பிள்ளை

1903-ல் துரைக் கண்ணு அம்மாளை மணமுடித்தார். அவர்களுக்கு ஐந்து குழந்தைகள். பல்வேறு மருத்துவக் காரணங்களால் குழந்தைகள் அனைவரும் இறந்தனர். 1914-ல் துரைக்கண்ணு அம்மாளும் காலராவின் காரணமாக இயற்கை எய்தினார். 1916-ல் அம்மணி அம்மாளை இரண்டாம் மணம் புரிந்தார். அவரும் மகப்பேற்றின் போது எதிர்பாராத விதமாக மரணமடைந்ததால் உளச்சோர்வுக்கு ஆளானார். அதிலிருந்து விடுபட, தன்னை முழுவதுமாக சித்த மருத்துவத்திற்காக அர்ப்பணித்தார்.

இவர் காவல்துறையில், மதராஸ் காவல் நிலையத்தில், எழுத்தராய்ப் பணி தொடங்கி காவல்துறை ஆய்வாளராய்ப் பணி ஓய்வு பெற்றவர்.

டி.வி.சாம்பசிவம் பிள்ளை அகராதி

இலக்கிய வாழ்க்கை

ஆங்கிலத்தில், சித்த மருத்துவம் சார்ந்த படைப்புகளின் தட்டுப்பாட்டை உணர்ந்தவர், மருத்துவத்திற்கான, தமிழ் - ஆங்கில அகராதியை உருவாக்கினார். தமது 16 ஆண்டுகால உழைப்பையும், சொந்த வருவாய், சேமிப்பையும் சித்த மருத்துவ அகராதியினை உருவாக்குவதில் செலவழித்துள்ளார். 1938-ல் அகராதியின் இரண்டு பாகங்களை வெளியிட்டார். மூன்றாம் பாகத்தை பதிப்பித்து வெளியிட தமிழக அரசும் பகுதியளவு உதவியது. நான்கு மற்றும் ஐந்தாம் பாகங்கள் 1977- மற்றும் 1978-ஆம் ஆண்டுகளில், ஜி. டி. நாயுடு மற்றும் அவரது மகன் ஜி.டி.என். கோபால் அவர்களால் முறையே பதிப்பிக்கப்பட்டு வெளியிடப்பட்டது.

இவர் எழுதிய Tamil English Dictionary of Medicine, Chemistry and Allied Sciences Based on Indian Medical Science என்ற அகராதி இவர் இறப்புக்குப் பின்னர் 6537 பக்கங்கள் உடைய தொகுதியாய் வெளியானது. இதில் 80,000 சொற்கள் இடம்பெற்றுள்ளன. தமிழ் வார்த்தைக்கு ஈடான, ஆங்கில, இலத்தின் வார்த்தைகள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், சிறுகுறிப்புகளும் தேவைப்படும் இடங்களில், விளக்கவுரைகளும் இடம்பெற்றுள்ளன. இந்த படைப்பில், சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள தாவர, சங்கம, தாது, உலோகப் பொருட்களைப் பற்றிய உயர்ந்தக் குறிப்புகள் அடங்கியுள்ளன. 1968-ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டில், The greatness of siddha medicine என, இப்படைப்பு மறுபெயரிடப்பட்டு, வெளியிடப்பட்டது.

சாம்பசிவம் பிள்ளை அஞ்சல் தலை

விருதுகள்

  • தமிழக அரசு 1949-ல் 5000/- ரூபாய் நிதியுதவி வழங்கி, இவரது ஆராய்ச்சிக்கு உதவியது.
  • மதராஸ் பல்கலைக் கழகமும், மைசூர் பல்கலைக்கழகமும் இவரின் பணியை பாராட்டும் விதமாக, ரூபாய் 5000/- தொகையை வழங்கி கௌரவித்தது.
  • ஆகஸ்ட் 30, 2019 அன்று இந்திய அரசு இவரை கௌரவிக்கும் வகையில், பன்னிரண்டு இந்திய மருத்துவ மேதைகளின் வரிசையில் இவருக்கும் 5 ரூபாய் மதிப்புள்ள அஞ்சல் தலையை வெளியிட்டது.
  • CCRS அமைப்பில் இருந்து SEARCHi என்னும் செயலி, இவரது அகராதியின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.

மறைவு

நவம்பர் 12, 1953-ல் தனது 73-வது வயதில் சாம்பசிவம் பிள்ளை மறைந்தார்.

நூல் பட்டியல்

  • Tamil English Dictionary of Medicine, Chemistry and Allied Sciences Based on Indian Medical Science

இதர இணைப்புகள்

உசாத்துணை


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.