under review

டி.பி. ரத்தினம்

From Tamil Wiki
Revision as of 15:36, 29 December 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Moved categories to bottom of article)
டி.பி. ரத்தினம் (நன்றி: சு. முருகானந்தம்)

டி.பி. ரத்தினம் தமிழ் பதிப்பாளர், அரசியல்வாதி, செயல்பாட்டாளர். திருச்சி பிரஸ் என்ற அச்சகத்தை நிறுவி பல நூல்களை வெளியிட்டார்.

வாழ்க்கைக் குறிப்பு

டி.பி. ரத்தினம் திருச்சி உறையூரைச் சேர்ந்தவர்.

அரசியல் வாழ்க்கை

தேசிய இயக்கத்திலிருந்து கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு வந்து பணியாற்றியவர்களில் முக்கியமானவர். கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் மாவட்ட அமைப்புக் குழுவில் செயல்பட்டவர். இவர் நடத்தி வந்த உடற்பயிற்சி கூடம் அப்போதைய கம்யூனிஸ்ட் அலுவலகமாக செயல்பட்டு வந்தது. திருச்சி நகராட்சிக்கு மூன்று முறை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டு தேவ்தானம், சிந்தாமணி பகுதிகளில் செயல் பணிகளில் ஈடுபட்டார். 1942-ல் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

செயல்பாடுகள்

சாவித்ரி வித்யாசாலை கல்வி நிறுவனத்தின் வளர்ச்சியில் பெரும்பங்கு வகித்தார். திருச்சி கீழ்புலிவார்டு ரோட்டிலுள்ள லூர்துசாமி பிள்ளை பூங்கா இவரின் முயற்சியில் உருவாக்கப்பட்டது.

பதிப்பாளர்

திருச்சி பிரஸ் என்ற அச்சகத்தை நிறுவி பல நூல்களை அச்சிட்டார்.

உசாத்துணை

  • நடந்தாய் வாழி திருச்சிராப்பள்ளி: சு. முருகானந்தம்


✅Finalised Page