டி.எஸ். துரைசாமி

From Tamil Wiki
Revision as of 11:26, 14 January 2022 by Santhosh (talk | contribs) (Created page with "__FORCETOC__ தமிழின் ஆரம்பகால நாவலாசிரியர்களில் ஒருவர். 1926ல் கருங்குயில் குன்றத்துக்கொலை என்னும் நாவலை எழுதினார். இது தமிழின் வணிக கேளிக்கை எழுத்தின் முன்னோடி நாவல்களில் ஒன்றாக கருத...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

தமிழின் ஆரம்பகால நாவலாசிரியர்களில் ஒருவர். 1926ல் கருங்குயில் குன்றத்துக்கொலை என்னும் நாவலை எழுதினார். இது தமிழின் வணிக கேளிக்கை எழுத்தின் முன்னோடி நாவல்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

வாழ்க்கை

1869 ல் கும்பகோணத்தில் பிறந்த டி.எஸ்.துரைசாமி சிறிதுகாலம் ஆங்கில அரசின்கீழ் உப்பள ஆய்வாளராக வேலைபார்த்துவிட்டு அதை உதறிவிட்டார். ஆங்கிலக் கல்விபெற்றவரானதனால் ஆங்கில புனைகதைகளை ஒட்டி தமிழில் புனைகதைகள் எழுதும் ஆர்வம் கொண்டார்.

சர் வால்டர் ஸ்காட் எழுதிய நாவல் ஒன்றை தழுவி இந்த ‘கருங்குயில் குன்றத்துக்கொலை’ என்ற நாவலை எழுதி பாண்டிச்சேரி மறைமாவட்டத்திலிருந்து வெளிவந்த ‘சர்வவியாபி’ என்ற இதழில் வெளியிட்டார். 1925 ல் இந்நாவல் நூலாக வெளிவந்தது. 1926ல் இரண்டாம் பகுதி வெளிவந்து பின்னர் ஒரே நூலாக பிரசுரிக்கப்பட்டது.

இலக்கியப் பங்களிப்பு

டி.எஸ்.துரைசாமி தமிழில் ஆங்கில நாவல்களை தழுவி வணிகக்கேளிக்கை நாவல்கள் உருவாவதற்கான வழியை தொடங்கியவர்களில் ஒருவர். கருங்குயில் குன்றத்துக் கொலை முன்னுதாரணமாக அமைந்த நாவல்.