second review completed

டாக்டர் விகடன்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 29: Line 29:
* [https://www.vikatan.com/doctorvikatan டாக்டர் விகடன் இணையதளம்]  
* [https://www.vikatan.com/doctorvikatan டாக்டர் விகடன் இணையதளம்]  
* [https://www.facebook.com/DoctorVikatan/?locale=ta_IN டாக்டர் விகடன் ஃபேஸ்புக் பக்கம்]  
* [https://www.facebook.com/DoctorVikatan/?locale=ta_IN டாக்டர் விகடன் ஃபேஸ்புக் பக்கம்]  
{{First review completed}}
{{Second review completed}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 02:07, 6 May 2024

டாக்டர் விகடன் செப்டம்பர் 16, 2019 இதழ் (இறுதியாக வெளிவந்த அச்சிதழ்)
டாக்டர் விகடன் டிஜிடல் வார இதழ், மார்ச் 30, 2024

டாக்டர் விகடன் (2012) ஆனந்த விகடன் குழுமத்திலிருந்து வெளியான மாதமிருமுறை இதழ். மருத்துவம் சார்ந்த பல செய்திகளை விரிவான தகவல்களுடன் வெளியிட்டது. செப்டம்பர் 2019-ல் அச்சிதழ் நின்று போனது. ஜனவரி 2024 முதல் இணைய வார இதழாக வெளிவருகிறது.

வெளியீடு

டாக்டர் விகடன் மருத்துவம் சார்ந்த செய்திகளை, நிகழ்வுகளை, மருத்துவர்களின் அறிவுரைகளை வெளியிடுவதற்காக ஜனவரி 2012-ல் ஆனந்த விகடன் குழுமத்தினரால் தொடங்கப்பட்டது. மாதமிருமுறை இதழாக வெளிவந்தது. தொடக்க காலத்தில் இதழின் விலை 15 ருபாய் ஆக இருந்தது. பிற்காலத்தில் தனிப் பிரதி இதழின் விலை 25 ரூபாய் (தமிழ்நாடு, புதுச்சேரியில் மட்டும்) பிற மாநிலங்களில் 30 ரூபாய் என்று விற்பனை செய்யப்பட்டது. ஒவ்வொரு அச்சிதழோடும் மருத்துவம் சார்ந்த குறிப்புகள் கொண்ட இணைப்பிதழ் அளிக்கப்பட்டது.

நோக்கம்

இதழின் நோக்கமாக, ஜனவரி 2012 முதல் இதழில், ”ஆங்கில மருத்துவம், ஆயுர்வேதம், சித்தா, யுனானி, கை வைத்தியம் என எல்லா விதமான கலவையாக டாக்டர் விகடன் உங்களைப் பரவசப்படுத்தும்; பாதுகாக்கும்!” என்றும், “வரும் முன் காப்போம் என நோய்கள் நம்மையும் நம் குடும்பத்தினரையும் அண்டாமல் தடுக்கும் குடும்ப டாக்டராக டாக்டர் விகடன் நிச்சயம் விளங்கும். தலைசிறந்த மருத்துவர்கள், நிபுணர்களின் பங்களிப்புகளோடு எல்லோரும் இன்புற்றிருக்க விகடன் டாக்டர் இனி மாதம் இருமுறை உங்கள் இல்லம் வருவார்.” என்ற குறிப்பு இடம்பெற்றது.

உள்ளடக்கம்

'நலம், நலம் அறிய ஆவல்' என்ற முகப்பு வாசகத்துடன் டாக்டர் விகடன் இதழ் வெளியானது. 'ஹெல்த் இன்ஷூரன்ஸ்: என்ன பாலிசி எடுக்கலாம்?', 'கல்லீரல் காப்போம்', 'கிச்சன் கிளினிக்', 'மாற்று மருத்துவம்', 'மெடிகல் ஷாப்பிங்', 'என்றும் இளமை', 'கன்சல்டிங் ரூம்' போன்ற பகுதிகள் வெளிவந்தன. டாக்டர் கைடன்ஸ், டயட் டைம்ஸ், ஃபிட்னஸ் ஸ்பெஷல், ட்ரீட்மென்ட்ஸ், டீடெயில் டிப்ஸ் போன்ற பகுதிகள் வெளியாகின.

'மூட்டுவலிக்கு டாடா', '101 நோய்களுக்குத் தடா', 'அழகின் ரகசியம் ஆயில் புல்லிங்', 'இயற்கை தரும் இளமை வரம்' போன்ற தலைப்பிலான கட்டுரைகள் வெளியாகின. வாசகர்களின் கேள்விகளுக்கு மருத்துவர்களின் விளக்கமான பதில்கள் இதழ் தோறும் இடம்பெற்றன.

'ஹெல்த் செக்கப் அவசியமா', 'எதற்கெல்லாம் மெடிக்ளைம் கிடைக்கும்', 'மனோபலத்துடன் நோய்களை எதிர்கொள்வது எப்படி?', 'ஹைப்பர் ஆக்டிவ் குழந்தைகளைச் சமாளிப்பது எப்படி?', 'அதிவிரைவு பருவமடைதல் ஏன்?', 'பெண் உடல் அறிவோம்', 'கர்ப்பப் பை புற்றுநோய்', 'வணக்கம் சம்மர் 'போன்ற தலைப்புகளில் சிறப்புக் கட்டுரைகள் வெளியாகின

இதழ் நிறுத்தம்

எட்டு ஆண்டுகள் வெளிவந்த டாக்டர் விகடன் இதழ், நிர்வாகக் காரணங்களால் செப்டெம்பர் 16, 2019 தேதியிட்ட இதழுடன் நின்று போனது.

டாக்டர் விகடன் டிஜிடல் இதழ்

டாக்டர் விகடன் இதழ், ஜனவரி 2024 முதல் டிஜிடல் வார இதழாக, ‘டிரெண்டியான டிஜிட்டல் வார இதழ்’ என்ற முகப்பு வாசகத்துடன் விகடன் இணைய தளத்தில் வெளியானது.

மதிப்பீடு

மருத்துவம் சார்ந்த பல்வேறு கட்டுரைகள், மருத்துவர்களின் பேட்டிகள், அறிவுரைகள், கேள்வி-பதில்கள், சந்தேக விளக்கங்கள், மருந்துகளின் தன்மைகள், நோய்கள் பற்றிய விவரங்கள் எனப் பல்வேறு செய்திகளைத் தாங்கி வந்த தமிழின் குறிப்பிடத்தகுந்த மருத்துவ இதழாக டாக்டர் விகடன் இதழ் மதிப்பிடப்படுகிறது

உசாத்துணை


✔ Second review completed


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.